• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

வரலாறு காணாத மிடில் கிளாஸ் தேர்தல்.. அதிக ஏழை வேட்பாளர்கள்.. திமுக, அதிமுகவுக்கு இதில் இடமில்லை!

|
  மாற்று அரசியலை முன்னெடுத்து வேட்பாளர்களை களமிறக்கிய கட்சிகள்- வீடியோ

  சென்னை: இப்படி ஒரு தேர்தலை தமிழகம் சந்தித்து ரொம்ப காலமாகிறது... இந்த தேர்தலில்தான் ஏழை வேட்பாளர்கள் நிறைய பேர் போட்டியிடுகிறார்கள்!

  காமராஜர், கக்கன் காலங்களில் வேட்பாளர்கள் ஏழைகளாகவே இருந்தாலும் தங்களது மனங்களால் மக்களை வென்றார்கள். அதனால் பணம் என்பது ஒரு பொருட்டாக மக்கள் இவர்களிடம் பார்க்கவில்லை.

  ஆனால் காலம் செல்ல செல்ல, சொத்துக்களின் மதிப்பை அறிந்து சீட் கொடுக்கும் நிலை உருவானது. இதனால் மக்களுக்கு சேவை செய்ய குணமிருந்தும், தேர்தலில் போட்டியிடாத நிலைமை ஏற்பட துவங்கியது.

  21 சட்டசபைத் தொகுதிகளில் திமுக வென்றால் தான் ஸ்டாலின் 'சிஎம்'... இல்லாவிட்டால் எடப்பாடிதான்!

   நேர்காணல்

  நேர்காணல்

  அப்படியே போட்டியிட்டாலும் பெரும்பாலும் தோல்வியே கையில் வந்து விழுந்தது! நேர்காணல் நடத்தும்போதுகூட "ஆயிரம், லட்சம் என்றெல்லாம் சும்மா ஒரு பேச்சுக்குகூட கிடையாது. ஸ்டிரைட்டா கோடிதான்.. எத்தனை கோடி இருக்கு.. என்பதை வைத்துதான் நேர்காணலே நடத்தப்படும் அவலம் ஏற்பட்டு வருகிறது.

   வித்தியாசம்

  வித்தியாசம்

  ஆனால் இதனை உடைத்து வெளியே வந்திருப்பது நாம் தமிழர் கட்சியும், மக்கள் நீதி மய்யமும்தான்! இவர்களின் நேர்காணலே வித்தியாசமாக இருந்தது. வேட்பாளர்கள் தேர்வோ அதைவிட வித்தியாசமாக இருந்தது.

   பண பலம்

  பண பலம்

  இந்த முறை திமுக, அதிமுக, காங்கிரஸ், பாஜக, பாமக, தேமுதிக , அமமுக போன்ற கட்சிகள் களம் இறங்கி உள்ளன. இவையெல்லாம் பணம், பலம் உள்ள கட்சிகளே... அதனால்தான் இந்த கட்சிகளில் உள்ள பணக்காரர்களான டாப் 30 வேட்பாளர்களின் பட்டியலும் வெளியானது.

   ஏழை வேட்பாளர்கள்

  ஏழை வேட்பாளர்கள்

  இதுபோலவே இப்போது டாப் 30 = ஏழை வேட்பாளர்கள் பட்டியல் ஒன்று வெளியாகி உள்ளது. இந்த பட்டியலை பார்த்தாலே ஆச்சரியமாக உள்ளது. சொந்தமாக வீடு, கார் இல்லாதவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். தங்கள் மாத வருமானத்தை நம்பி குடும்பத்தை ஓட்டுபவர்களாக உள்ளனர். இதில் பெரும்பாலும் நாம் தமிழர் கட்சி மக்கள் நீதி மய்யம், கம்யூனிஸ்ட் கட்சிகளை சேர்ந்தவர்கள்தான் உள்ளனர்.

   காளியம்மாள்

  காளியம்மாள்

  அதாவது திமுக, அதிமுக, பாமக, பாஜக, தேமுதிக, அமமுக போன்றோர் இந்த பட்டியலில் மருந்துக்குகூட இல்லை என்றே சொல்லலாம். இதில் 2 பெயர்கள் சொல்ல வேண்டி உள்ளது. முதலில் வடசென்னை நாம் தமிழர் கட்சி வேட்பாளர் காளியம்மாள். இவர் தன் பேச்சில் பலமுறை கலங்கி சொல்லி இருக்கிறார், "ஒருவேளை சாப்பாடு கூட நான் நன்றாக சாப்பிட்டது இல்லை".

