தமிழகத்தில் இன்று 802 பேருக்கு கொரோனா தொற்று உறுதி-30 மாவட்டங்களில் உயிரிழப்பு இல்லை!
சென்னை: தமிழகத்தில் இன்று 802 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. மேலும் 12 பேர் இன்று கொரோனாவால் உயிரிழந்தனர். 30 மாவட்டங்களில் கொரோனாவால் உயிரிழப்புகள் ஏற்படவில்லை.
தமிழகத்தில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 1,000க்கு கீழ் இருந்து வருகிறது. கொரோனா மரணங்களும் வெகுவாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளன.
தமிழகத்தில் இன்று 1,01,764 பேருக்கு கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இதில் 802 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதுவரை தமிழகத்தில் 5,18,18,972 பேருக்கு கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

918 பேர் குணமடைந்தனர்
தமிழகத்தில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 27,15,632. இன்று மட்டும் 918 பேர் கொரோனா சிகிச்சைக்குப் பின்னர் வீடு திரும்பினர். இதுவரை மொத்தம் 26,69,848 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர். இன்று 12 பேர் கொரோனாவால் உயிரிழந்தனர். தமிழகத்தில் மொத்த கொரோனா மரணங்கள் எண்ணிக்கை 36,296.

30 மாவட்டங்களில் உயிரிழப்பு இல்லை
சென்னையில் இன்று 122 பேருக்கும் கோவையில் 123 பேருக்கும் கொரோனா பாதிப்பு இருந்தது. சென்னையில் கொரோனாவால் 4 பேரும் கோவையில் 2 பேரும் உயிரிழந்தனர். தமிழகத்தில் இன்று 30 மாவட்டங்களில் கொரோனாவால் உயிரிழப்புகள் இல்லை என்கிறது தமிழக சுகாதாரத்துறை புள்ளி விவரங்கள்.

தமிழக ஆக்டிவ் கேஸ்கள்
தமிழகத்தில் தற்போதைய நிலையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்றும் ஆக்டிவ் கேஸ்கள் எண்ணிக்கை 9,488. ஆக்டிவ் கேஸ்கள் எண்ணிக்கை நேற்று 9,616 ஆக இருந்தது. இந்தியாவில் இன்று காலை வரையிலான 24 மணிநேர நிலவரப்படி நேற்று மட்டும் 30,20,119 தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளன. நாட்டில் செலுத்தப்பட்ட மொத்தக் கொரோனா தடுப்பூசிகளின் எண்ணிக்கை, இன்று காலை 7 மணி நிலவரப்படி 112.34 கோடியைக் (1,12,34,30,478) கடந்தது.

இந்திய நிலவரம்
மத்திய, மாநில அரசுகளின் கூட்டு முயற்சிகளால், தினசரி கொரோனா பாதிப்பு தொடர்ந்து 141 நாட்களாக 50,000-க்கும் கீழ் உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 10,229 பேருக்குப் புதிதாகத் தொற்று ஏற்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 11,926 பேர் குணமடைந்துள்ளதால், இதுவரை குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 3,38,49,785 ஆக அதிகரித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா ஆக்டிவ் கேஸ்கள் எண்ணிக்கை 1,34,096 ஆக உள்ளது.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications