ரேஷன் கடை பெண் ஊழியர்களுக்கு குட்நியூஸ்.. மகப்பேறு விடுறை பற்றி தமிழக அரசு அசத்தல் அறிவிப்பு
சென்னை: ரேஷன் கடையில் பணிபுரியும் பெண் ஊழியர்களுக்கு 270 முதல் 365 நாட்கள் வரை மகப்பேறு விடுமுறை தொடர்பாக கூட்டுறவுத்துறை அரசாணை வெளியிட்டுள்ளது. அரசு பணியாளர்களுக்கு வழங்கப்படும் சலுகைகள் ரேஷன் கடை ஊழியர்களுக்கும் பொருந்தும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அரசு துறைகளில் பணிபுரியும் பெண் ஊழியர்களுக்கு 12 மாதங்கள் மகப்பேறு விடுப்பு வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. ஆனால், ரேஷன் கடை பெண் ஊழியர்களுக்கு 6 மாதம் மட்டுமே விடுப்பு வழங்கப்படுவதாக புகார் எழுந்தது.
இது தொடர்பான செய்திகள் வெளியான நிலையில் ரேஷன் கடைகளில் பணிபுரியும் பெண் ஊழியர்களுக்கும் 270 நாட்கள் மகப்பேறு விடுப்பு பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரேசன் கடை ஊழியர்கள்
இதுகுறித்து கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர், மண்டல இணை பதிவாளர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில்;- அனைத்து கூட்டுறவு சங்கங்களின் கட்டுப்பாட்டில் உள்ள ரேஷன் கடைகளில் பணிபுரியும் பெண் விற்பனையாளர்கள், எடையாளர்களுக்கு 12 மாதங்கள் மகப்பேறு விடுப்பு வழங்க, தேவையான துணை விதி திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

மகப்பேறு விடுப்பு
தகுதியுள்ள அனைத்து பெண் ஊழியர்களுக்கும், மகப்பேறு விடுப்பு அனுமதிக்கப்படுவதை தங்கள் அளவில் கண்காணித்து உறுதி செய்ய வேண்டும். அரசு ஊழியர்களுக்கு, அரசால் அவ்வப்போது அறிவிக்கப்படும் சலுகைகள், ரேஷன் கடை ஊழியர்களுக்கும் பொருந்தும் என, ஏற்கனவே தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசு ஊழியர்களுக்கு, அரசால் அறிவிக்கப்படும் சலுகைகள் தொடர்பாக, உடனுக்குடன் சங்க துணை விதிகளில் உரிய திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு, சம்பந்தப்பட்ட ஊழியர்களுக்கு அச்சலுகைகள் கிடைக்க உடனுக்குடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

அரசாணை
இதுகுறித்து வெளியிட்டுள்ள அரசாணையில் நியாயவிலைக் கடைகளில் பணிபுரியும் பெண் விற்பனையாளர்கள் மற்றும் கட்டுநர்களுக்கும் 270 நாட்கள் மகப்பேறு விடுப்பு பொருந்தும் எனவும், 270 நாட்கள் மகப்பேறு விடுப்பு அனுமதிக்கத் தேவையான சிறப்புத் துணைவிதி திருத்தம் மேற்கொள்ளப்படுவது, மற்றும் அது தொடர்பான உரிய ஒழுங்கு முறை விதிகளை ஒவ்வொரு சங்கத்திலும் ஏற்படுத்துவது குறித்தும் தங்கள் அளவில் கண்காணித்து உறுதி செய்து கொள்ள கேட்டுக்கொள்ளப்பட்டது.

12 மாதங்கள் விடுப்பு
அரசு பெண் பணியாளர்களுக்கு மகப்பேறு விடுப்பு 9 மாதங்களிலிருந்து 12 மாதங்களாக (270 நாட்களிலிருந்து 365 நாட்களாக) உயர்த்தி ஆணை வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ரேஷன் கடையில் பணிபுரியும் பெண் ஊழியர்களுக்கு 270 முதல் 365 நாட்கள் வரை மகப்பேறு விடுமுறை தொடர்பாக கூட்டுறவுத்துறை அரசு ஆணை வெளியிட்டுள்ளது. அரசு பணியாளர்களுக்கு வழங்கப்படும் சலுகைகள் ரேஷன் கடை ஊழியர்களுக்கும் பொருந்தும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
-
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்! -
திருச்செந்தூர் முருகன் கோயிலில் அர்ச்சகருக்கு தடை மட்டும் விதிக்கப்பட்டது ஏன்? அமைச்சர் விளக்கம்! -
அமைச்சர்களுக்காக கடவுள் காத்திருக்க வேண்டியதில்லை.. நிர்மல்குமார் வழக்கில் ஹைகோர்ட் அதிரடி! -
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
தமிழ்நாட்டின் புதிய டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் நியமனம்! முடிவுக்கு வரும் சட்டம் ஒழுங்கு பிரச்சனை -
"22 வயதில் ஐபிஎஸ் - பஞ்சாப்பை சேர்ந்தவர்".. தமிழகத்தின் புதிய டிஜிபி மகேஷ் குமார் அகர்வால் யார்? பின்னணி -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
Chennai Metro: சென்னை பூந்தமல்லி- வடபழனி மெட்ரோ ரயில் சேவை எப்போது தொடங்கும்? எங்கெங்கு நிற்கும்? -
வாடகை கிடையாது.. 22 அமைச்சர்களுக்கு பங்களாக்கள் ஒதுக்கீடு.. விஜய் - புஸ்ஸி - ஆதவ்விற்கு இல்லை.. ஏன்? -
தேசிய நெடுஞ்சாலையில் செல்பவர்களுக்கு குட் நியூஸ்.. வருது சுங்கக் கட்டண சலுகை.. யாருக்கு பொருந்தும்? -
சென்னை மக்களுக்கு நிம்மதி.. கொட்டப்போகும் மழை! வானிலை ஆய்வு மையம் சொன்ன குட் நியூஸ்! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 19 மாவட்டங்களில் கொட்டி தீர்க்கப்போகும் மழை! அடுத்த 2 மணி நேரம் உஷார்!












Click it and Unblock the Notifications