TNPSC தேர்வர்களுக்கு முக்கிய அப்டேட்.. வெளியானது குரூப் 1 ஹால் டிக்கெட்.. 15 ஆம் தேதி தேர்வு!
சென்னை: டிஎன்பிஎஸ்சி (TNPSC) குரூப் 1 தேர்வுக்கான ஹால் டிக்கெட் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. டி.என்.பி.எஸ்சி இணையதளத்தில் ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். 90 பணியிடங்களுக்கான TNPSC குரூப் 1 முதல்நிலை தேர்வு ஜூன் 15 ஆம் தேதி நடைபெற உள்ளது
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (TNPSC) மூலம் தமிழக அரசின் பல்வேறு துறைகளில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்பப் போட்டித் தேர்வுகளை நடத்தி வருகிறது. அதன்படி குரூப் - 1, குரூப் - 2, குரூப் - 4 உள்ளிட்ட பல்வேறு தேர்வுகளைத் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தி வருகிறது.

அந்த வகையில் குரூப் - 1 தேர்வுக்கான அறிவிப்பு கடந்த ஏப்ரல் மாதம் வெளியிடப்பட்டது. அதில் துணை ஆட்சியர், காவல் துணை கண்காணிப்பாளர், வணிக வரித்துறை துணை ஆணையர், ஊரக வளர்ச்சித்துறை துணை இயக்குநர், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் மற்றும் தொழிலாளர் துணை ஆணையர் உள்ளிட்ட பதவிகளுக்கான 90 காலி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
அதோடு உதவி வனப் பாதுகாவலர் 2 காலியிடங்களுக்கான குருப் 1 ஏ அறிவிக்கையில் வெளியாகி இருந்தது. இதற்கான முதல் நிலைத் தேர்வு வரும் ஜூன் 15ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில் இந்த தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் ச. கோபால சுந்தர ராஜ் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், "தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் அறிவிக்கையின் படி நேரடி நியமனத்திற்கு, ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு-1 (தொகுதி-1 பணிகள்) மற்றும் ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு-1ஏ (தொகுதி- 1 ஏ பணி) - இல் அடங்கிய பதவிகளுக்கான பொதுவான முதல்நிலை தேர்வு 15.06.2025 முற்பகல் நடைபெற உள்ளது.
தேர்வு எழுத தற்காலிகமாக அனுமதிக்கப்பட்ட தேர்வர்களுக்கு தேர்வுக்கூட அனுமதிச்சீட்டு தேர்வாணையத்தின் இணையதளமான www.tnpscexams.in இல் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. தேர்வர்கள் தங்களுடைய ஒருமுறை பதிவுதளத்தின் மூலமாக மட்டுமே விண்ணப்ப எண், பிறந்த தேதி ஆகியவற்றை உள்ளீடு செய்து தேர்வுக்கூட அனுமதிச் சீட்டினை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
Gas bill: சென்னை பெருங்குடி ஹோட்டலில்! இட்லி, வடையுடன் கேஸ் சிலிண்டருக்கும் கட்டண வசூலா? உண்மை என்ன? -
திமுக மாணவரணி செயலாளராக முதல்முறையாக பெண் நிர்வாகி நியமனம்.. ராஜீவ் காந்தி திடீர் மாற்றம் -
அமெரிக்கா போட்ட தப்பு கணக்கு... ஈரான் விரித்த 'மொசைக்' வலை.. யார் இந்த முகமது அலி ஜாஃபரி? -
முகத்திற்கு நேராக மம்தா சொன்ன வார்த்தை! ஆளுநர் ரவியின் சிரிப்பு அப்படியே போச்சு! முதல் நாளே சம்பவம் -
160+ சீட்டில் எடப்பாடி பழனிசாமி யூடர்ன்.. சீனியர் லிஸ்ட்டை கிழித்து.. உளவுத்துறை மாஜி சொன்ன சீக்ரெட் -
2010ல் அதிமுக மாவட்ட பொறுப்பில் இருந்தேன்.. எடப்பாடியிடம் ஜனநாயகம் இருக்காம்.. காளியம்மாள் பேட்டி! -
ரஷ்யாவிற்கு சுக்கிர திசை.. அமெரிக்காவே திறந்து விட்ட புதிய வழி.. பல ஆயிரம் கோடி லாபம் கொட்டுகிறது -
தேமுதிகவால் திமுக கூட்டணியில் மற்ற கட்சிகளுக்கு நெருக்கடியா – ஒரே வார்த்தையில் முடித்த பிரேமலதா -
அமைதி வேண்டாம்! எங்களிடம் நீங்க நினைக்காத அஸ்திரம் உள்ளது! அதிர வைத்த புது சுப்ரீம் லீடரின் வார்னிங் -
தேமுதிக தொகுதிகளை குறைக்க திமுக பேச்சுவார்த்தை.. டென்ஷனில் பிரேமலதா விஜயகாந்த்.. ஸ்டாலினின் கேம்! -
உலகை கண்ட்ரோல் செய்யும் "நிழல்" கப்பல்கள்.. அப்போ நாம் கண்ணால் காண்பது எல்லாமே பொய்யா?












Click it and Unblock the Notifications