மின்சார வாரியம்.. புதிய மின் இணைப்பு பெற கட்டணம் திடீர் உயர்வு? இபி கனெக்ஷன் எடுக்க டெபாசிட் பணம்?
சென்னை: மின்சார ஒழுங்குமுறை ஆணையம் நிர்ணயத்தின்படி புதிய மின் கட்டணம் நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது.. இதில், வீட்டு நுகர்வோர்களுக்கான கட்டண செலவை தமிழக அரசு ஏற்றுக்கொண்டுள்ளது.. இந்நிலையில், புதிய மின் இணைப்பு பெறுவது, மின் இணைப்பு பெயர் மாற்றம் செய்வது உட்பட, பல்வேறு சேவைகளுக்கான கட்டணங்களை, 3.16 சதவீதம் உயர்த்தி, தமிழக மின்சார ஒழுங்குமுறை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் வீடு உள்பட அனைத்து பிரிவுகளுக்கும், மின் விநியோகம் செய்யும் பணியை, தமிழக மின்வாரியமே மேற்கொண்டு வருகிறது.. அதேபோல, மின் கட்டணம் நிர்ணயம் செய்யும் அதிகாரம், தமிழக மின்சார ஒழுங்குமுறை ஆணையம் வசம் இருந்து வருகிறது.

கடும் நிதி நெருக்கடி
மின் வாரியத்தின் கடும் நிதி நெருக்கடியை கருத்தில் கொண்டு கடந்த 2022ம் ஆண்டு மின் கட்டணம் என்பது உயர்த்தப்பட்டது. அதன்படி, வருடந்தோறும் ஜூலை 1ம் தேதி முதல் மின் கட்டணத்தை உயர்த்த ஆணையம் அனுமதி அளித்தது. அதன்படி 2025- 2026 நிதி ஆண்டுக்கான மின் கட்டண உயர்வு குறித்த அறிவிப்பை மின்வாரியம் வெளியிட்டது.
இதில், பெரிய தொழில் மற்றும் பெரு வணிக நிறுவனங்களுக்கு 3.16 சதவீதத்திற்கு மிகாமல் மின் கட்டணம் உயர்வு நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது. சிறு நிறுவனங்கள் மற்றும் குறைந்த தாழ்வழுத்த தொழிற்சாலைகள் மற்றும் 500 யூனிட்டுகளுக்கு மேல் பயன்படுத்தும் சிறு வணிகர்களுக்கு யூனிட்டுக்கு 20 காசுகள் உயர்த்தப்பட்டு ரூ7.15 உயர்த்தப்பட்டுள்ளது.
யூனிட்டுக்கு எவ்வளவு உயர்வு
உயர் அழுத்த மின்பயன்பாடு கொண்ட தொழிற்சாலைகள் மற்றும் தொழில் நிறுவனங்கள், ஐடி கம்பெனிகளுக்கு யூனிட்டுக்கு ரூ.25 காசுகள் உயர்த்தப்பட்டு, ரூ.7.50 காசுகளும், அரசு மற்றும் தனியார் கல்வி நிறுவனங்கள், ரயில்வே , மெட்ரோ ரயில்களுக்கு யூனிட்டுக்கு ரூ.25 காசுகள் விலை உயர்த்தப்பட்டு ரூ.7.75 காசுகளும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அதேபோல, கட்டிட பயன்பாட்டுக்கான மின் கட்டணம் ரூ.50 காசுகள் உயர்த்தப்பட்டு யூனிட்டுக்கு ரூ.13.25 காசு வரை விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
புதிய மின் இணைப்பு
இந்நிலையில், ஒரு முனைப் பிரிவில் மின் இணைப்புக்கான கட்டணம், 1,070 ரூபாயில் இருந்து, 1,105 ரூபாயாகவும்; மீட்டர் வைப்பு தொகை, 800 ரூபாயில் இருந்து, 825 ரூபாயாகவும் உயர்ந்துள்ளன.
வளர்ச்சி கட்டணம்,ரூ.3,000லிருந்து 3,095 ஆகவும், பதிவு கட்டணம், ரூ.215 லிருந்து 220 ஆகவும், வைப்பு தொகை, ரூ.320 லிருந்து 330 ஆகவும் அதிகரித்துள்ளன.
இதேபோல், மும்முனைப் பிரிவு மற்றும் உயரழுத்த பிரிவில், புதிய மின் இணைப்பு பெறுவதற்கான, பல்வகை கட்டணங்கள் உயர்த்தப்பட்டு உள்ளன.
இதுதவிர, தாழ்வழுத்த பிரிவில், வீடுகளில் தீயில் எரிந்த, சேதமடைந்த மீட்டரை மாற்றும் கட்டணம், ரூ.1,070 லிருந்து 1,105 ஆகவும், மின் இணைப்பு பெயர் மாற்றம் செய்வதற்கான கட்டணம், ரூ.645 லிருந்து 665 ஆகவும் அதிகரித்துள்ளன. இதேபோல், பல சேவைகளின் கட்டணங்கள் தாழ்வழுத்த, உயரழுத்த பிரிவுகளில் தனித்தனியே உயர்த்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
கடந்த வருடம் நிலவரம்
கடந்த வரும் மின்கட்டணம் மாற்றியமைக்கப்பட்டபோது, பெயர் மாற்றத்திற்கு ரூ.615லிருந்து ரூ.645ஆக உயர்த்தப்பட்டது.. மின் மீட்டரை மாற்றுவதற்கு ஒரு முனை இணைப்புக்கு ரூ.1070ஆகவும், மும்முனை இணைப்புக்கு ரூ.1510 ஆகவும் அதிகரித்திருந்தது.. இந்நிலையில், இந்த கட்டணங்களும் உயர்த்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
முதல் நாளே அமெரிக்காவுக்கு வெற்றி.. ஹார்முஸ் வழியாக 34 கப்பல்கள் சென்றன - டிரம்ப் பதிவு -
கைப்புள்ள, நாய் சேகர்னு எனக்கும் பட்ட பெயர் வைக்க தெரியும்! பிடிஆருக்கு சுந்தர் சி பதிலடி -
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
10 கோடி வீட்டை 100 கோடிக்கு விற்ற நடிகை மீனா.. சென்னையில் நில மதிப்பு ராக்கெட் போல் உயர்ந்த இடங்கள் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
வார்த்தையை விட்ட எடப்பாடி பழனிசாமி.. வரிந்து கட்டிய பிரேமலதா.. செல்போனில் காரசார உரையாடல் -
”5 கேப்டன் இருந்தும் என் பக்கத்துல இருக்கான் மச்சா” மும்பை அணியை செய்யும் சிஎஸ்கே! தெறிக்கும் மீம்ஸ் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
LIK vs TN 2026 box office: மூன்று நாள் முடிவில் பிரதீப் ரங்கநாதன் Vs நட்டி யாருக்கு வெற்றி? வசூல் நிலவரம் -
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
Tamil New Year Wishes in Tamil: சித்திரை திருநாளில் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் பகிர அழகிய படங்கள் -
ஜனநாயகன் லீக்.. இயக்குநர் அமீர் கருத்துக்கு வலுக்கும் எதிர்ப்பு.. ஆர்கே செல்வமணி விளக்கம்












Click it and Unblock the Notifications