கணக்கில் வந்த ₹5000! இன்னும் வராதவங்க என்ன பண்ணனும்? மகளிர் உரிமைத் தொகை வாங்க புது ரூட்!
சென்னை: கடந்த வாரம் தமிழகத்தில் உள்ள சுமார் 1.31 கோடி பெண்களின் மொபைலுக்கு ஒரு மெசேஜ் வந்திருக்கும் பாருங்க.. அதுதான் இப்போதைய டாக் ஆஃப் தி ஸ்டேட். முதல்வர் ஸ்டாலின் அறிவித்தபடி, மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு மொத்தமாக ₹5,000 வங்கிக் கணக்கில் கிரெடிட் ஆகிவிட்டது.
திடீரென ஏன் இவ்வளவு பெரிய தொகை? இந்தத் திட்டத்திற்கு எப்படி அப்ளை செய்வது? தகுதிகள் என்ன? எல்லாத்தையும் இங்கே சிம்பிளா பார்க்கலாம்.

அந்த ₹5,000 கணக்கு இதுதான்
நிறைய பேருக்கு ஒரு சந்தேகம், மாசம் ₹1,000 தானே தருவாங்க, இது என்ன ₹5,000-னு? இதோ அதுக்கான கணக்கு:
முன்பணம்: பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் ஆகிய 3 மாதங்களுக்கான உரிமைத் தொகை - ₹3,000
கோடைக்கால ஸ்பெஷல்: வெயில் காலத்தை சமாளிக்க அரசு கொடுத்த போனஸ் - ₹2,000
மொத்தம்: உங்கள் கைக்கு வந்தது ₹5,000!
புதுசா அப்ளை பண்ணனுமா? (Application Process)
ஏற்கனவே திட்டத்தில் உள்ளவர்களுக்கு மட்டுமே பணம் அனுப்பப்பட்டு உள்ளது. இனி புதிதாக சேர்பவர்களுக்கு இந்த 5000 கிடைக்காது. ஆனால் மாதம் ரூ. 1000 கிடைக்கும். நீங்க இன்னும் இந்த ஸ்கீம்ல சேரலையா? கவலைப்படாதீங்க, இந்த வழிகளில் அப்ளை பண்ணலாம்:
அரசு முகாம்கள்: உங்கள் பகுதி இ சேவை மையங்களில் நடக்கும் முகாம்களுக்குச் சென்று விண்ணப்பப் படிவத்தைப் பூர்த்தி செய்து கொடுக்கலாம்.
இ-சேவை மையங்கள்: அரசு புதிய அறிவிப்பு வெளியிட்டதும், உங்களுக்கு அருகிலுள்ள இ-சேவை மையங்கள் மூலமாகவும் ஆன்லைனில் அப்ளை செய்யலாம்.
இ-சேவை மையங்களின் பட்டியல் இங்கே
யாருக்கெல்லாம் கிடைக்கும்? (Eligibility)
வயது: 21 வயது பூர்த்தியடைந்த பெண்கள் (குடும்பத் தலைவிகள்).
வருமானம்: குடும்ப ஆண்டு வருமானம் ₹2.5 லட்சத்திற்கு குறைவாக இருக்க வேண்டும்.
மின்சாரம்: வருடாந்திர மின்சாரப் பயன்பாடு 3600 யூனிட்டுகளுக்கும் குறைவாக இருக்க வேண்டும்.
நிலம்: 5 ஏக்கருக்கு மேல் நன்செய் அல்லது 10 ஏக்கருக்கு மேல் புன்செய் நிலம் இருக்கக்கூடாது.
யாரெல்லாம் அப்ளை பண்ண முடியாது?
அரசு ஊழியர்கள், வருமான வரி செலுத்துபவர்கள், கார்/ஜீப் போன்ற நான்கு சக்கர வாகனங்கள் வைத்திருப்பவர்கள் இந்தத் திட்டத்தில் சேர முடியாது.
என்னென்ன டாக்குமெண்ட்ஸ் வேணும்?
அப்ளை பண்ணப் போகும்போது இந்த லிஸ்ட்டை மறக்காம எடுத்துட்டுப் போங்க:
ஸ்மார்ட் ரேஷன் கார்டு
ஆதார் கார்டு (பேங்க் அக்கவுண்டுடன் லிங்க் ஆகியிருக்க வேண்டும்)
பேங்க் பாஸ்புக்
வாக்காளர் அடையாள அட்டை
பாஸ்போர்ட் சைஸ் போட்டோ மற்றும் உங்கள் கைப்பேசி (OTP வர வேண்டும்).
ஸ்டேட்டஸ் செக் பண்ணுவது எப்படி?
"நான் அப்ளை பண்ணிட்டேன், ஆனா இன்னும் பணம் வரல" என நினைப்பவர்கள் ஆன்லைனிலேயே செக் பண்ணலாம்:
kmut.tn.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் செல்லவும்.
"விண்ணப்பத்தின் நிலை" என்பதை கிளிக் செய்யவும்.
உங்கள் ரேஷன் கார்டு எண் பதிவிட்டு, போனுக்கு வரும் OTP-ஐ உள்ளிடவும்.
இப்போது உங்கள் அப்ளிகேஷன் எந்த நிலையில் (Approved/Pending/Rejected) இருக்கிறது என்பதைப் பார்த்துவிடலாம்.
உங்கள் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டிருந்தால், அதே போர்ட்டலில் 'குறைதீர்வு' (Grievance Redressal) மூலம் மேல்முறையீடு செய்யலாம்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
மதிமுகவை சேர்க்காதீங்கன்னு படிச்சு படிச்சு சொன்னேன், கேட்டீங்களா.. திமுக முன்னாள் நிர்வாகி ஆதங்கம்! -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
திருச்சியில் விஜய்யை சிரித்தபடி ஓடிச்சென்று வரவேற்ற மதிமுக துரை வைகோ! -
இந்த லட்சணத்துல உங்களுக்கு பொ.செ பதவி வேற வேணுமா? தேர்தல் தோல்விக்குப் பின் ஸ்டாலின் ஆவேசம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
Ilaiyaraja Birthday: ராஜாவின் ராஜாங்கம் தொடரட்டும்! இளையராஜாவுக்கு ஸ்டாலின் வாழ்த்து












Click it and Unblock the Notifications