''ஒரு கையால் கொடுத்து.. மறு கையால் பறிப்பது நியாயமா?''.. எதை சொல்கிறார் டாக்டர் அன்புமணி ராமதாஸ்!
சென்னை: தமிழ்நாட்டில் மதுக்கடைகளை மூடி முழுமையான மதுவிலக்கை நடைமுறைப்படுத்த தமிழக அரசு முன்வர வேண்டும் என்று டாக்டர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். மக்கள் நோயின்றி, குடும்பத் தகராறுகள் இல்லாமல் வாழ மிகச்சிறந்த வழி மதுக்கடைகளை மூடுவது தான் என்று அவர் கூறியுள்ளார்.
தமிழ்நாட்டில் கடந்த ஒரு மாதமாக போடப்பட்டு இருக்கும் ஊரடங்கு காரணமாக கொரோனா வைரஸ் தொற்று தினம்தினம் குறைந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 13,000-க்கும் குறைவானவர்களே தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதனால் தமிழ்நாட்டில் கோவை, திருப்பூர் உள்ளிட்ட 11 மாவட்டங்களை தவிர மற்ற 27 மாவட்டங்களுக்கு கூடுதல் தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளன.

டாஸ்மாக் கடைகள் திறப்பு
கடந்த ஒரு மாத காலமாக மூடப்பட்டு இருந்த டாஸ்மாக் கடைகள் நேற்று முதல் மீண்டும் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் திறக்கப்பட்டுள்ளன. காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை டாஸ்மாக் கடைகள் திறக்க அனுமதிக்கப்பட்ட நிலையில் நேற்று முதல் நாளே வசூல் சாதனை நிகழ்த்தியது டாஸ்மாக் கடைகள். இதனால் 'குடி'மகன்கள் உற்சாகத்தில் திளைத்துள்ளனர்.

'குடி'மகன்கள் அலப்பறை
கொரோனா தடுப்பூசி போட கூட ஆர்வம் காட்டாத 'குடி'மகன்கள், தியேட்டர்களில் புதுப்படம் ரிலீசானால் ரசிகர்கள் வரவேற்பு கொடுப்பதுபோல் நேற்று டாஸ்மாக் கடைகளுக்கு பெரும் வரவேற்பு கொடுத்தனர். சூடம் சுத்தி, தேங்காய் உடைத்து என்று 'குடி'மகன்கள் அலப்பறை தாங்க முடியவில்லை.அதே வேளையில் டாஸ்மாக் திறக்கப்பட்டதற்கு அதிமுக, பாமக உள்ளிட்ட எதிர்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன.
|
அன்புமணி கண்டனம்
இதனை கண்டித்து வருகிற 17-ம் தேதி போராட்டம் நடைபெறும் என்று பாமக அறிவித்துள்ளது. இந்த நிலையில் பாமக இளைஞரணித் தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்ட டுவிட்டர் பதிவில் கூறி இருப்பதாவது:- தமிழ்நாட்டில் நேற்று ஒரு நாளில் 165 கோடிக்கு மது விற்பனை நடைபெற்றுள்ளது. தமிழகத்தில் நான்கில் மூன்று பங்கு கடைகள் தான் திறந்துள்ளன என்றாலும் வணிகம் மட்டும் கிட்டத்தட்ட இரு மடங்கு நடந்திருக்கிறது. அந்த அளவுக்கு மக்களை மதுவுக்கு அடிமையாக்கி வைத்துள்ளது அரசு.

மதுவிலக்கு வேண்டும்
கொரோனா நிதியுதவியாக ரூ.4200 கோடியை இந்த மாதத்தில் தமிழக அரசு வழங்கவுள்ளது. ஆனால், தினசரி 165 கோடிக்கு மது விற்றால் ஒரு மாதத்தில் ரூ.5000 கோடியை மக்களிடமிருந்து மதுவைக் கொடுத்து அரசு பறித்துக்கொள்ளும். ஒரு கையால் கொடுத்து மறு கையால் பறிப்பது என்ன நியாயம்? மக்கள் நோயின்றி, குடும்பத் தகராறுகள் இல்லாமல் வாழ மிகச்சிறந்த வழி மதுக்கடைகளை மூடுவது தான். அதனால் தமிழ்நாட்டில் மதுக்கடைகளை மூடி முழுமையான மதுவிலக்கை நடைமுறைப்படுத்த தமிழக அரசு முன்வர வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications