கோயம்பேடு மார்க்கெட்.. நெரிசலை தவிர்க்க புறநகர் பகுதியில் புதிய மார்க்கெட்.. அமைச்சர் தகவல்
சென்னை: கோயம்பேடு மார்க்கெட்டில் வியாபாரிகள் மொத்தமாக கூடுவதைத் தடுக்க புறநகர் பகுதியில் ஒரு மார்க்கெட் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் முத்துசாமி தெரிவித்துள்ளார்.
Recommended Video
கோயம்பேடு மார்க்கெட்டில் ஆய்வு செய்த அமைச்சர் முத்துசாமி கூறுகையில் முதல்வர் ஒவ்வொரு துறையாக ஆய்வு செய்து வருகிறார்கள்.
அந்த வகையில் கோயம்பேடு மார்க்கெட்டை பற்றி முதல்வர் பேசினார்கள். கோயம்பேடு மார்க்கெட்டில் பல பிரச்சினைகள் இருப்பதாக முதல்வருக்கு புகார்கள் வந்ததை அடுத்து என்னை அனுப்பி ஆய்வு செய்து எந்த மாதிரியான முன்னேற்றங்களை செய்யலாம் என்பதை கூறுமாறு தெரிவித்துள்ளார்.

மார்க்கெட்
இதன் காரணமாக கடந்த இரு நாட்களாக ஆய்வு செய்து வருகிறோம். நாங்கள் பேசியது 10 சதவீத பிரச்சினைகள் குறித்துதான். இன்னும் 90 சதவீதம் பிரச்சினைகள் பேசப்படாமல் இருக்கிறது. முதலில் இந்த மார்க்கெட் சுத்தமாக இருக்க வேண்டும்.

தொழிலாளிகள்
அடுத்தது ,மார்க்கெட்டில் உள்ள பற்றாக்குறை கண்டறிய வேண்டும். இங்கு வியாபாரிகளுக்கு கழிப்பிட வசதி மிகப் பெரிய பிரச்சினையாக இருக்கிறது. மார்க்கெட்டுக்கு வரும் வாகனங்களை ஒழுங்குப்படுத்த வேண்டும். இங்கு பணியாற்றும் தொழிலாளிகளை தவிர வேறு யாரும் இந்த இடத்தை தவறாக பயன்படுத்தக் கூடாது.

மார்க்கெட்
இதை கட்டுப்படுத்தவும் எப்படி நடவடிக்கை எடுப்பது என்பது குறித்து ஆலோசனை செய்து வருகிறோம். இப்படி அனைத்து மார்க்கெட்டுகளையும் ஆய்வு செய்து வருகிறோம். கோயம்பேடு மார்கெட்டில் வியாபாரிகள் மொத்தமாக கூடுவதைத் தடுக்க புறநகர் பகுதியில் ஒரு மார்க்கெட் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

முதல் அலை
கோயம்பேடு மார்க்கெட்டில் கடந்த முதல் அலையின் போது ஏராளமான வியாபாரிகள், வாடிக்கையாளர்கள் கொரோனா பாதிப்பால் அவதியடைந்தார்கள். கிட்டதட்ட இந்த இடம் ஒரு கொரோனா பரவும் ஹப்பாகவே இருந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது இரண்டாவது அலை, டெல்டா வேரியன்ட், மூன்றாவது அலை என அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது.












Click it and Unblock the Notifications