'கருணாநிதி 2007இல் கொண்டுவந்த சட்டம்.. மூலம் நீட்டை தடுக்கலாம்..' நீதிபதி ராஜனின் பழைய வீடியோ வைரல்
சென்னை: திமுக ஆட்சியில் கடந்த 2007இல் கொண்டுவரப்பட்ட நுழைவுத் தேர்வை ரத்து செய்யும் சட்டத்தைக் கொண்டு தமிழ்நாட்டில் நீட் தேர்வைத் தடுத்து நிறுத்த முடியும் என்று நீட் தேர்வு தொடர்பான குழுவின் தலைவராக அறிவிக்கப்பட்டுள்ள நீதிபதி ராஜன் பேசும் பழைய வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது.
MBBS மருத்துவ படிப்புகளுக்கான அகில இந்திய நுழைவுத் தேர்வை மத்திய அரசு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் அறிவித்தது.
நாட்டிலுள்ள தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையிலேயே மாணவ சேர்க்கை நடத்த வேண்டும் என்று அறிவிக்கப்பட்டது.

நீட் தேர்வு
இருப்பினும், நீட் தேர்வு காரணமாகக் கிராமப்புற, அரசு பள்ளி மாணவர்கள் மருத்துவர்கள் ஆக முடியாத ஒரு சூழல் ஏற்பட்டுள்ளதாக விமர்சனங்களும் முன் வைக்கப்படுகிறது. +2 பொதுத்தேர்வில் 1200க்கு 1176 மதிப்பெண்களைப் பெற்ற அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த அனிதா, நீட் தேர்வு காரணமாக மருத்துவக் கல்லூரியில் சேர முடியாமல் போனது. அனிதா தொடங்கி தமிழ்நாட்டில் மட்டும் 10க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் நீட் காரணமாகத் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

அனைத்து கட்சிகளும் ஒரே நிலைப்பாடு
தமிழ்நாட்டில் எதிரும் புதிருமாக இருக்கும் திமுக, அதிமுக தொடங்கி அனைத்து கட்சிகளும் நீட் தேர்வு விஷயத்தில் ஒரே நிலைப்பாட்டையே எடுத்துள்ளன. மத்திய அரசின் நீட் தேர்வுகளிலிருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு அளிக்க வேண்டும் எனத் தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஒரு மனதாகத் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது. இருப்பினும், அந்தத் தீர்மானத்திற்குக் குடியரசுத் தலைவரின் ஒப்புதல் இதுவரை கிடைக்கவில்லை. அதனால் இது சட்டமாகவில்லை.

திமுக வாக்குறுதி
இதன் காரணமாகத் தமிழ்நாட்டில் 2017ஆம் ஆண்டு முதல் நீட் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. சட்டசபைத் தேர்தல் பிரசாரத்தின் போதே, நீட் தேர்வை ரத்து செய்யத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று ஸ்டாலின் வாக்குறுதி அளித்திருந்தார். திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதியும் பல்வேறு இடங்களில் இதையே வலியுறுத்தியிருந்தார்.

ஏ கே ராஜன் தலைமையில் குழு
இந்நிலையில், கொரோனா பரவல் காரணமாக மாநிலத்தில் +2 தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக முதல்வர் ஸ்டாலின் நேற்று அறிவித்தார் . மேலும், கொரோனா காரணமாக நீட் தேர்வுகளையும் நடத்தக் கூடாது எனப் பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். இத்துடன் நிற்காமல் நீட் தேர்வால் ஏற்பட்ட பாதிப்பு மற்றும் மாணவர் சேர்க்கை குறித்து ஆராய ஓய்வு பெற்ற நீதிபதி ஏ கே ராஜன் தலைமையிலான குழு ஒன்றையும் அமைத்து முதல்வர் மு க ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

யார் இந்த ஏ கே ராஜன்
நீதிபதி ஏ கே ராஜன் ஏற்கனவே கடந்த 2006-11 காலகட்டத்தில் தமிழ்நாடு அரசின் சட்டத்துறை செயலாளராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். அந்த காலகட்டத்தில் அப்போது முதல்வராக இருந்த கருணாநிதியின் நம்பிக்கைக்குரிய அதிகாரிகளில் ஒருவராக ஏ கே ராஜன் இருந்தார். இந்நிலையில், நீட் தேர்வு தொடர்பாக அவரது பழைய வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது.

நுழைவுத் தேர்வை ரத்து செய்யும் சட்டம்
நிகழ்ச்சி ஒன்றில் பேசும் நீதிபதி ஏ கே ராஜன், "கடந்த 2007ஆம் ஆண்டு, தமிழ்நாடு முதல்வராகக் கருணாநிதி இருந்த போது, நுழைவுத் தேர்வை ரத்து செய்ய சட்டம் ஒன்று கொண்டுவரப்பட்டது. அந்தச் சட்டம் தற்போது வரை அமலில் தான் உள்ளது. அது செல்லுபடியாகும் ஒரு சட்டமே. இதனால் நீட் தேர்வு தமிழ்நாட்டில் செல்லாது என்பது என்னுடைய எண்ணம்.

நீட்டை தடுக்காலாம்
தற்போது நம்மிடம் இருக்கும் நுழைவுத் தேர்வு ரத்து செய்யும் சட்டத்தை மிகவும் நுணுக்கமாக நாம் ஆராய்ந்தால் இது வெளிப்படும். ஆனால், அரசு தான் இதை முன்னெடுத்துச் செல்ல வேண்டும். எந்தவொரு தனி மனிதராலும் இதை முன்னெடுத்துச் செல்ல முடியாது. சரியான வழக்கறிஞர்களைக் கொண்டு உச்ச நீதிமன்றத்தில் நாம் வாதிட்டால், கருணாநிதி 2007இல் இயற்றிய சட்டத்தைக் கொண்டு நீட் தேர்வைத் தமிழ்நாட்டில் தடுத்து நிறுத்தலாம் என்பதை எனது கருத்து" என்று பேசுகிறார்.

வைரலாகும் வீடியோ
நீட் தேர்வால் ஏற்பட்ட பாதிப்பு மற்றும் மாணவர் சேர்க்கை குறித்து ஆராய அமைக்கப்பட்ட குழுவின் தலைவராக ஏ கே ராஜன் அறிவிக்கப்பட்டது முதலே சமூக வலைத்தளங்களில் இந்த வீடியோ தான் டிரெண்டிங்கில் உள்ளது. நீட் தேர்வு எப்படி ரத்து செய்வது என்பது குறித்து அரசுக்கு ஆலோசனை வழங்க மிகச் சரியான ஒரு நபரையே தமிழ்நாடு அரசு நியமித்துள்ளதாகப் பலரும் சமூக வலைத்தளங்களில் பாராட்டி வருகின்றனர்.
-
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்? -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
"கோடம்பாக்கம் ஏரியா.. ஓட்டு கேட்டு வரியா".. விஜய் பாடலுக்கு நடனமாடிய அரசு பள்ளி தலைமையாசிரியை.. இப்போ வேலை போச்சே












Click it and Unblock the Notifications