திமுக எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை - அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தடாலடி
சென்னை: திமுக மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. இந்த தேர்தலில் திமுக தோற்கும் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
Recommended Video
தமிழ்நாட்டில் ஊரக உள்ளாட்சிப் பதவிகளுக்கான தேர்தல் நடந்துமுடிந்துவிட்ட நிலையில், தற்போது மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி பகுதிகளுக்கு ஒரே கட்டமாக இன்று தேர்தல் நடைபெற்றுவருகிறது.
தமிழகத்தில் 2016-க்குப் பிறகு தற்போது தான் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுகிறது. தமிழ்நாட்டில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 489 பேரூராட்சிகளில் இன்று காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

ஜெயக்குமார்
சென்னை மந்தவெளி 126 வது வார்டில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தனது வாக்கினை பதிவு செய்தார். பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், ''திமுக மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. கொளத்தூரில் திமுகவினர் வாக்குச்சாவடியில் அத்துமீறி நுழைந்துள்ளனர். இதை ஏற்றுக்கொள்ள முடியாது. வாக்குச்சாவடிக்குள் திமுகவினர் சுவரொட்டி ஒட்டியுள்ளனர்.

பணப்பட்டுவாடா
அதிமுக பணத்தை நம்புவது இல்லை. திமுகவினர் பணப்பட்டுவாடாவில் ஈடுபட்டு வருகின்றனர். பூத் சிலிப்பை அரசு அலுவலர்கள் வழங்க வேண்டும். ஆனால் திமுகவினர் விநியோகம் செய்து வருகின்றனர். திமுக ஆட்சிக்கு வந்த 8 மாத துன்பங்களாக இருக்கிறது. அதிமுகவுக்கு வாக்காக மாறும். திருவான்மியூரில் பணப்பட்டுவாடாவில் பிடிபட்டவர்கள் அதிமுகவினர் கிடையாது.

கோயமுத்தூர்
கோவையில் தேர்தலில் கலவரம் செய்ய குண்டர்கள் குவிக்கப்பட்டதை கண்டித்து முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார். ஆனால், இதுவரை, குண்டர்கள் வெளியேற்றப்படவில்லை. தற்போதய நிலவரப்படி தேர்தல் அமைதியாக நடைபெற்று வருகிறது. இதே நிலை மாலை வரை நீடிக்க வேண்டும்'' என்று தெரிவித்தார் ஜெயக்குமார்.

வாக்குப்பதிவு
இதுவரை பெரிய அசம்பாவிதம் ஏதும் நடைபெறவில்லை, அமைதியாக வாக்குபதிவு நடைபெறுகிறது. வாக்கு எண்ணும் மையங்களுக்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது என்று சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார். சென்னையில் காலை 11 மணி நிலவரப்படி 17.88% வாக்குகள் மட்டுமே பதிவாகியுள்ள நிலையில், அனைவரும் வாக்களிக்க வருமாறு சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
-
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications