தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 5,000க்கு கீழே சென்றது- இன்று ஒருநாளில் 4,879 பேருக்கு தொற்று
சென்னை: தமிழகத்தில் திங்கள்கிழமையன்று மேலும் 4,879 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. மேலும் 5,165 பேர் கொரோனா சிகிச்சை முடிந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். கொரோனாவால் திங்கள்கிழமை மட்டும் 62 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்திய அளவில் கொரோனா பாதிப்பில் மகாராஷ்டிரா, ஆந்திரா, கர்நாடகாவுக்கு அடுத்ததாக 4-வது இடத்தில் தமிழகம் இருக்கிறது. தமிழகத்தில் திங்களன்று 4,879 பேருக்கு கொரோனா உறுதியானது. கடந்த ஒன்றரை மாதங்களில் முதல் முறையாக ஒருநாள் கொரோனா பாதிப்பு 5,000க்கும் கீழே சென்றிருக்கிறது.

6.61 லட்சம் பேருக்கு பாதிப்பு
இதனால் தமிழகத்தில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 6,61,264 ஆக அதிகரித்திருக்கிறது. மேலும் கடந்த 24 மணிநேரத்தில் மொத்தம் 62 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா மரணங்களின் மொத்த எண்ணிக்கை 10,314 ஆகவும் அதிகரித்திருக்கிறது.

5,165 பேர் டிஸ்சார்ஜ்
தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற 5,165 பேர் இன்று மருத்துவமனைகளில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். தமிழகத்தில் டிஸ்சார்ஜ் ஆனவர்கள் மொத்த எண்ணிக்கை 6,07,203 ஆகும்.

குறையும் ஆக்டிவ் கேஸ்கள்
தமிழகத்தில் மொத்தம் 43,747 பேர்தான் கொரோனாவுக்கு தற்போது சிகிச்சை (ஆக்டிவ் கேஸ்கள்) பெற்று வருகின்றனர். மாவட்டங்களில் சென்னையில் இன்று 1212 பேருக்கு திங்களன்று கொரோனா பாதிப்பு உறுதியானது.

மாவட்டங்களில்..
கோவையில் 393 பேருக்கும் சேலத்தில் 304 பேருக்கும் கொரோனா உறுதியானது. மாவட்டங்களில் சென்னையில் அதிகபட்சமாக 13 பேர் இன்று மட்டும் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். செங்கல்பட்டில் 7, திருவள்ளூரில் 7, கோவையில் 6 பேரும் கொரோனாவால் மாண்டுபோயினர்.
-
2029க்கு டார்கெட் செய்யும் விஜய்.. எப்படியாவது உள்ளே நுழைய வேண்டும்.. திமுக கொடுத்த கேப்.. ராகுல் முடிவு என்ன? -
இந்தியா கூட்டணியில் இனி திமுக இல்லை? காங்கிரஸின் செயலால் பாஜகவிற்கு மிகப்பெரிய ஜாக்பாட் -
"நாளைக்கு வரோம்.. களத்தை அதிர வைக்கிறோம்!" டெல்லியை மிரள வைக்க கிளம்பிய கரப்பான் பூச்சி கட்சி! -
புலிப் பாய்ச்சல்.. உலக அரங்கில் தலைநிமிரும் இந்தியா! எதிர்பார்ப்புகளை கடந்த பிரம்மாண்ட GDP வளர்ச்சி! -
2047ல் இந்தியா வல்லரசு.. வாய்ப்பில்லை ராஜா! இன்னும் 34 வருஷமாகும்.. உண்மையை உடைத்த ஆய்வறிக்கை! -
இந்தியா கையில் 5ம் தலைமுறை Su-57 போர் விமானம்.. ரஷ்ய அதிபர் புதினின் பெரிய ஆஃபர்.. மோடி ஏற்பாரா? -
"பொருளாதார சுனாமி.." ராகுல் சொன்ன அந்த ஒரு வார்த்தை.. சட்டென பாயிண்ட்டை பிடித்த பாஜக! மோதல் -
தமிழகத்திற்கு வரும் 100 நாள் வேலை திட்ட நிதியில் 60% கட்.. 'VB-G RAM G' திட்டத்தில் மெகா அதிர்ச்சி -
நாடு கடத்தப்படும் கரப்பான் பூச்சி கட்சி தலைவர்? ஏர்போர்ட்டில் வைத்தே கைது செய்யவும் திட்டம்? -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல்












Click it and Unblock the Notifications