சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

விவசாயிகள் கவனத்திற்கு! வாய்ப்பை நழுவ விடாதீங்க! விளைபொருட்களுக்கு நல்ல விலை பெற வழி!

Google Oneindia Tamil News

சென்னை: விவசாயிகள் மின்னணு தேசிய வேளாண் சந்தைகளை பயன்படுத்தி தங்கள் விளைபொருட்களுக்கு நல்ல விலை பெற்று பயனடையுமாறு அரசு கேட்டுக்கொண்டுள்ளது.

e-NAM போர்ட்டலில் வர்த்தகம் செய்வதற்கு வசதியாக வர்த்தகர்கள் மற்றும் FPO களுக்கு இதுவரை 4794 USL வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பின் விவரம் வருமாறு;

ரூ.1 தக்காளி, ரூ.2 வெண்டைக்காய்.. “கேரள மாடலை” பின்பற்றுங்க! விவசாயிகள் ரொம்ப பாவம் -ராமதாஸ் ரூ.1 தக்காளி, ரூ.2 வெண்டைக்காய்.. “கேரள மாடலை” பின்பற்றுங்க! விவசாயிகள் ரொம்ப பாவம் -ராமதாஸ்

மின்னணு வேளாண் சந்தை

மின்னணு வேளாண் சந்தை

இதுவரை ரூ.1909.86 கோடி மதிப்பிலான 38.07 இலட்சம் எண்கள் தேங்காய் மற்றும் 91.32 இலட்சம் குவிண்டால் இதர வேளாண் விளைபொருள்கள் தேசிய மின்னணு வேளாண் சந்தையின் மூலம் பரிவர்த்தனை செய்யப்பட்டு ரூ.1458.79 கோடி மின்னணு வலைதளத்தின் வாயிலாக 5,13,681 விவசாயிகளுக்கு மின்னணு பணப்பரிவர்த்தனை செய்யப்பட்டுள்ளது. இந்த மின்னணு வர்த்தகத்தின் மூலம் வர்த்தகத்தில் வெளிப்படைத்தன்மை, விவசாயிகளுக்கு நல்ல விலை, விரைவு ஏல முறை, விளைபொருட்களின் தரத்திற்கேற்ற விலை மற்றும் மின்னணு பணப்பரிவர்த்தனை மூலம் விவசாயிகளின் வங்கிக்கணக்கில் நேரடியாக பணம் செலுத்துதல் ஆகியவை உறுதி செய்யப்பட்டுள்ளது.

 வணிகர்கள் -விவசாயிகள்

வணிகர்கள் -விவசாயிகள்

வணிகர்கள் மற்றும் விவசாயிகளுக்கு விரிவாக்கப்பட்ட சந்தை அணுகலை வழங்க, மாநிலத்தில் ஒருங்கிணைந்த ஒற்றை உரிமம் அறிமுகப்படுத்தப்பட்டது, இதனால் விவசாயிகள் சிறந்த விலையைப் பெற முடியும் மற்றும் வணிகர்கள் மாநிலத்தை ஒரே சந்தையாக அணுக முடியும். ஒவ்வொரு மாநிலத்திற்கும் அதன் சொந்த செயல்பாடு இருப்பதால், வர்த்தகர்கள் மாநிலங்களுக்கு இடையேயான வர்த்தகம் செய்வது சிரமமாக உள்ளது. e-NAM போர்ட்டலில் வர்த்தகம் செய்வதற்கு வசதியாக வர்த்தகர்கள் மற்றும் FPO களுக்கு இதுவரை 4794 USL வழங்கப்பட்டுள்ளது.

இ-நாம் வர்த்தகம்

இ-நாம் வர்த்தகம்

ஆகஸ்ட் 2, 2019 முதல் சந்தைகளுக்கு இடையேயான இ-நாம் வர்த்தகம் தொடங்கப்பட்டது. இதுவரை ரூ.10394 இலட்சம் மதிப்பிலான 63371 தேங்காய்கள், 99001 மெட்ரிக் டன் இதர விளைபொருட்கள் வர்த்தகம் செய்யப்பட்டுள்ளது. இ-நாம் இல் உழவர் உற்பத்தியாளர் அமைப்புகளை இணைக்க, தமிழகத்தின் 108 FPOக்கள் இ-நாம் போர்ட்டலில் பதிவு செய்யப்பட்டுள்ளன. இ-நாம் இன் கீழ் FPO வர்த்தகம் மார்ச் 2018 முதல் தொடங்கப்பட்டது. 188 பரிவர்த்தனைகள் செய்யப்பட்டுள்ளன. 10667 Qtl விளைபொருட்கள் இ-நாம் சந்தைகளில் ரூ.176.19 லட்சம் மதிப்பில் பரிவர்த்தனை செய்யப்பட்டுள்ளன.

நல்ல விலை

நல்ல விலை

விவசாயிகள் இ-நாம் தளத்தின் வாயிலாக சந்தைகளுக்கு இடையேயான வர்த்தகம் மற்றும் மாநிலங்களுக்கு இடையேயான வர்த்தகம் ஆகியவற்றை மேற்கொண்டு தங்கள் விளைபொருட்களுக்கு நல்ல விலை பெறலாம். மேலும், வர்த்தகர்களும் தரமான விளைபொருட்களை வாங்கி செல்ல இயலும்.
எனவே அனைத்து விவசாயிகளும் இந்த வாய்ப்பை பயன்படுத்தி, அருகில் உள்ள மின்னணு தேசிய வேளாண் சந்தைகளை பயன்படுத்தி தங்கள் விளைபொருட்களுக்கு நல்ல விலை பெற்று பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

English summary
The government has asked farmers to use electronic national agricultural markets to get good prices for their produce.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X