தமிழக அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு.. வெளியானது அரசாணை!
சென்னை: அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு 14 சதவீத அகவிலைப்படி உயர்வு வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருந்தார். இதற்கான அரசாணை இன்று வெளியிடப்பட்டுள்ளது.
தமிழக அரசு பணியாளர்கள், ஆசிரியர்கள், அகவிலைப்படி பெற தகுதியான ஏனைய பணியாளர்கள், ஓய்வூதியதாரர்கள், குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு ஜனவரி 1 ஆம் தேதி முதல் அகவிலைப்படி உயர்த்தி வழங்கப்படும் என சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருந்தார்.
இந்த அறிவிப்பை செயல்படுத்தும் வகையில் அரசுப் பணியாளர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்கள், குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படியானது 14 சதவீதம் உயர்த்தப்படுகிறது.

ஜனவரி 1 ஆம் தேதி முதல் அகவிலைப்படி 17 சதவீதத்திலிருந்து 31 சதவீதமாக அதிகரித்து வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார். அகவிலைப்படி உயர்வால் அரசுக்கு ஆண்டுக்கு ரூ 8.724 கோடி கூடுதல் செலவு ஏற்படும். தமிழக அரசுக்கு நிதிச்சுமை உள்ள சூழ்நிலையிலும் அகவிலைப்படியை 17 சதவீதத்திலிருந்து 31 சதவீதமாக உயர்த்தி வழங்கிட முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
14 சதவீதம் அகவிலைப்படி அதிகரிப்பால் அரசு ஊழியர்களுக்கு ரூ 6000 முதல் ரூ 12 ஆயிரம் வரை ஊதியத்தில் உயர்வு ஏற்படும் என தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவித்தன. அகவிலைப்படி உயர்வுக்கு தமிழக தலைமைச் செயலக சங்கம் உள்ளிட்ட பல்வேறு அரசு ஊழியர்களின் சங்கங்கள், ஓய்வூதியதாரர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
அகவிலைப்படி உயர்வு குறித்த அறிவிப்பு கடந்த ஆகஸ்ட் 132 ஆம் தேதி சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட் அறிக்கை வெளியிடப்பட்டது. அதில் 2022 ஆம் ஆண்டு ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் உயர்த்தப்பட்ட அகவிலைப்படி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதனிடையே சட்டசபையில் விதி 110இன் கீழ் கடந்த ஆண்டு செப்டம்பர் 7ஆம் தேதி உரையாற்றிய முதல்வர் ஸ்டாலின், 16 லட்சம் அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி உயர்வு 2022 ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் தேதி முதல் அளிக்கப்படும் என்றார். சட்டசபை அறிவிப்பின்படி அகவிலைப்படி உயர்வு குறித்த அறிவிப்பு வெளியானது. இந்த நிலையில் இன்றைய தினம் அகவிலைப்படி உயர்வு தொடர்பான தமிழக அரசின் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
-
தமிழகத்தில் வாக்காளர் பட்டியலில் எப்போது வரை பெயர் சேர்க்கலாம்? தேர்தல் ஆணையம் விளக்கம் -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி: 5 சவரன் தங்கம் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்! எப்படி விண்ணப்பது -
திரிஷா சர்ச்சை அடங்குவதற்குள் மீண்டும் பரபரப்பு… காதல், கள்ளக்காதல் பற்றி பார்த்திபன் ஓபனாக பேச்சு -
தங்கம் vs ரியல் எஸ்டேட்.. கடைசி காலத்தில் நிம்மதியாக வாழ எது சிறந்தது? ஆனந்த் சீனிவாசன் ஈஸி விளக்கம் -
பாஜகவுடன் கூட்டணி வைக்கலாம்.. எழுதிக் கொடுத்த மாவட்டச் செயலாளர்கள்.. நாளை விஜய் எடுக்கும் முடிவு? -
விரால் மீனின் ஸ்பெஷாலிட்டி இது.. பாம்பு தலையன் மீனுக்குள் அற்புதமான சீக்ரெட்! பெண்களின் வரப்பிரசாதம் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை பழிதீர்த்த கர்மா.. முத்துவால் ஏற்பட்ட குழப்பம்.. சந்தோஷத்தில் ரோகிணி -
ஜான் ஆரோக்கியசாமி போட்ட மெகா ஸ்கெட்ச்.. மிரண்டு போன பாஜக மேலிடம்.. B டீம் முத்திரையை உடைப்பாரா விஜய் -
Rasi Palan: கடகம், சிம்மம், கன்னிக்கு மார்ச் மாதத்தில் அடிக்குமா ஜாக்பாட்.. முழு பலன்கள் விவரம் -
அதிமுக எம்பியாக இருந்தபோதே கனிமொழி அக்கா எனக்கு பயிற்சி கொடுத்தார்.. ஓ.பி. ரவீந்திரநாத் -
ஸ்டன் ஆன விஜய்.. "80 சீட்+ துணை முதல்வர்" எல்லாம் ஓகே.. ஆனா ஒரு விஷயத்தை யோசிக்கும் தவெக தலைமை -
Rasi Palan: துலாம், விருச்சிகம், தனுசு ராசிக்கான மார்ச் மாத பலன்.. முழு விவரம் இதோ












Click it and Unblock the Notifications