சென்னை உட்பட 10 மாவட்டங்கள்.. புயல், வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவையாக அறிவித்து அரசிதழில் வெளியீடு!
சென்னை: சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களை புயல் பாதித்த மாவட்டங்களாக அறிவித்து அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி, ராமநாதபுரம், விருதுநகர் ஆகியவை வெள்ளம் பாதித்த மாவட்டங்களாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மிக்ஜாம் புயல், வட தமிழக கடலோர பகுதிகளுக்கு நெருக்கமாக நிலை கொண்டிருந்ததால், சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய 4 மாவட்டங்களில் கடந்த டிசம்பர் 3, 4ஆம் தேதிகளில் பயங்கர கனமழை பெய்தது. இதனால் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய 4 மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.

இந்நிலையில், தென் கிழக்கு வங்கக் கடலில் உருவான கீழடுக்கு வளிமண்டல சுழற்சியால் திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் கடந்த டிசம்பர் 17, 18ஆம் தேதிகளில் வரலாறு காணாத அளவில் அதிகனமழை பெய்தது. இதனால் ஏற்பட்ட கடுமையான வெள்ளத்தால் லட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டனர்.
டெல்லி சென்று பிரதமர் மோடியை முதல்வர் ஸ்டாலின் நேரில் சந்தித்து, தமிழகத்தில் கனமழை, வெள்ளத்தால் வட மாவட்டங்கள், தென் மாவட்டங்கள் அடுத்தடுத்து பாதிக்கப்பட்டிருப்பது குறித்து எடுத்துரைத்தார். மேலும், ஏற்கெனவே மிக்ஜாம் புயல் வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்பை சீர் செய்ய கோரியபடி, தற்காலிக நிவாரணமாக ரூ.7,033 கோடியும், நிரந்தர நிவாரண தொகையாக ரூ.12,659 கோடியும் விரைந்து வழங்குமாறு கோரிக்கை விடுத்தார்.
அதோடு, பேரிடரால் பாதிக்கப்பட்ட தென் மாவட்டங்களுக்கு அவசர நிவாரண நிதியாக ரூ.2,000 கோடியை விரைந்து வழங்குமாறும் பிரதமரை வலியுறுத்தினார். மத்திய அரசு சார்பில் அனுப்பப்பட்ட குழுவினர் தமிழ்நாட்டில், மழை வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்துவிட்டுச் சென்றனர். தமிழ்நாடு மழை வெள்ளத்தை தேசிய பேரிடராக அறிவிக்க முடியாது என நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
இதற்கிடையே, சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூபாய் 6,000 நிவாரண உதவி தமிழக அரசால் வழங்கப்பட்டது. மேலும், உயிர் பலி, படுகாயம், வீடுகள் இழப்பு ஆகியவற்றிற்கு ஏற்ப நிவாரணங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய 4 மாவட்டங்களை புயல் பாதித்த மாவட்டங்களாகவும், திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி, ராமநாதபுரம், விருதுநகர் ஆகிய மாவட்டங்களை வெள்ளம் பாதித்த மாவட்டங்களாகவும் அறிவித்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
-
அடி வெளுக்கப்போகும் கனமழை! 7 மாவட்டங்களுக்கு பறந்த அலர்ட்.. உஷார் மக்களே! -
50 கி.மீ வேகத்தில் காற்று.. இடி, மின்னலுடன் கொட்டப்போகும் பேய் மழை! 5 மாவட்டங்களுக்கு வார்னிங் -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை!












Click it and Unblock the Notifications