சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஊரடங்கு: எதற்கெல்லாம் அனுமதி.. வெளியூருக்கு செல்ல முடியுமா? வெளியானது தமிழக அரசின் புது ரூல்ஸ்!

எதற்கெல்லாம் அனுமதி என்ற விவரங்கள் வெளியாகி உள்ளது

Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தில் இரவு 10 மணி முதல் அதிகாலை 5 மணி வரை இரவுநேர ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.. இதையடுத்து தமிழக அரசு முக்கிய கட்டுப்பாட்டு விதிகளை அறிவித்துள்ளது..!

Recommended Video

    Tamil Nadu announces Sunday lockdown, Night Curfew | OneIndia Tamil

    தமிழகத்தில் தொற்று பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்து கொண்டே போவதால், லாக்டவுன் அமல்படுத்தப்படுமா என்ற எதிர்பார்ப்பு மக்களிடம் எழுந்தபடியே இருந்தது.

    சென்னையில் அதிகரிக்கும் கொரோனா.. 3 மண்டலங்கள் ஹாட்ஸ்பாட்டாகிறதா?.. டேட்டா சொல்வது என்ன? சென்னையில் அதிகரிக்கும் கொரோனா.. 3 மண்டலங்கள் ஹாட்ஸ்பாட்டாகிறதா?.. டேட்டா சொல்வது என்ன?

    இது சம்பந்தமாக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை கூட்டமும் தொடர்ந்து நடத்தப்பட்டு வந்தது.. அந்த வகையில், தமிழகத்தில் இரவு 10 மணி முதல் அதிகாலை 5 மணி வரை இரவுநேர ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.. இதையடுத்து தமிழக அரசு முக்கிய கட்டுப்பாட்டு விதிகளை அறிவித்துள்ளது..!

     விதிமுறைகள்

    விதிமுறைகள்

    இரவு ஊரடங்கு நேரத்தில் கடைகள், உணவகங்கள், வணிக வளாகங்கள், வணிக நிறுவனங்கள் செயல்பட அனுமதியில்லை. என்றும், கொரோனா பரவல் அதிகரித்துள்ளதால் தமிழ்நாட்டில் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது... மேலும், ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கால் வாரந்தோறும் சனிக்கிழமைகளில் கொரோனா தடுப்பூசி முகாம்கள் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது... அத்துடன், 1 முதல் 9ம் வகுப்பு வரை நேரடி வகுப்புகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

     நெறிபாட்டு விதிகள்

    நெறிபாட்டு விதிகள்

    பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் நலன் கருதி தடுப்பூசி செலுத்தப்பட்டு 10, 11, 12ஆம் வகுப்புகளுக்கு நேரடி வகுப்புகள் நடைமுறைப்படுத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது... இதனிடையே தமிழக அரசு புதிய நெறிபாட்டு விதிகளை அமல்படுத்தி உள்ளது.. அதன்படி எதற்கெல்லாம் அனுமதி அளிக்கப்படும், அனுமதி மறுக்கப்படும் என்ற தகவலையும் தெரிவித்துள்ளது. அது இதுதான்:

     போக்குவரத்து

    போக்குவரத்து

    மாநிலத்திற்குள் பொது மற்றும் தனியார் பேருந்து போக்குவரத்து சேவைகள்: மாநிலங்களுக்கிடையேயான பொது / தனியார் பேருந்து சேவைகள் (பயணத்தின் போது கொரோனா தடுப்பு நடவடிக்கைகளான முகக்கவசம் அணிதல், உடல் வெப்ப நிலையை பரிசோதனை செய்தல், கூட்ட நெரிசலைத் தவிர்த்தல் ஆகியவற்றை தவறாமல் பின்பற்றுவதை சம்பந்தப்பட்ட போக்குவரத்து நிறுவனங்கள் உறுதி செய்ய வேண்டும். ஓட்டுநர் மற்றும் நடத்துநர் இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தியிருப்பதை தொடர்புடைய போக்குவரத்து நிறுவன நிருவாகம் உறுதி செய்ய வேண்டும்.)

     மருத்துவ வசதிகள்

    மருத்துவ வசதிகள்

    அத்தியாவசியப் பணிகளான பால் விநியோகம், தினசரி பத்திரிக்கை விநியோகம், மருத்துவமனைகள், மருத்துவ பரிசோதனைக் கூடங்கள், மருந்தகங்கள், ஆம்புலன்ஸ் மற்றும் அமரர் ஊர்தி சேவைகள் போன்ற மருத்துவத்துறை சார்ந்த பணிகள், ATM மையங்கள், சரக்கு வாகனங்கள் மற்றும் எரிபொருள் வாகனங்கள் (petrol, diesel & LPG) இரவு நேரத்திலும் அனுமதிக்கப்படும்.

     டீசல் பங்குகள்

    டீசல் பங்குகள்

    பெட்ரோல் மற்றும் டீசல் பங்குகள் (Petrol/Diesel Bunks) 24 மணி நேரமும் தொடர்ந்து செயல்பட அனுமதிக்கப்படும்.
    உற்பத்தி தொழிற்சாலைகள், தகவல் தொழில்நுட்ப சேவை உள்ளிட்ட நிறுவனங்கள் செயல்பட அனுமதிக்கப்படும். பணிக்கு செல்லும் பணியாளர்கள் தொடர்புடைய நிறுவனங்களால் வழங்கப்பட்டுள்ள அடையாள அட்டை வைத்திருக்க வேண்டும். இருப்பினும் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் பணியாளர்கள் வீட்டிலிருந்து பணிபுரிய அறிவுறுத்துமாறு தொடர்புடைய நிறுவனங்களை கேட்டுக்கொள்ளப்படுகிறது.

     ஞாயிற்றுக்கிழமை

    ஞாயிற்றுக்கிழமை

    2) வரும் 9-1-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று தமிழகத்தில் முழு ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்படும். இருப்பினும் அத்தியாவசியப் பணிகளான மருத்துவப் பணிகள், மருந்தகங்கள், பால் விநியோகம், ATM மையங்கள், சரக்கு வாகனப் போக்குவரத்து மற்றும் பெட்ரோல் டீசல் பங்குகள் போன்றவை இயங்குவதற்கு அனுமதிக்கப்படும். பொதுப் போக்குவரத்து மற்றும் மெட்ரோ இரயில் ஆகியவை இயங்காது.

     பார்சல்கள்

    பார்சல்கள்

    9-1-2022 அன்று முழு ஊரடங்கின் போது, உணவகங்களில் பார்சல் சேவை மட்டும் காலை 7.00 மணி முதல் இரவு 10.00 மணி வரை அனுமதிக்கப்படும். உணவு டெலிவரி செய்யும் மின் வணிக நிறுவனங்கள் மேற்சொன்ன நேரத்தில் மட்டும் செய்லபட அனுமதிக்கப்படும். இதர மின் வணிக நிறுவனங்களுக்கு அனுமதி இல்லை.
    9-1-2022 மற்றும் வார நாட்களில் இரவு 10.00 மணி முதல் காலை 5.00 மணி வரை விமானம், இரயில் மற்றும் பேருந்துகளில் பயணிப்பதற்காக விமானம், இரயில் மற்றும் பேருந்து நிலையங்களுக்கு செல்ல சொந்த மற்றும் வாடகை வாகனங்களை பயன்படுத்திக் கொள்ள அனுமதிக்கப்படும். அவ்வாறு பயணிக்கும் போது, பயணச்சீட்டு வைத்து கொள்ள வேண்டும்.

     பயணிகள்

    பயணிகள்

    மெட்ரோ இரயிலில் 50% இருக்கைகளில் மட்டும் பயணிகள் அமர்ந்து பயணிக்க அனுமதிக்கப்படும். ஊரடங்கு காலத்தில் தொழிற்சாலைகளில் பணிபுரிபவர்கள் இரவு நேரப் பணிக்குச் செல்லும்போது தங்கள் அலுவலக அடையாள அட்டை மற்றும் தடுப்பூசி செலுத்திக் கொண்டமைக்கான சான்றிதழையும் வைத்துக்கொள்ளவேண்டும். ஏற்கெனவே அனுமதிக்கப்பட்டுள்ள பின்வரும் செயல்பாடுகள் ஊரடங்கு கட்டுப்பாட்டிற்குட்பட்டு அனுமதிக்கப்படும்.

    English summary
    Lockdown Rules: Night Curfew and general shutdown on sundays in Tamilnadu
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X