டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கு 18 லட்சம் பேர் விண்ணப்பம்... இன்றே கடைசி நாள் மிஸ் பண்ணிடாதீங்க
குரூப் 4 எழுத்துத் தேர்வுக்கு இதுநாள் வரையில் 18 லட்சம் பேர் இணைய வழி மூலம் விண்ணப்பம் செய்துள்ளதாக டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது
சென்னை: தமிழகத்தில் குரூப் 4 எழுத்துத் தேர்வுக்கு நேற்று மாலை வரையில் 18 லட்சம் பேர் இணைய வழி மூலம் விண்ணப்பம் செய்துள்ளதாக டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது. இன்றே கடைசி நாள் என்பதால் பல ஆயிரக்கணக்கானோர் விண்ணப்பிக்க வாய்ப்புள்ளது.
டிஎன்பிஎஸ்சி தலைவர் பாலச்சந்திரன் குரூப்-4 தேர்வுக்கான அறிவிப்பை கடந்த மாத இறுதியில் வெளியிட்டார். அதன்படி குரூப்-4 தேர்வானது வருகிற ஜூலை 24ஆம் தேதி நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதல்முறையாக நகர்ப்புற மேம்பாட்டு வாரியம் வீட்டு வசதி வாரியங்கள் உள்ள 163 பணியிடங்களுக்கு தேர்வு நடத்தப்படுகிறது. 80 பணியிடங்கள் விளையாட்டுப் பிரிவில் மூலம் நிரப்பப்படும் என்றும், இத்தேர்வு காலை 9.30 மணி முதல் 12 மணி வரை, மூன்று மணி நேரம் நடைபெறும் என்றும் அதன் தலைவர் பாலசந்திரன் தெரிவித்துள்ளார்.

7307 காலி பணியிடங்கள்
தமிழ்நாடு அமைச்சுப் பணி, தமிழ்நாடு நீதி அமைச்சுப் பணி, தமிழ்நாடு தலைமைச் செயலகப் பணி, தமிழ்நாடு சட்டமன்ற பேரவைச் செயலகப் பணி, தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரியம் தொழில்நுட்ப சார்நிலைப் பணி, தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய சார் நிலைப் பணிகளில் உள்ள 7301 காலிப்பணியிடங்களுக்கான தேர்வுகள் நடைபெற உள்ளன. இதற்கான, விண்ணப்பங்கள் தற்போது ஆன்லைன் மூலம் பெறப்பட்டு வருகின்றன.

விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்
விண்ணப்பதாரர்கள் www.tnpsc.gov.in/ www.tnpscexamsinஆகிய தேர்வாணையத்தின் இணையதளங்கள் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள். இன்றைய தினம் நள்ளிரவு 12 மணி வரை டி.என்.பி.எஸ்.சி தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்.

ஜூலை 24ஆம் தேதி தேர்வு
ஜூலை மாதம் 24ம் தேதி நடைபெறும் எழுத்துத் தேர்வின் முடிவுகளின் அடிப்படையில், விண்ணப்பதாரர் இணையவழிச் சான்றிதழுக்கு அனுமதிக்கப்படுவர். இதனையடுத்து, மூலச்சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்விற்கு அனுமதிக்கப்படுவர்.

கலந்தாய்வு
ஒவ்வொரு வகுப்புப் பிரிவுகளிலும் (ஆதிதிராவிடர், ஆதிதிராவிடர் அருந்ததியினர், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், பிற்படுத்தப்பட்ட இசுலாமிய வகுப்பினர், பொதுப் பிரிவினர்) நியமனம் செய்யப்படவுள்ள எண்ணிக்கையை விட இரண்டு மடங்கு விண்ணப்பித்தார்கள் கலந்தாய்விற்கு அனுமதிக்கப்படுவர். எனவே, எழுத்துத் தேர்வில் மாணவர்கள் அதிக கவனம் செலுத்துவது மிக முக்கியமானதாக கருதப்படுகிறது.

உதவி எண்கள் அறிவிப்பு
மார்ச் 30ம் தேதி முதல் நேற்று மாலை வரை 17.83 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
https://www.tnpsc.gov.in/ என்ற டிஎன்பிஎஸ்சி அதிகாரபூர்வ இணையதளத்தின் வாயிலாக விண்ணப்பித்து கொள்ளலாம். கூடுதல் விவரங்களுக்கு h[email protected] மற்றும் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிகள் அல்லது 1800-419-0958 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
தமிழ்நாட்டுக்கு பெரிய அடி.. ஆந்திராவுக்கு கைமாறிய மசாகான் டாக் திட்டம்! தொழில் அமைச்சருக்கு சிக்கல்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
கும்கி படம் எடுத்த தேனி கொட்டக்குடி கிராமத்தின் 56 வருட கனவு.. நிறைவேற்றிய தமிழக அரசு -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி












Click it and Unblock the Notifications