ராஜீவ் கொலை வழக்கு: ஏழுபேர் விடுதலையில் தமிழக காங்கிரஸ் கட்சிக்கு ஒப்புதல் கிடையாது - கே.எஸ். அழகிரி
எழுவர் விடுதலை குறித்து குடியரசு தலைவருக்கு தமிழக அரசு எழுதியுள்ள கடிதத்திற்கு, தமிழக காங்கிரஸ் கட்சிக்கு ஒப்புதல் கிடையாது என்று மாநிலத்தலைவர் கே.எஸ். அழகிரி கூறியுள்ளார்.
சென்னை: ராஜீவ்காந்தி படுகொலை வழக்கில் தண்டனை பெற்றுள்ள ஏழுபேரை விடுவிக்க வேண்டும் என்று குடியரசு தலைவருக்கு தமிழக அரசு எழுதியுள்ள கடிதத்திற்கு, தமிழக காங்கிரஸ் கட்சிக்கு ஒப்புதல் கிடையாது என்று மாநிலத்தலைவர் கே.எஸ். அழகிரி கூறியுள்ளார். ஆரம்பத்தில் இருந்தே குற்றவாளிகளுக்கு தண்டனை கொடுப்பதை நீதிமன்றங்களே செய்ய வேண்டுமே தவிர, அரசியல் அழுத்தம் கொடுக்க கூடாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
முன்னாள் பாரதப் பிரதமர் திரு ராஜீவ் காந்தியின் 30 ஆவது நினைவு நாள் இன்று நாடு முழுவதும் அனுசரிக்கப்படுகிறது
தமிழக காங்கிரஸ் கமிட்டியின் சார்பில் சென்னை சைதாப்பேட்டையில் உள்ள சின்னமலை அருகில் உள்ள ராஜீவ் காந்தியின் முழு உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர் தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் திரு கே எஸ் அழகிரி, முன்னாள் தலைவர் திரு கே வி தங்கபாலு மற்றும் மாநில நிர்வாகிகள் பின்பு சிலையின் கீழ் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த படத்துக்கும் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
செய்தியாளர்களிடம் பேசிய திரு கே எஸ் அழகிரி ராஜீவ் காந்தி பிரதமராக இருந்தபோது தான் இந்தியா 21ம் நூற்றாண்டுக்கான பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி உள்ளதாகவும் இளைஞர்கள் வளர்ச்சியும் அவருடைய காலகட்டத்தில்தான் தொலைத்தொடர்பு துறையும் அவர் வகுத்த திட்டங்கள் தான் இன்று அனைவர் கையிலும் கைபேசி உள்ளதாகவும் குறிப்பிட்டார்.

வளர்ச்சிக்காக பாடுபட்டார்
சென்னை ராயப்பேட்டையில் செய்தியாளர்களை சந்தித்த கே.எஸ். அழகிரி, 21ம் நூற்றாண்டை நோக்கி இந்தியாவை அழைத்து சென்றவர் ராஜிவ்காந்தி என்றும், தொழில்துறையில் மாபெரும் சாதனையை உருவாக்கிய அவர், தமிழர்களின் வளர்ச்சிக்காக பாடுபட்டவர் என்றும் புகழாரம் சூட்டினார்.

அழுத்தம் தரக்கூடாது
தொடர்ந்து பேசிய அவர், நேற்றைய தினம் ஏழுவர் விடுதலை குறித்து குடியரசு தலைவருக்கு தமிழக அரசு எழுதியுள்ள கடிதத்திற்கு, தமிழக காங்கிரஸ் கட்சிக்கு ஒப்புதல் கிடையாது என்றும், ஆரம்பத்தில் இருந்தே குற்றவாளிகளுக்கு தண்டனை கொடுப்பதை நீதிமன்றங்களே செய்ய வேண்டுமே தவிர, அரசியல் அழுத்தம் கொடுக்க கூடாது என்றார்.

7 பேரை மட்டும் விடுதலை செய்வது எப்படி
தொடர்ந்து பேசிய அவர், தமிழர்கள் 100க்கும் மேற்பட்டோர் 20 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் உள்ளனர். எனவே தமிழர்கள் என்ற ஒரு காரணத்திற்காக 7 பேரை மட்டும் விடுதலை செய்வது என்பது ஏற்புடையது அல்ல என்றார்.

காங்கிரஸ் வலியுறுத்தாது
திமுகவின் தேர்தல் அறிக்கையிலேயே எழுவர் விடுதலை குறித்து வாக்குறுதி அளித்து இருந்தனர், ஆனால் காங்கிரஸ் கட்சி அதுகுறித்து எதுவும் வலியுறுத்தவில்லை என்றும் கூறினார். அதேபோல் காங்கிரஸ் சட்டசபைக் குழு தலைவர் தேர்வில் எந்தவித காலதாமதமும் இல்லை என்ற அவர், இதுகுறித்து மேலிடம் முடிவு செய்யும் என்றும் கூறினார்.
-
இந்த லட்சணத்துல உங்களுக்கு பொ.செ பதவி வேற வேணுமா? தேர்தல் தோல்விக்குப் பின் ஸ்டாலின் ஆவேசம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
Ilaiyaraja Birthday: ராஜாவின் ராஜாங்கம் தொடரட்டும்! இளையராஜாவுக்கு ஸ்டாலின் வாழ்த்து -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு!












Click it and Unblock the Notifications