பனை மரம் வெட்ட கலெக்டர் அனுமதி கட்டாயம்.. ஒரு மரம் வெட்டினால் 10 மரம் நடவேண்டும்.. தமிழக அரசு ஆணை
சென்னை: பனை மரத்தை வெட்ட ஆட்சியர் அனுமதி கட்டாயம் என தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. பனை மரங்களை வேரோடு வெட்டி விற்கவும், செங்கல் சூளைகளுக்குப் பயன்படுத்துவதை தடுக்கும் வகையில் அரசாணை வெளியிட்டுள்ளது. வெட்டிய ஒரு மரத்திற்கு ஈடாக பத்து மரங்களை நட்டு வளர்க்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
பனை மரங்களை பாதுகாக்கும் நோக்கில் தமிழக அரசு இன்று (செப்டம்பர் 18) புதிய அரசாணையை வெளியிட்டுள்ளது. பனை மரங்களை வெட்ட மாவட்ட ஆட்சியரிடம் இருந்து அனுமதி பெறுவது கட்டாயம் என அரசு அறிவித்துள்ளது. பனை மரங்களை வெட்டி விற்கவும், செங்கல்
குனைகளில் பயன்படுத்தவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

மாவட்ட ஆட்சியரின் அனுமதி கட்டாயம்
தவிர்க்க முடியாத சூழ்நிலையில் மட்டுமே, மாவட்ட ஆட்சியரின் அனுமதி பெற்ற பின்னர் பனை மரங்களை வெட்ட இயலும் என்று அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், பனை மரங்களை வெட்ட அனுமதி பெற உழவர் செயலியில் விண்ணப்பிக்க வேண்டும்.
வெட்டப்பட்ட பனை மரங்களை வேறு இடங்களுக்கு எடுத்துச் செல்லும் போதும் அனுமதி கடிதம் கட்டாயம் காட்டப்பட வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. வெட்டிய ஒரு மரத்திற்கு ஈடாக பத்து மரங்களை நட்டு வளர்க்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. நீர்நிலைகளின் என்று அழைக்கப்படும் பனை மரங்களை பாதுகாப்பதற்காகவே இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது.
பனை பயன்கள்
பனை மரங்களின் அனைத்து பொருட்களும் பயன் தரும். பனை மரத்தின் வேர் முதல் உச்சியில் உள்ள ஓலை வரை எல்லாமே பயன்படக்கூடியவை. பனை நுங்கு குளிர்ச்சி தரக்கூடியது. பனங்கிழங்கு நார்ச்சத்து நிறைந்தது. பனை மரத்தின் பாளையில் இருந்து கிடைக்கும் சாறு பதநீர் எனப்படுகிறது. சிறிதளவு சுண்ணாம்பு சேர்க்கப்பட்டு பனை மரத்தில் இருந்து இறக்கப்படும் பதநீர் மிகவும் சுவையானது மட்டுமின்றி உடலுக்கு குளிர்ச்சியையும் தருகிறது.
பனை மரத்தின் இலையைத்தான் ஓலை என்கிறோம். பனை ஓலை கூரை வேயவும், பெட்டி, கூடை, விசிறி, பாய், முறம் மற்றும் பூச்சாடி போன்ற கைவினை பொருட்கள் தயாரிக்கவும் பயன்படுகிறது. கயிறு தயாரிப்பு தொழிலில் பனை நார் முக்கிய பங்கு வகிக்கிறது.
மண் அரிப்பை தடுப்பதில் பனை மரங்களுக்கு முக்கிய பங்கு உண்டு. ஏரி மற்றும் குளக்கரைகளில் பனை மரம் வளர்க்கப்பட்டது. விவசாய நிலத்தின் கரைப்பகுதியில் அதிகளவு பனை மரங்கள் நடவு செய்யப்படும். பனை மரம் இருந்தால் நிலத்தடி நீர் பாதுகாக்கப்படும்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications