Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தமிழகத்தில் ஒரே நாளில் 5,928 பேருக்கு கொரோனா; 96 பேர் உயிரிழப்பு- டிஸ்சார்ஜ் 6,031

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் ஒரேநாளில் 5,928 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று ஒரேநாளில் 96 பேர் கொரோனாவால் மரணம் அடைந்துள்ளனர். மேலும் 6,031 பேர் கொரோனா சிகிச்சைக்குப் பின்னர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

கொரோனா பாதிப்பில் இந்திய அளவில் மகாராஷ்டிரா, ஆந்திராவைத் தொடர்ந்து தமிழ்நாடு 3-வது இடத்தில் இருக்கிறது. தமிழகத்தில் செவ்வாய்க்கிழமை ஒரேநாளில் 5,928 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

மொத்தம்

மொத்தம்

இதனால் தமிழகத்தில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கையானது 4,33,969 ஆக உயர்ந்துள்ளது. மேலும் கடந்த 24 மணிநேரத்தில் மொத்தம் 96 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா மரணங்களின் மொத்த எண்ணிக்கை 7,418 ஆக அதிகரித்திருக்கிறது.

தற்போதைய ஆக்டிவ் கேஸ்கள்

தற்போதைய ஆக்டிவ் கேஸ்கள்

கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற 6,031 பேர் இன்று மருத்துவமனைகளில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு டிஸ்சார்ஜ் ஆனவர்கள் மொத்த எண்ணிக்கை 3,74,172. தமிழகத்தில் மொத்தம் 52,379 பேர்தான் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கோவையில் அதிக பாதிப்பு

கோவையில் அதிக பாதிப்பு

மாவட்டங்களில் சென்னையில் 1084 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. கோவையில் மொத்தம் 581 பேருக்கும் செங்கல்பட்டில் 384 பேருக்கும் கடலூரில் 286 பேருக்கும் சேலத்தில் 335 பேருக்கும் ஒரேநாளில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னை மாவட்டத்தில் மட்டும் ஒரேநாளில் 22 பேர் கொரோனாவால் உயிரிழந்தும் உள்ளனர்.

ஆக்டிவ் கேஸ்களில் 5வது இடம்

ஆக்டிவ் கேஸ்களில் 5வது இடம்

மொத்த கொரோனா பாதிப்பில் தமிழகம் 5-வது இடத்தில் இருக்கிறது. ஆனால் இந்திய அளவில் தற்போது கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கையில் தமிழகம் 5-வது இடத்தில்தான் இருக்கிறது. மகாராஷ்டிரா, ஆந்திரா, கர்நாடகா மற்றும் உத்தரப்பிரதேசங்களில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை, தமிழகத்தைவிட அதிகம். மகாராஷ்டிராவில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 2 லட்சத்தை நெருங்கியது. ஆந்திராவில் இது 1 லட்சத்தை தாண்டியுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+