சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

பாஜகவின் கோயபல்ஸ் பிரச்சாரம் எடுபடாது.. கே.எஸ்.அழகிரி விளாசல்..!

Google Oneindia Tamil News

Recommended Video

    காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் அழகிரி பேட்டி-வீடியோ

    சென்னை: நாட்டின் பொருளாதாரம் அதல பாதாளத்தை நோக்கிச் செல்லும் நிலையில், அதனை சரிக்கட்டும் விவகாரத்தில் பிரதமர் மோடி தோல்வியடைந்து விட்டதாக தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்திருக்கிறார்.

    இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில்,

    மத்தியில் பாஜக ஆட்சி அமைந்து 100 நாட்கள் ஆகியுள்ள நிலையில் நாடு வளர்ச்சிப்பாதையில் சென்றுகொண்டிருக்கிறதா என ஆராய்ந்தால் அதிர்ச்சியும், ஏமாற்றமுமே மிஞ்சுவதாக கூறியுள்ளார். பணமதிப்பிழப்பு, அதிக ஜி.எஸ்.டி.வரி உள்ளிட்ட நடவடிக்கைகளால் பொருளாதார பேரழிவு ஏற்பட்டுள்ளதாக சாடியுள்ளார்.

    tncc president k.s.azhagiri statement about slams central govt

    மோடியின் நடவடிக்கையால் கருப்புப் பணமும் ஒழியவில்லை, கள்ளப்பணமும் ஒழியவில்லை என்றும், டிஜிட்டல் பரிவர்த்தனை ஊக்குவிப்பால் கிராமப்புற ஏழை எளிய மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறியிருக்கிறார் கே.எஸ்.அழகிரி.

    விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவோம் என்று வாக்குறுதி மோடி அளித்த நிலையில், விவசாய வளர்ச்சி வரலாறு காணாத வகையில் வீழ்ச்சியடைந்துள்ளதாக விமர்சித்திருக்கிறார். மேலும், மோடி தனது பேச்சுத்திறமையை கொண்டு முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் வேலையில் இறங்கியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

    தென்னிந்தியாவில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டம்?.. எல்லையில் பதற்றம்தென்னிந்தியாவில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டம்?.. எல்லையில் பதற்றம்

    பொருளாதார மந்தநிலையை மூடி மறைப்பதற்கு எத்தகைய கோயபல்ஸ் பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டாலும், அதில் பாஜகவினர் வெற்றி பெற முடியாது என்பதை தாம் தெரிவித்துக்கொள்வதாக கே.எஸ்.அழகிரி தமது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

    English summary
    tncc president k.s.azhagiri statement about slams central govt
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X