   வெங்கடேசன்

  வெங்கடேசன்

  அதேபோல மக்கள் நீதி மய்ய தென்காசி வேட்பாளரோ, "சார்.. டெபாசிட்டுக்கு பணம் பத்தல.. 300 ரூபா கடனா தர முடியுமா" என்று தேர்தல் அதிகாரியிடமே கெஞ்சிய சம்பவமும் நடந்தது. இன்னும் இந்த 31 பேரில் எத்தனை பேர் தங்கள் கஷ்டங்களை மனதில் புதைத்து மக்களுக்காக சேவை செய்ய காத்திருக்கிறார்களோ தெரியாது.. ஆனால் அடிப்படையே மாற்ற முன்வந்துள்ள இவர்களின் கட்சி தலைவர்களுக்கு நிச்சயம் சபாஷ் போட்டே ஆக வேண்டும். இதோ அந்த 31 ஏழை வேட்பாளர்கள்:

  • சிவரஞ்சனி (நாம் தமிழர் கட்சி) ஸ்ரீபெரும்புதூர் தொகுதி ரூ. 15,000.
  • மதிவாணன் (நாம் தமிழர் கட்சியை) தென்காசி தொகுதி - ரூ 21,000 .
  • சாந்தி (நாம் தமிழர் கட்சி) பெரம்பலூர் தொகுதி- ரூ 1.11 லட்சம்.
  • மாலதி (நாம் தமிழர் கட்சி) நாகப்பட்டினம் தொகுதி - ரூ.1.19 லட்சம்
  • அன்பின் பொய்யாமொழி ( மக்கள் நீதி மய்யம்) விழுப்புரம் தொகுதி- ரூ.1.22 லட்சம்.
  • பாண்டியம்மாள் (நாம் தமிழர் கட்சி) மதுரை தொகுதி - ரூ.1.5 லட்சம்
  • வெற்றிச்செல்வி (நாம் தமிழர் கட்சி) திருவள்ளூர் தொகுதி - ரூ.3.10 லட்சம்.
  • சுபாஷினி (நாம் தமிழர் கட்சி) மயிலாடுதுறை தொகுதி - ரூ 5.25 லட்சம்.
  • சனுஜா (நாம் தமிழர் கட்சி) பொள்ளாச்சி தொகுதி - ரூ 5.5 லட்சம்.
  • சித்ரா (நாம் தமிழர் கட்சி) கடலூர் தொகுதி - ரூ.6.40 லட்சம்.
  • தீபலட்சுமி (நாம் தமிழர் கட்சி) வேலூர் தொகுதி - ரூ.6.58 லட்சம்.
  • சு.வெங்கடேசன் (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி) மதுரை தொகுதி - ரூ.7.7 லட்சம்.
  • புவனேஷ்வரி (நாம் தமிழர் கட்சி) ராமநாதபுரம் தொகுதி - ரூ.7 .93 லட்சம்.
  • செங்கொடி (அமமுக) நாகப்பட்டினம் தொகுதி - ரூ. 8.33 லட்சம்.
  • கல்யாணசுந்தரம் (நாம் தமிழர் கட்சி) கோவை தொகுதி - ரூ.8.55 லட்சம்.
  • மணிமேகலை (நாம் தமிழர் கட்சி) நீலகிரி தொகுதி - ரூ.9. 02 லட்சம்.
  • காளியம்மாள் (நாம் தமிழர் கட்சி) வட சென்னை தொகுதி - ரூ.9.17 லட்சம்.
  • எம். சிவஜோதி (நாம் தமிழர் கட்சி) சிதம்பரம் தொகுதி - ரூ 10.37 லட்சம்.
  • முனீஸ்வரன் (மக்கள் நீதி மையம்) தென்காசி தொகுதி - ரூ.10.96 லட்சம்.
  • பிரகலதா (நாம் தமிழர் கட்சி) விழுப்புரம் தொகுதி - ரூ.12.53 லட்சம்.
  • ருக்மணி தேவி (நாம் தமிழர் கட்சி) தருமபுரி தொகுதி - ரூ.13.7 8 லட்சம்
  • வடிவேல் ராவணன் (பாமக) விழுப்புரம் தொகுதி -ரூ. 19.25 லட்சம்.
  • ஸ்ரீ காருண்யா சுப்பிரமணியம் (மக்கள் நீதி மய்யம்) கிருஷ்ணகிரி தொகுதி - ரூ. 20.1 லட்சம்
  • அருள் (மக்கள் நீதி மய்யம்) திருவண்ணாமலை தொகுதி - ரூ.20.4 லட்சம்
  • தெகலான் பாகவி (எஸ்டிபிஐ) மத்திய சென்னை தொகுதி - ரூ.21.73 லட்சம்
  • விஜயபாஸ்கர் (மக்கள் நீதி மய்யம்) ராமநாதபுரம் தொகுதி- ரூ. 26.36 லட்சம்
  • பிரபு மணிகண்டன் (மக்கள் நீதி மய்யம்) சேலம் தொகுதி -ரூ. 27.5 லட்சம்
  • ரவி (மக்கள் நீதி மய்யம்) சிதம்பரம் தொகுதி- ரூ. 28.54 லட்சம்
  • தமிழரசி (நாம் தமிழர் கட்சி) ஆரணி தொகுதி - ரூ. 29.33 லட்சம்
  • ஏ.ஜெ.ஷெரின் (நாம் தமிழர் கட்சி) தென் சென்னை தொகுதி - ரூ. 34.66 லட்சம்
  • பாவேந்தன் (நாம் தமிழர் கட்சி) அரக்கோணம் தொகுதி - ரூ. 35.20 லட்சம்

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

   
   
   
  English summary
  EC has released TN poor Candidates list in MP Election. There are 31 Poor Candidates majority in MNN and Naam Tamizhar Party
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more