எய்தவர்களை விட்டுவிட்டு அம்பு மீது நடவடிக்கையா?- துப்பாக்கிச்சூடு 'ஆக்ஷன்' பற்றி கேஎஸ் அழகிரி பரபர!
சென்னை : தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு நடத்த காரணம் அரசிடம் இருந்து சுட சொல்லி வந்த உத்தரவு தான், இதில் தண்டனைக்குரியவர்கள் உத்தரவு போட்டவர்களா அல்லது அந்த உத்தரவை நிறைவேற்றியவர்களா என்பதை சிந்தித்து பார்க்க வேண்டும் என தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.
மேலும், தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கில் எய்தவர்களை விட்டு அம்புகள் மீது நடவடிக்கை எடுப்பதை அரசு பரிசீலிக்க வேண்டும் என்றும் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு தொடர்பான விசாரணைக்காக அமைக்கப்பட்ட அருணா ஜெகதீசன் ஆணைய அறிக்கையின் பரிந்துரைப்படி, துப்பாக்கிச்சூட்டில் சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரிகள், வட்டாட்சியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில், அரசின் நடவடிக்கையை விமர்சிக்கும் வகையில் காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கருத்து தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

துப்பாக்கிச்சூடு - அதிர்ச்சி அறிக்கை
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து விசாரணை நடத்த அமைக்கப்பட்ட அருணா கெஜதீசன் ஆணையத்தின் அறிக்கையில் பல்வேறு அதிர்ச்சிகரமான குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டுள்ளன. தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்குள் தீ வைக்கப்படுவதற்கு முன்பே அங்கு துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது, மக்கள் தப்பி ஓடும்போதும் அவர்களை போலீசார் குறிவைத்து சுட்டுக் கொன்றுள்ளனர் என்றும் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அதிரடி ஆக்ஷன்
அருணா ஜெகதீசன் ஆணைய பரிந்துரையின் அடிப்படையில் தமிழ்நாடு அரசு அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது. துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க தலைமைச் செயலாளர் உத்தரவிட்டார். அதன் பேரில் காவல் ஆய்வாளர் திருமலை, சுடலைக்கண்ணு, சங்கர், சதீஷ் ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மேலும், வட்டாட்சியர்கள் சந்திரன், சேகர், கண்ணன் ஆகிய மூன்று பேரும்ம் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மேலும் அப்போதைய தூத்துக்குடி டிஎஸ்பி லிங்கத் திருமாறனும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

கே.எஸ்.அழகிரி
இந்நிலையில், சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், "தூத்துக்குடி கலவரம் வருத்தத்துக்குரியது. போராட்டக்காரர்களுடன் வன்முறை கும்பலும் நுழைந்துவிட்டது. வன்முறையாளர்களை கையாளுவது மிகவும் சிரமமான விசயம். அரசு அதிகாரிகள் சிரமப்பட்டு கையாளுகின்றனர். துப்பாக்கிச்சூடு வரை சென்று இருக்க வேண்டுமா என்பது பலருடைய கருத்து எனத் தெரிவித்துள்ளார்.

அரசு உத்தரவின் பேரிலேயே
மேலும், எந்த ஒரு நிகழ்வு நடந்தாலும் அரசாங்கத்தின் உத்தரவின் பேரில் தான் நடக்கிறது. தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு நடத்த காரணம் அரசிடம் இருந்து சுடச் சொல்லி உத்தரவு வந்து உள்ளது. இதில் தண்டனைக்குரியவர்கள் அரசாங்கத்திலிருந்து உத்தரவு தந்தவர்களா அல்லது அந்த உத்தரவை நிறைவேற்றியவர்களா என்பதை பற்றி பொதுவாக சிந்தித்து பார்க்க வேண்டும்.

தண்டனைக்குரியவர்கள் யார்?
துப்பாக்கிச்சூடு தவறு என்பதில் மாற்றுக் கருத்தே கிடையாது. ஆனால் சுட்டவர்கள் அவர்களாகச் சுடவில்லை. அரசாங்கம் சொல்லி சுட்டுள்ளார்கள். இன்றைக்கு அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கிறோம் என்றால் நாளைக்கு அரசாங்கம் சொன்னால் செவிகொடுக்க வேண்டாம் என்று கூறுவதாக அர்த்தமாகும். விசாரணை செய்த நீதிபதி அதையும் யோசித்து இருக்க வேண்டும்.

யார் செய்தது குற்றம்?
குற்றம் அரசாங்கத்துடையது. அப்போது அதிகாரத்தில் இருந்தவர்களின் குற்றமே ஒழிய அவர்களின் உத்தரவை நிறைவேற்ற தான் அதிகாரிகள் இருக்கிறார்கள். இதுபோன்ற சிக்கலான விஷயத்தை தமிழக முதலமைச்சர் மீண்டும் நல்ல முறையில் பரிசீலிக்க வேண்டும். சட்டம்-ஒழுங்கும் தேவை, மனிதாபிமானமும் தேவை.

அம்பு எய்தவர்களை விட்டுவிட்டு
ஒரு நிகழ்வுக்கு யார் காரணமோ அவர்கள் மீது தான் நடவடிக்கை எடுக்க வேண்டும். எய்தவர்களை விட்டு அம்பின் மீது நடவடிக்கை எடுப்பது சரியானதல்ல. அம்பு, எய்தவர்கள் எந்த இலக்கை நோக்கி எய்கிறார்களோ அதை நோக்கியே செல்லும். அதற்கு வழங்கப்பட்ட உத்தரவும் கடமையும் அது தான். எங்கோ நெருடல் இருக்கிறது. அரசாங்கம் நன்றாக யோசிக்க வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார்.
-
எடப்பாடி சாமர்த்தியசாலியா.. அமித்ஷா சாமர்த்தியசாலியா.. அதிமுக கூட்டணியில் நடக்கும் எதார்த்தம் என்ன -
செக் வைத்த எடப்பாடி பழனிசாமி! அண்ணாமலை அப்செட்? தமிழக பாஜக வேட்பாளர் தேர்வு கூட்டத்தில் மிஸ்ஸிங்! -
எடப்பாடி ரொம்ப மாறிட்டாரே.. இது எதிர்பார்க்காத வேகம்.. அதே ஜெயலலிதா ஸ்டைல்.. கவனிச்சீங்களா? -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது












Click it and Unblock the Notifications