தமிழக அரசு வெளியிட்ட மகிழ்ச்சி அறிவிப்பு.. காலையில் இருந்து ரேஷன் கடைகளில் குவியும் மக்கள்!
பொங்கல் பரிசு தொகுப்புகளை இன்று முதல் ரேஷனில் பெற்று கொள்ளலாம்
சென்னை: தமிழக அரசு வழங்கும் பொங்கல் பரிசு தொகுப்பு பெறாத தகுதியுள்ள அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்காகவே, தற்போது முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகி உள்ளது.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு தமிழக அரசு 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசுத் தொகுப்பு அறிவிக்கப்பட்டது.
அதன்படி, சுமார் 2.15 கோடி அரிசி குடும்ப அட்டைதாரர்கள், இலங்கை தமிழர் மறுவாழ்வு மையங்களில் வசிப்போர்களுக்கு 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது..

கரும்பு
இதில், கரும்பு, பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை, ஏலக்காய், பாசிப்பருப்பு, நெய் மற்றும் பண்டிகைக் கால சமையலுக்குத் தேவையான மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித் தூள், கடுகு, சீரகம், மிளகு, புளி, கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பு, ரவை, கோதுமை மாவு, உப்பு ஆகிய மளிகைப் பொருட்களும் அடங்கிய துணிப்பை வழங்கப்பட்டு வருகிறது. இம்மாத இறுதி வரை பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும் என்று ஏற்கனவே அறிவிப்பும் வெளியாகியிருந்தது.

ஊழியர்கள்
ஆனால், பொங்கல் பரிசு பொருட்கள் மண்டல கிடங்குகளில் இருந்து ரேஷன் கடைகளுக்கு கொண்டு செல்வதில் சில இடங்களில் தாமதம் ஏற்பட்டது... மேலும், சிலர் சொந்த ஊர்களுக்கு சென்றதால் குறிப்பிட்ட நாளில் பொங்கல் பரிசு தொகுப்பு பெற முடியாத சூழலும் ஏற்பட்டது.. அதனால், தமிழக அரசு அரசு வழங்கும் பொங்கல் பரிசுத் தொகுப்பு பெறாத தகுதியுள்ள அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் விதமாக தமிழக அரசு ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

விடுமுறை
ஞாயிற்று கிழமை முழு லாக்டவுன் காரணமாக நேற்று ரேஷன் கடைகளில் பொருள்கள் விநியோகம் செய்யப்படவில்லை என்பதால், இன்று முதல் தமிழகம் முழுவதும் பொங்கல் பரிசுத் தொகுப்பினை இதுவரை பெறாதவா்கள் அனைத்து நியாய விலைக் கடைகளிலும் பெற்றுக் கொள்ளலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பான செய்திக்குறிப்பு ஒன்றையும் வெளியிட்டுள்ளது.

பரிசு தொகை
அதில், "பொங்கல் பரிசுத் தொகுப்பு வர வேண்டிய நிலுவையிலுள்ள நியாய விலைக் கடைகளுக்கு பொருள்கள் அனைத்தும் ஞாயிற்றுக்கிழமை வழங்கப்பட்டன. அன்றைய தினம் நியாய விலைக் கடைகளை மட்டும் திறந்து கூட்டுறவு சங்கங்களின் மூலமாக பொருள்களைப் பெற்று இறக்கி வைக்கும் பணிகள் நடைபெற்றன. இதைத் தொடா்ந்து, இதுவரை பொங்கல் பரிசுத் தொகுப்பு பெறாத அரிசி குடும்ப அட்டைதாரா்கள் அனைவரும் திங்கள்கிழமை காலை 7 மணி முதல் அனைத்து நியாய விலைக் கடைகளில் இருந்தும் பெற்றுக் கொள்ளலாம்" என்று தெரிவித்துள்ளது. அதன்படி, பொதுமக்கள் காலை முதல் ரேஷன் கடைகளில் குவிந்து வருகின்றனர்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
இந்த லட்சணத்துல உங்களுக்கு பொ.செ பதவி வேற வேணுமா? தேர்தல் தோல்விக்குப் பின் ஸ்டாலின் ஆவேசம் -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
Ilaiyaraja Birthday: ராஜாவின் ராஜாங்கம் தொடரட்டும்! இளையராஜாவுக்கு ஸ்டாலின் வாழ்த்து -
ராஜாக்கள் மந்திரியானால் இப்படித்தான்! டி.ஆர்.பி ராஜாவுக்கு எதிராக கிளம்பிய மா.செ.க்கள்! -
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
சந்தீப் ராய் ரத்தோருக்கு புதிய பொறுப்பு.. சிறைத்துறை டிஜிபியாக நியமனம் -
திமுக தொண்டர்களுக்கு டபுள் ட்ரீட்.. கருணாநிதியின் 103வது பிறந்தநாள் விழாவில் ஸ்டாலின் மெகா விழா -
அப்பன் மகனுக்கு சம உரிமை கொடுக்க இது என்ன குடும்ப சொத்தா? கே.என்.நேரு குறித்து திருச்சி சூர்யா -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
புதிய ஆட்சிக்கு இது அழகல்ல.. தென் மாவட்டங்களில் தொடர் சாதிய வன்முறைகள்! கொதித்து பேசிய பா ரஞ்சித் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய்












Click it and Unblock the Notifications