தமிழகத்தில் உச்சத்தில் கொரோனா.. கடும் உஷார் நிலை.. அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கு பறந்த உத்தரவு!
சென்னை: தமிழகத்தில் கொரோனா தினசரி பாதிப்பு உச்சகட்டத்தில் சென்று கொண்டிருக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 23,459 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. அதுவும் தலைநகர் சென்னையில் 9,000-க்கும் மேற்பட்டவர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
Recommended Video
சென்னை மட்டுமில்லாது தமிழகம் முழுவதும் கொரோனா கேஸ்கள் அதிகரித்து வருகின்றன. கொரோனவை கட்டுப்படுத்த தமிழகத்தில் தினமும் இரவு நேர ஊரடங்கு, வார இறுதி நாள் ஊரடங்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

தமிழகத்தில் உச்சத்தில் கொரோனா
மாஸ்க் அணிதல் உள்ளிட்ட கொரோனா தடுப்பு வழிமுறைகளை கடைபிடிக்காவிட்டால் ரூ.500 அபராதம் விதிக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தொற்று தொடர்ந்து அதிகரித்து வருவதால் அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா தடுப்பு மையங்களை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் என்று மாவட்ட கலெக்டர்களுக்கு சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உத்தரவிட்டுள்ளார்.

வீட்டு தனிமை
உரிய மருத்துவ பரிசோதனை இல்லாமல் கொரோனா பாதித்தவரை வீட்டு தனிமைக்கு அனுமதிக்கக் கூடாது. அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா தடுப்பு மையங்களை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். கொரோனா தடுப்பு நெறிமுறைகளை மக்கள் பின்பற்றுவதை உறுதிப்படுத்த வேண்டும் என்று அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளார்.

யாரை பரிசோதிக்க வேண்டும்
அடுத்த அலையில் இறப்பை பெருமளவில் குறைக்க வேண்டும். யாரை பரிசோதிக்க வேண்டும், யாரை பரிசோதிக்க வேண்டாம் என ஐ.சி.எம்.ஆர். கொடுத்துள்ள வழிகாட்டுதல்களை முறையாகக் கடைபிடிக்க வேண்டும். நோய் அறிகுறி இல்லாதவர்களை பரிசோதிக்க வேண்டாம். தொற்று உறுதியாகும் நபர்கள் தொடர்புடைய இடங்களில் கூடுதல் கவனம் தேவை என்றும் அறிவுரை வழங்கியுள்ளார்.

ஆக்சிஜன் இருப்பு
அனைத்து மருத்துவமனைகளும் தற்போதுள்ள கைவசம் உள்ள ஆக்சிஜன் சிகிச்சை மற்றும் சேவைகளை உடனே மதிப்பிட வேண்டும். உள்கட்டமைப்பை ஆராய்ந்து, திரவ மருத்துவ ஆக்சிஜன் நிரப்பும் வசதி, வினியோகம் தங்கு தடையின்றி கிடைப்பது உறுதி செய்யப்பட வேண்டும். கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவமனைகள் 48 மணி நேரத்துக்கு தேவையான மருத்துவ ஆக்சிஜனை கையிருப்பில் வைத்திருக்க வேண்டும். ஆக்சிஜன் சிலிண்டர், அதனை மீண்டும் நிரப்புவதற்கான அமைப்பு குறித்து ஆராய வேண்டும். வென்டிலேட்டர் வசதி ஏற்படுத்த வேண்டும்ம் என்றும் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
-
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்? -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ












Click it and Unblock the Notifications