செம.. இல்லத்தரசிகளுக்கு ஹேப்பி நியூஸ்.. சென்னையில் மளமளவென சரிந்த தக்காளி விலை! எவ்வளவு தெரியுமா?
சென்னை: சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் தக்காளி விலை இன்று கிலோவுக்கு ரூ.30 குறைந்து விற்பனை செய்யப்படுவதால் இல்லத்தரசிகள் மகிழ்ச்சியடைந்துள்ள நிலையில் அங்கு விற்பனை செய்யப்படும் பிற காய்கறிகளின் விலை பட்டியல் தற்போது வெளியாகி உள்ளது.
இந்தியாவில் தொடர்ந்து காய்கறிகளின் விலைகள் உயர்ந்து வருகின்றன. குறிப்பாக தக்காளியின் விலை உச்சம் தொட்டது. இந்தியாவை பொறுத்தமட்டில் அவ்வப்போது வெங்காயத்தின் விலை உயர்ந்து மக்களை அச்சுறுத்தும்.

மாறாக இந்த முறை தக்காளியின் விலை யாரும் எதிர்பாராத வகையில் உயர்ந்துள்ளது. பல இடங்களில் தக்காளியின் விலை கிலோவுக்கு ரூ.200யை கடந்து விற்பனையாகி வருகிறது. தமிழ்நாட்டிலும் பல இடங்களில் தக்காளி விலை என்பது ரூ.150யை கடந்து மக்களை மிரட்டியது.
இதனால் ஏழைகள் முதல் பணக்காரர்கள் வரை அனைவரும் பிரச்சனையை எதிர்கொண்டனர். இதையடுத்து தமிழக அரசு சார்பில் ரேஷன் கடைகளில் குறைந்த விலைக்கு தக்காளி விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் தான் கடந்த சில நாட்களாக சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் உச்சத்தில் இருந்த தக்காளி விலை இன்று மளமளவென சரிந்துள்ளது.
அதன்படி சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் நேற்று ரூ.150க்கு விற்பனையான தக்காளி இன்று யாரும் எதிர்பாராத வகையில் ரூ.30 குறைந்து ரூ.120க்கு விற்பனையானது. கோயம்பேடு மார்க்கெட்டுக்கு தக்காளி வரத்து அதிகரித்துள்ளதால் விலை அதிரடியாக குறைந்துள்ளது. இதனால் இல்லத்தரசிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
மேலும் பீன்ஸ் நேற்று கிலோ ரூ.100க்கு விற்பனையான நிலையில் இன்று விலை குறைந்தது. அதன்படி இன்று ஒரு கிலோ பீன்ஸ் ரூ.90க்கு விற்பனையாகிறது. அதோடு பட்டாணி கிலோ ரூ.200க்கும், இஞ்சி கிலோ ரூ.210க்கும், பூண்டு ரூ.200க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
அதேபோல் வண்ண குடமிளகாய் கிலோ ரூ.180க்கும், மாங்காய், சின்னவெங்காயம் கிலோ ரூ.90க்கும், ஊட்டி கேரட், வாழைதண்டு, பச்சை குடமிளாகாய் உள்ளிட்டவை கிலோ ரூ.60, காராமணி கிலோ ரூ.50க்கும், பச்சை மிளகாய், பீர்க்கங்காய் கிலோ ரூ.45க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும் எலுமிச்சை, பாகற்காய், சேமகிழங்கு, சேனைக்கிழங்கு, அவரைக்காய் உள்ளிட்டவை கிலோ ரூ.40க்கும் விற்பனையாகிறது.
இதுதவிர ஊட்டி பீட்ரூட் கிலோ ரூ.38 க்கும், வெண்டைக்காய் கிலோ ரூ.35க்கும், உருளை ரூ.32க்கும், உஜாலா கத்தரிக்காய், முருங்கைக்காய், வரி கத்தரி ஆகியவை கிலோ ரூ.30க்கும், தேங்காய் ரூ.27 க்கும், கர்நாடகா பீட்ரூட் ரூ.26க்கும், கொத்தவரங்காய், காலிபிளவர் ரூ.25க்கும், வாழைப்பூ, 23க்கும், வெங்காயம் ரூ.2க்கும், சவ்சவ் , பெங்களூர் கேரளட், வெள்ளை பூசணி, மஞ்சள் பூசணி, முட்டைகோஸ், புடலங்காய், சுரக்காய், கருவேப்பிலை உள்ளிட்டவை ரூ.20க்கும், கோவைக்காய் ரூ.18 க்கும், முள்ளங்கி ரூ.15க்கும், வெள்ளரிக்காய் ரூ.15க்கும், வாழைக்காய் ரூ.8 க்கும், கீரை ரூ.6 க்கும், புதினா ரூ.4க்கும், கொத்தமல்லி ரூ.2 க்கும் விற்பனையாகி வருகிறது.












Click it and Unblock the Notifications