14 அமைச்சர்களிடம் நேருக்கு நேர் மோதல் இல்லை.. பாஜக, அமமுகவை கோர்த்துவிட்ட எடப்பாடி பழனிசாமி!
சென்னை: திமுக அமைச்சர்கள் 14 பேரை எதிர்த்து அதிமுக நேருக்கு நேர் போட்டியிடாமல், கூட்டணி கட்சிகளை எடப்பாடி பழனிசாமி கோர்த்துவிட்டுள்ளார். அதிமுக வேட்பாளர்களுக்கு பதிலாக பாஜகவை 6 தொகுதிகளிலும், அமமுகவை 3 தொகுதிகளிலும், தமாகாவை 3 தொகுதிகளிலும், பாமக மற்றும் ஐஜேகேவை தலா 1 தொகுதியிலும் எடப்பாடி பழனிசாமி மாட்டிவிட்டிருப்பதாக பார்க்கப்படுகிறது.
அதிமுக தலைமையிலான என்டிஏ கூட்டணியில் எந்தெந்த கட்சிகள் எந்த தொகுதியில் போட்டியிடுகின்றன என்ற அறிவிப்பை எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ளார். அதிமுக தொடர்ச்சியாக தோல்வி அடையும் தொகுதிகளையும், திமுக அமைச்சர்களுடன் அதிமுக வேட்பாளர்கள் நேரடியாக மோதலை தடுக்கும் வகையில் எடப்பாடி பழனிசாமி கச்சிதமாக செயல்பட்டிருக்கிறார்.

அதிலும் திமுக அமைச்சர்கள் 14 பேருக்கு எதிர்த்து நேருக்கு நேர் போட்டியிடாமல் அந்த தொகுதிகளை கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கி இருக்கிறார். அதிலும் 6 அமைச்சர்களுக்கு எதிரான பாஜகவை கோர்த்துவிட்டுள்ளார் எடப்பாடி பழனிசாமி. அமைச்சர் எவ வேலுவின் திருவண்ணாமலை தொகுதி, அமைச்சர் பெரியகருப்பனின் திருப்பத்தூர் தொகுதி, அமைச்சர் மனோ தங்கராஜின் பத்மநாபபுரம் தொகுதி பாஜகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
அதேபோல் அமைச்சர் நாசரின் ஆவடி தொகுதி, அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனின் திருச்செந்தூர் தொகுதி, அமைச்சர் மதிவேந்தனின் ராசிபுரம் தொகுதி பாஜகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அதேபோல் திமுகவின் 3 அமைச்சர்களை எதிர்த்து அமமுகவை கோர்த்துவிட்டிருக்கிறார். அமைச்சர் கே.என்.நேருவின் திருச்சி மேற்கு தொகுதியை எடப்பாடி பழனிசாமி ஒதுக்கி இருக்கிறார்.
தொடர்ந்து அமைச்சர் டிஆர்பி ராஜாவின் மன்னார்குடி தொகுதியையும், அமைச்சர் மா.சுப்பிரமணியனின் சைதாப்பேட்டை தொகுதியையும் அமமுக பக்கம் எடப்பாடி பழனிசாமி தள்ளிவிட்டுள்ளார். அதேபோல் அமைச்சர் சக்கரபாணியின் ஒட்டன்சத்திரம் தொகுதி, அமைச்சர் முத்துசாமியின் ஈரோடு மேற்கு தொகுதி, அமைச்சர் காந்தியின் ராணிப்பேட்டை தொகுதி தமாகாவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
அதேபோல் அமைச்சர் ராஜேந்திரனின் சேலம் வடக்கு தொகுதி பாமகவுக்கும் மற்றும் அமைச்சர் சிவசங்கரின் குன்னம் தொகுதி ஐஜேகேவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இதனால் கூட்டணி கட்சி நிர்வாகிகளும், வேட்பாளர்களும் புலம்ப தொடங்கி இருக்கின்றனர். இதனால் அதிமுக வேட்பாளர்கள் பலரும் நிம்மதி அடைந்திருக்கின்றனர்.
-
நீ வேணா சண்டைக்கு வா.. எடப்பாடியிடம் விடாமல் ஒரண்டை இழுக்கும் சி.விஜயபாஸ்கர்! ஓ.. இதுதான் ப்ளானா? -
Waiting Is Over.. பாஜகவுக்கு டாடா சொன்ன அண்ணாமலை! புதிய கட்சி எப்போது உதயம்? லீக்கான தகவல்! -
பூனைக்குட்டி வெளியே வந்துருச்சு! Don't care.. அண்ணாமலை பற்றி அமித் ஷா சொன்ன வார்த்தை! கலகல கமலாலயம்! -
அண்ணாமலையின் புதிய அரசியல் அத்தியாயம்! செப்டம்பர் 14ல் வெளியாகிறது கட்சிப் பெயர்? -
2026 போயே போச்சு.. அதான் 2031 இருக்கே! அமித் ஷா கையில் ’ஆபரேசன் தமிழ்நாடு’.. வங்கத்து கணக்கு எடுபடுமா? -
நயினார் நாகேந்திரனுக்கு.. கேரள ஆளுநர் பதவி! அள்ளிக்கொடுக்கும் பாஜக! அப்போ.. அண்ணாமலை ரூட் சரிதான்! -
சின்ன புரட்சித் தமிழர்..அதிமுகவில் என்ட்ரி கொடுக்கும் எடப்பாடி மகன்? மிதுனால் மிரளும் அதிமுக தலைகள்? -
ரஜினிகாந்த் உடன் பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் திடீர் மீட்டிங்.. போயஸ் கார்டனில் ஆலோசித்தது என்ன? -
உள்கட்சி பூசலுக்கு இடையே பல்ஸ் பார்க்கும் எடப்பாடி! மாவட்ட வாரியாக கூட்டம் நடத்துவது ஏன்? பின்னணி -
"மதிக்காத இடத்தில் பயணம் சாத்தியமா" அதிமுகவில் இருந்து விலகுவதை சூசகமாக சொன்ன விஜயபாஸ்கர்? -
அதிமுக 4 எம்எல்ஏக்கள் ராஜினாமா செல்லுமா? எடப்பாடி பழனிசாமி வழக்கு! சென்னை ஹைகோர்ட்டில் நாளை விசாரணை -
47ல் இருந்து 42ஆக வீழ்ச்சி! எடப்பாடிக்கு அடுத்தடுத்த அதிர்ச்சி கொடுக்கும் அதிமுக எம்எல்ஏ-க்கள்!












Click it and Unblock the Notifications