சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

இன்று பெரும் வேலைவாய்ப்பு முகாம்! 8 முதல் பட்டம் படித்தவருக்கு செம சான்ஸ்! முதல்வர் துவக்குகிறார்!

Google Oneindia Tamil News

சென்னை: செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூரில் இன்று மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. இந்த முகாமை முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்து பணி நியமன ஆணைகள் வழங்கினார்.

தமிழகத்தில் ஒவ்வொரு மாவட்டங்களிலும் வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் சார்பில் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது.

இந்த முகாம்கள் மூலம் ஏராளமானவர்களுக்கு தனியார் நிறுவனங்களில் பணி பெற்று கொடுக்கப்பட்டு வருகிறது.

கோரிக்கை வைத்து ஜஸ்ட் ஒரே நாள் தான்.. அதற்குள் ஆக்ஷனில் இறங்கிய முதல்வர்.. குவியும் பாராட்டுகள்! கோரிக்கை வைத்து ஜஸ்ட் ஒரே நாள் தான்.. அதற்குள் ஆக்ஷனில் இறங்கிய முதல்வர்.. குவியும் பாராட்டுகள்!

தனியார் வேலைவாய்ப்பு முகாம்

தனியார் வேலைவாய்ப்பு முகாம்

இந்நிலையில் செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூர் உயிரியல் பூங்கா அருகே உள்ள பிஎஸ் அப்துர் ரகுமான் கிரசன்ட் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தில் மாபெரும் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இந்த முகாமை செங்கல்பட்டு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் ஏற்பாடு செய்துள்ளது. இதில் 8 ம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரையும், ஐடிஐ, டிப்ளமோ, நர்சிங், பார்மஸி, பொறியியல் படித்து முடித்தவர்கள் பங்கேற்கலாம். இதில் 8 ம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரையும், ஐடிஐ, டிப்ளமோ, நர்சிங், பார்மஸி, பொறியியல் படித்து முடித்தவர்கள் பங்கேற்கலாம்.

 துவக்கிய முதல்வர்

துவக்கிய முதல்வர்

முகாமில் 400க்கும் அதிக முன்னணி தனியார் துறை நிறுவனங்கள் பங்கேற்று 50 ஆயிரம் பணியிடங்களை நிரப்ப உள்ளது. முகாமில் தேர்வாகும் நபர்களுக்கு இன்றே தனியார் நிறுவனங்கள் சார்பில் பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டு வேலை உறுதி செய்யப்பட்டு வருகிறது. இந்த முகாமை முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்தார். தனியார் நிறுவன பணிகளுக்கு தேர்வானவர்களுக்கு பணி நியமன ஆணைகளை அவர் வழங்கினார்.

41 ஆயிரம் பேருக்கு வேலை

41 ஆயிரம் பேருக்கு வேலை

அதன்பின் அவர் பேசினார். அப்போது ஸ்டாலின் கூறுகையில், ‛‛அனைவருக்கும் கல்வி, அனைவருக்கும் வேலை என்பதே அரசின் இலக்கு. பள்ளில கல்லூரி கல்வியை மேம்படுத்தி விரும்பும் வேலைக்கு மாணவர்கள் செல்ல தயார்படுத்தி வருகிறோம். திமுக ஆட்சிக்கு வந்த பிறகு 36 பெரிய வேலைவாய்ப்பு முகாம்கள், 297 சிறிய வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. 41 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைத்துள்ளது. இதில் 513 பேர் மாற்றுத்திறனாளிகள் ஆவார்கள் என்றார்.

 என்னென்ன ஆவணங்கள்

என்னென்ன ஆவணங்கள்

வண்டலூரில் நடக்கும் இந்த வேலைவாய்ப்பு முகாம் மாலை 3 மணி வரை நடக்கும். இந்த முகாமில் பங்கேற்பவர்கள் பாஸ்போர்ட் அளவு புகைப்படம், கல்வி சான்றுகள், ஆதார், அட்டை, பயோடேட்டோவுடன் கலந்து கொள்ளலாம். செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ளவர்கள் இதில் பயன்பெற முடியும். இதுதவிர முகாமில் பங்கேற்பவர்களுக்கு தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தால் இலவச திறன் பயிற்சிக்கான பதிவுகளும், வெளிநாடுகளில் பணிபுரிய விரும்புவோருக்கு அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தின் வாயிலாகப் பதிவுகள் செய்யப்பட உள்ளன.

போட்டி தேர்வு பயிற்சி

போட்டி தேர்வு பயிற்சி

முன்னதாக அரசு போட்டித்தேர்வுக்கான பயிற்சி வகுப்புகளையும் கல்வி தொலைக்காட்சியில் ஒளிபரப்புவதை முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைக்கிறார்.

English summary
Today CM Stalin inagurates Private job employment camp in chengalpattu and give appointment letters.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X