சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சூப்பர்.. கல்லூரி மாணவர்கள் வயிற்றில் பாலை வார்த்த தமிழக அரசு.. 20%கூடுதல் சேர்க்கை.. மாஸ் அறிவிப்பு

அரசு கலை கல்லூரி மாணவர்களுக்கு சூப்பர் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது

Google Oneindia Tamil News

சென்னை: கல்லூரி மாணவர்களுக்கு சூப்பர் அறிவிப்பு ஒன்றினை தமிழக அரசு அறிவித்துள்ளது.. குறிப்பாக கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை தொடர்பாக வெளியாகி உள்ள இந்த அறிவிப்புக்கு பல்வேறு தரப்பினர் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். கலை பாடப்பிரிவுகளுக்கு கூடுதலாக 20 சதவீதமும், அறிவியல் பாடப்பிரிவுகளுக்கு ஆய்வக வசதிகளுக்கு ஏற்ப கூடுதலாக 20 சதவீதமும் மாணவர் சேர்க்கைக்கு அனுமதியளித்துள்ளது தமிழக அரசு.

நம் மாநிலத்தில், 90-க்கும் மேற்பட்ட அரசு, கலை அறிவியல் கல்லூரிகளும், 7 கல்வியியல் கல்லூரிகளும் மற்றும் 40-க்கும் மேலான பல்கலைக்கழக கல்லூரிகளும் செயல்பட்டு வருகின்றன.. ஆனால் சில மாதங்களாக லாக்டவுன் என்பதால் காலேஜ்கள் மூடப்பட்டிருந்தன.

குறிப்பாக, கலை அறிவியல் கல்லூரிகளில் பயின்றவர்கள் இறுதி ஆண்டு தேர்வு எழுத முடியவில்லை. ஊரடங்கு நீடிக்கப்படுவதால் இறுதி பருவத் தேர்வு எழுதுவதில் சிக்கல் எழுந்தது.. இந்த தேர்வை ரத்து செய்ய பல்வேறு தரப்பிலும் கோரிக்கை எழுந்தது.. தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் இதையே வலியுறுத்தி மத்திய அரசுக்கு கடிதமும் எழுதினார்.

இந்தியாவில் அதிவேகமாக பரவும் கொரோனா ஒரே நாளில் 96551 பேர் பாதிப்பு - 1209 பேர் மரணம் இந்தியாவில் அதிவேகமாக பரவும் கொரோனா ஒரே நாளில் 96551 பேர் பாதிப்பு - 1209 பேர் மரணம்

ஆன்லைன்

ஆன்லைன்

இதனிடையே, பிளஸ்-2 தேர்வு முடிவு வெளியான பிறகு, அரசு கல்லூரிகளில் ஆன்லைன் மாணவர் சேர்க்கை நடத்த உயர் கல்வித் துறை நடவடிக்கை எடுத்தது.. அதன்படி, ஒவ்வொரு மாவட்டத்திலும் மாணவர்களுக்கு வழிகாட்டும் வகையில், ஒருங்கிணைப்பாளர் ஒருவரை நியமித்து, ஆன்லைன் மாணவர் சேர்க்கை குறித்து ஒத்திகை பார்த்து, அரசு கல்லூரி நிர்வாகங்கள் தயார் நிலையில் இருக்க, வேண்டும் என்று உயர் கல்வித்துறை அறிவுறுத்தியது.

பாராட்டு

பாராட்டு

இது மாணவர்களிடையே பெரிதும் வரவேற்பை பெற்றது.. இதன்படி, அந்தந்த மாணவ, மாணவியர் விரும்பிய பாடப்பிரிவுக்கு தேர்ந்தெடுக்கப்படுவர்... மேலும், அரசு கல்லூரிகளுக்கான மாணவர் சேர்க்கைக்கு ஆன்லைனில் விண்ணப்பம் பெறும் திட்டமும் பாராட்டை பெற்றது.

காத்திருப்போர்

காத்திருப்போர்

அதேசமயம், உயர்கல்வி கற்பதற்காக கல்லூரிகளுக்கு விண்ணப்பித்து காத்திருப்போரின் நிலை மிகவும் கவலைக்குரியதாக உள்ளது.. அவர்களால் தனியார் கல்லூரிகளிலும் அதிக ஃபீஸ் கட்டி படிக்க முடியாத சூழல் இந்த ஊரடங்கால் ஏற்பட்டுள்ளது.. எனவே, இந்த முறை அரசு கல்லூரிகளில் படிப்பதற்காக அப்ளை செய்துள்ள மாணவர்களின் எண்ணிக்கை அதிகமாகி உள்ளது.. இதனால்தான் மற்றொரு முக்கிய முடிவை தமிழக அரசு எடுத்துள்ளது.

சேர்க்கை

சேர்க்கை

அதன்படி, அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் கலை பாடப்பிரிவுகளுக்கு கூடுதலாக 20 சதவீதமும், அறிவியல் பாடப்பிரிவுகளுக்கு ஆய்வக வசதிகளுக்கு ஏற்ப கூடுதலாக 20 சதவீதமும் மாணவர் சேர்க்கைக்கு அனுமதியளித்து அரசாணையும் வெளியிட்டுள்ளது... இப்படி ஒரு அறிவிப்பினால், கல்லூரி மாணவர்களின் வயிற்றில் பாலை வார்த்துவிட்டது தமிழக அரசு!

English summary
TN Gov allows additional 20% seats for Govt arts college admission
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X