எழுவர் விடுதலை.. ஜனாதிபதியின் முடிவுக்காக காத்திருக்கிறோம்.. உயர் நீதிமன்றத்தில் அரசு பதில்
சென்னை : முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனைக் கைதிகள் 7 பேர் விடுதலை விவகாரத்தில் குடியரசுத்தலைவரின் பதிலுக்காக காத்திருப்பதாக உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் அரசு தெரிவித்துள்ளது.
அருப்புக்கோட்டையைச் சேர்ந்தவர் ரவிச்சந்திரன். இவர் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் மதுரை மத்தியச் சிறையில் 29 ஆண்டுகளாக ஆயுள் தண்டனை அனுபவித்து வருகிறார்.

இவர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அவர் தாக்கல் செய்த மனுவில், ''ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 29 ஆண்டுகளாக சிறையில் உள்ளேன். 14 ஆண்டுகள், 20 ஆண்டுகள் சிறையில் இருந்த பலர் முன்கூட்டியே விடுதலை செய்யப்பட்டுள்ளனர். ஆனால் என்னை விடுதலை செய்யவில்லை. தொடர் சிறை வாசம் காரணமாக மன உளைச்சல் ஏற்படுவதுடன் உடல் நலனும் பாதிக்கப்பட்டு வருகிறது.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேரை விடுதலை செய்வது தொடர்பாகத் தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் தமிழக ஆளுநரின் ஒப்புதலுக்காகக் காத்திருக்கிறது. இந்தத் தீர்மானத்தின் மீது ஆளுநர் விரைவில் முடிவெடுக்க வேண்டும் என மனு அளித்தும் பலனில்லை.
தமிழகச் சிறைகளிலுள்ள 1,600 ஆயுள் தண்டனைக் கைதிகளின் முன் விடுதலை தொடர்பான மனுக்கள் பரிசீலிக்கப்பட்டுள்ள நிலையில் எங்கள் மனுக்கள் பரிசீலனைக்கு எடுக்கப்படாமல் உள்ளன. எனவே, 7 பேர் விடுதலை தொடர்பாக சட்டப்பேரவைத் தீர்மானத்தின் மீது விரைவில் முடிவெடுக்க உத்தரவிட வேண்டும்''. எனக் கோரியிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் பாரதிதாசன், நிஷாபானு அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் அரசு தரப்பில் வைக்கப்பட்ட வாதத்தில், ''மனுதாரர் சம்பந்தப்பட்ட வழக்கில் சிறையில் இருக்கும் நளினி, முன்விடுதலை கோரி தாக்கல் செய்த வழக்கைச் சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. ஏழு பேர் விடுதலை விவகாரம் குடியரசுத் தலைவரின் முடிவுக்காக, தற்போது காத்திருப்பில் உள்ளது'' என்று தெரிவித்தார்.
இதையடுத்து நீதிபதிகள், ''மனுதாரர் கோரிக்கை தொடர்பாக நீதிமன்றம் எந்த முடிவும் எடுக்க முடியாது. அவரது கோரிக்கை தொடர்பாக ஏதாவது முடிவெடுக்கப்படும் நிலையில் அந்த முடிவின் மீது மனுதாரர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரலாம்'' என்று கூறி விசாரணையை 2 வாரங்களுக்கு ஒத்தி வைத்தனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications