அரிசி குடும்ப அட்டைதாரர்களே.. இந்த "2 நாளும்" ரேஷன் கடைகள் இயங்காது.. தமிழக அரசு திடீர் அறிவிப்பு
சென்னை: தீபாவளி பண்டிகைக்கான, வேலை நாட்களை ஈடுசெய்யும் வகையில், தமிழகத்தில் அனைத்து ரேஷன் கடைகளுக்கும் 2 நாள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழக அரசு அறிவிப்பு ஒன்றையும் வெளியிட்டுள்ளது.
தீபாவளி பண்டிகை நெருங்கிகொண்டிருக்கிறது.. வரும் நவம்பர் 12ம் தேதி பண்டிகையை கொண்டாட தமிழக மக்கள் தயாராகி வருகிறார்கள்.. எனவே, இப்போதே தீபாவளி கொண்டாட்டங்கள் ஆரம்பமாகி உள்ளன.

உணவுத்துறை: இந்நிலையில், 4 நாட்களுக்கு முன்பு, தமிழக உணவுத்துறையானது, அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருந்தது. அதில், ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 12) தீபாவளி பண்டிகை வரும் நிலையில், அதற்கு முந்தைய ஞாயிற்றுக்கிழமையான நவம்பர் 5ம் தேதி ரேஷன் கடைகள் இயங்கும் என தெரிவிக்கப்பட்டது.
மேலும் தீபாவளி பண்டிகை நெருங்குவதால் பொருட்களை மக்கள் முன்கூட்டியே வாங்குவார்கள் என்பதால் தேவையான அரிசி, சர்க்கரை, பருப்பு ஆகியவற்றை தேவையான அளவு இருப்பு வைத்துக் கொள்ள வேண்டும், மக்கள் இன்றைய நாளை பயன்படுத்தி தங்களுக்கு தேவையான ரேஷன் பொருட்களை வாங்கி பண்டிகையை மகிழ்ச்சியாக கொண்டாடுமாறும் அந்த அறிவிப்பில் கேட்டுக் கொண்டிருந்தது.
விடுமுறைகள்: அதன்படியே, கடந்த 5ம்தேதி தமிழ்நாடு முழுவதும் ரேஷன் கடைகள் இயங்கின.. பொதுமக்களும் ரேஷன் பொருட்களை தவறாமல் சென்று பெற்றுக் கொண்டனர். இந்நிலையில், இன்னொரு அறிவிப்பு வெளியாகி உள்ளது.
அதில், விடுமுறை தினத்தை ஈடுசெய்யும் வகையில், தமிழகத்தில் உள்ள அனைத்து நியாய விலைக்கடைகளுக்கு நவம்பர் 13 மற்றும் 25-ம் தேதி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தீபாவளியையொட்டி கடந்த 3ம் தேதியும், நாளையும் வேலை நாட்களாக இருப்பதால் அரசு அறிவித்துள்ளது.
புதுச்சேரி: அதேபோல, புதுச்சேரியில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, ரேஷன் கடைகளில் பொருட்கள் வழங்குவதற்கு பதிலாக அனைத்து குடும்ப அட்டைதார்களுக்கும் 400 ரூபாய் வங்கிகளில் செலுத்தப்படும் என்று அம்மாநில முதல்வர் அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
தீபாவளி பண்டிகையொட்டி, அரிசி, பருப்பு, கோதுமை, எண்ணெய் போன்ற அத்தியாவசிய பொருட்களின் தேவை அதிகமாக உள்ளதால், இதுகுறித்த தீபாவளி சிறப்பு அறிவிப்புகளை, தமிழக அரசு விரைவில் வெளியிடும் என்றும் எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.
-
அம்மா சென்டிமென்ட்.. அறுக்காதீங்க லாரன்ஸ்! கொந்தளித்த ப்ளூ சட்டை மாறன்! சரமாரி விமர்சனம் -
குற்றங்கள் நடைபெறாமல் தடுக்க என்ன நடவடிக்கை?.. தமிழக அரசுக்கு அண்ணாமலை சரமாரி கேள்வி -
பாரதிராஜா வேண்டுமென்றே இறந்தார்! 6 மாதத்தில் நடந்தது என்ன? சிகிச்சை அளித்த மருத்துவர் வேதனை -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
செங்கல்பட்டு-திண்டிவனம் 6 வழிச்சாலை விரிவாக்கம்: NHAI அதிரடி திட்டம் - போக்குவரத்து நெரிசல் ஓவர்! -
கரண்ட் பில் கட்ட கடைசி தேதி முடிஞ்சுடுச்சா? பதறாதீங்க.. இனிமேல் இப்படி ஒரு வசதி இருக்கு! -
சென்னையில் சம்பவம் இருக்கு.. ஹை அலர்ட் கொடுத்த வானிலை மையம்! உஷார் மக்களே! -
திருவள்ளூர் முட்புதரில் 3 வயது குழந்தை... ஒரே நாளில் 5 சிறுமிகளுக்கு கொடுமை! சிங்கப்பெண் படை எங்கே? -
ஓமன் அருகே கப்பலில் உயிரிழந்த தமிழக மாலுமி.. குளிர்ந்த நீரால் உடலை பாதுகாக்க போராடும் சக ஊழியர்கள் -
50 கி.மீ வேகத்தில் காற்று.. இடி, மின்னலுடன் கொட்டப்போகும் பேய் மழை! 5 மாவட்டங்களுக்கு வார்னிங் -
ஏமாற்றம் கொடுத்த மேட்டூர்.. கைவிடாத மழை! டெல்டாவுக்கு இன்று கனமழை அலர்ட்! -
கள உதவியாளர் தேர்வு: இனி 'ஷூ' அணிந்து கம்பம் ஏறலாம்! மின்வாரியத்தின் புதிய விதிகள்!












Click it and Unblock the Notifications