அலங்கார ஊர்தி: மத்திய அரசுக்கு இப்படி ஒரு வார்னிங் கொடுங்க முதல்வரே- அதிரும்ல...பழ.நெடுமாறன் அட்வைஸ்
சென்னை: குடியரசு தின விழா அணிவகுப்பில் பங்கேற்க அனுமதி மறுத்தால் இனி அந்த விழாவையே புறக்கணிப்போம் என மத்திய அரசுக்கு தமிழக முதல்வர் முக.ஸ்டாலின் எச்சரிக்கை விடுக்க வேண்டும் என்று உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன் வலியுறுத்தியுள்ளார்.
டெல்லி குடியரசு தின விழாவில் பங்கேற்க, விடுதலை வீரர்கள் வீரத்தாய் வேலுநாச்சியார், மாமன்னர்கள் மருதிருவர்கள், வ.உ.சி.தம்பரனார் உருவப் படங்களுடன் அலங்கார ஊர்தியை தமிழக அரசு ஏற்பாடு செய்தது. ஆனால் இதில் 7 முறை மாற்றம் செய்ய சொன்னது மத்திய அரசு அதிகாரிகள் குழு.

தமிழக அரசு ஊர்தி நிராகரிப்பு
இத்தனையையும் ஏற்று திருத்தங்கள் செய்த போதும் தமிழக அரசின் அலங்கார ஊர்திக்கு மத்திய அரசு அனுமதி மறுத்தது. மத்திய அரசின் இந்த போக்குக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் அனைவரும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். வ.உ.சி.வியாபாரி, ஜான்சிராணி போல இருக்கிறார் வேலுநாச்சியார், மருது சகோதரர்கள் தீவிரவாதிகள் என மத்திய அரசு அதிகாரிகள் கூறியிருப்பதாக கவிஞர் வைரமுத்து தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

நெடுமாறன் கன்டனம்
இந்நிலையில் உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன் இன்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: குடியரசு நாள் அணி வகுப்பில் பங்கேற்க தமிழ்நாடு, மேற்குவங்கம் மற்றும் சில மாநிலங்களின் அலங்கார ஊர்திகளுக்கு அனுமதி அளிக்க ஒன்றிய அரசு மறுத்திருக்கிறது. தமிழக வ.உ.சி., பாரதி, வேலுநாச்சியார், மருது சகோதரர்கள் போன்றவர்களின் உருவங்களும், மேற்குவங்கம் ஊர்தியில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் மற்றும் இந்தியத் தேசிய இராணுவம் ஆகியோரின் உருவங்களும் இடம்பெற்றிருந்தது அனுமதி மறுக்கப்பட்டிருப்பதற்குக் காரணமாகும். ஒன்றிய அரசின் இந்த நடவடிக்கையை நான் மிக வன்மையாகக் கண்டிக்கிறேன்.

அவமதிக்கும் பாஜக அரசு
இந்தியாவின் விடுதலையை வென்றெடுக்க அனைத்து மாநில விடுதலைப் போராட்ட வீரர்களும் புரிந்த ஈடு இணையற்ற தியாகம்தான் காரணமாகும். ஏதோ ஒருசில மாநிலங்களின் விடுதலை வீரர்கள் மட்டுமே இந்தியாவின் விடுதலைக்குக் காரணமாகக் கருதும் ஒன்றிய அரசின் போக்கு, விடுதலைக்காகப் போராடிய தியாக வீரர்களை அவமதிக்கும் போக்காகும்.

எச்சரிக்கை விடுங்க..
குடியரசு நாள் அணி வகுப்பில் பங்கேற்கும் ஊர்திகளைத் தேர்வு செய்யும் குழுதான் இதற்குப் பொறுப்பே தவிர, ஒன்றிய அரசு இதற்குப் பொறுப்பல்ல என அதிகாரி ஒருவர் கூறியிருப்பது பொறுப்பற்றப் போக்காகும். இந்தக் குழுவை ஒன்றிய அரசுதான் நியமித்திருக்கிறது. எனவே, குழுவின் செயல்களுக்கு அந்த அரசுதான் பொறுப்பேற்கவேண்டும். ஒன்றிய அரசின் இந்த தகாதப் போக்குத் தொடருமேயானால், டெல்லியில் நடைபெறும் குடியரசு நாள் அணி வகுப்பில் பங்கேற்க மறுக்கும் நிலை உருவாகும் என ஒன்றிய அரசுக்கு எச்சரிக்கை விடுமாறு தமிழக முதல்வரை வேண்டிக்கொள்கிறேன். இவ்வாறு நெடுமாறன் கூறியுள்ளார்.
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications