சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தமிழகத்தில் மிக குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற 20 வேட்பாளர்கள்... விவரம்

Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தில் மிக குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற 20 வேட்பாளர்களின் விவரத்தை இப்போது பார்ப்போம். தமிழகத்திலயே மிககுறைந்த வாக்கு வித்தியாசத்தில் சென்னை தியாகராயநகர் தொகுதியில் திமுக வேட்பாளர் ஜெ கருணாநிதி வெற்றி பெற்றுள்ளார்.

Recommended Video

    சென்னை: சொற்ப வாக்குகளில் மிஸ் சான வெற்றி… கவலையில் அதிமுக, திமுக விஐபிகள்!

    1.தியாகராயநகர் தொகுதியில் திமுக வேட்பாளர் ஜெ கருணாநிதி தன்னை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் சத்தியநாராயணனை 137 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளார்,

    2. மொடக்குறிச்சி தொகுதியில் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் சரஸ்வதி, தன்னை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளர் சுப்புலட்சுமி ஜெகதீசனை 281 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.

    அதிமுக கோட்டையில் திமுக கொடி... ஸ்டாலினிடம் சபாஷ் வாங்கிய திமுக மாவட்டச் செயலாளர்..!அதிமுக கோட்டையில் திமுக கொடி... ஸ்டாலினிடம் சபாஷ் வாங்கிய திமுக மாவட்டச் செயலாளர்..!

    மேட்டூர்

    மேட்டூர்

    3. தென்காசி தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் பழனி நாடார் தன்னை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் செல்வ மோகன்தான் பாண்டியனை 281 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து வெற்றி பெற்றார்.

    4. மேட்டூர் தொகுதியில் போட்டியிட்ட பாமக வேட்பாளர் சதாசிவம், தன்னை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளர் ஸ்ரீநிவாச பெருமாளை 656 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றார்.

    துரைமுருகன்

    துரைமுருகன்

    5. காட்பாடி தொகுதியில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் துரைமுருகன், தன்னை எதிர்த்து போட்டியிட்ட அஇஅதிமுக வேட்பாளர் வி ராமுவை 746 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

    6. கிருஷ்ணகிரி தொகுதியில் போட்டியிட்ட அஇஅதிமுக வேட்பாளர் அசோக்குமார் தன்னை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளர் செங்குட்டுவனை 794 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றார்.

    நெய்வேலி

    நெய்வேலி

    7. விருத்தாசலம் தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் ராதாகிருஷ்ணன் தன்னை எதிர்த்து போட்டியிட்ட பாமக வேட்பாளர் கார்த்திகேயனை 862 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தியுள்ளார்.

    8. நெய்வேலி தொகுதியில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் சபா ராஜேந்திரன், தன்னை எதிர்த்து போட்டியிட்ட பாமக வேட்பாளர் ஜெகனை 977 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து வெற்றி பெற்றார்.

    ஜோலார்பேட்டை

    ஜோலார்பேட்டை

    9.ஜோலார்பேட்டை தொகுதியில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் தேவராஜ் தன்னை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் கேசி வீரமணியை 1091 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றார்.

    10.கிணத்துக்கடவு தொகுதியில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் தாமேதரன் தன்னை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளர் குறிஞ்சி பிரபாகரனை 1095 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றார்.

    திருமயம்

    திருமயம்

    11. அந்தியூர் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட வெங்கடாச்சலம் தன்னை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் சண்முகவேலை 1275 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து வெற்றி பெற்றார்.

    12. திருமயம் தொகுதியில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் எஸ்.ரெகுபதி தன்னை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் பிகே வைரமுத்துவை 1382 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.

    எல்முருகன்

    எல்முருகன்

    13. தாராபுரம் தொகுதியில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் கயல்விழி தன்னை எதிர்த்து போட்டியிட்ட பாஜக வேட்பாளர் முருகனைவிட 1393 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.

    14. உத்திரமேரூர் தொகுதியில் திமுக வேட்பாளர் சுந்தர், தன்னை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் சோமசுந்திரத்தை 1622 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.

    15. பொள்ளாச்சி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்ட பொள்ளாச்சி வி. ஜெயராமன் தன்னை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளர் டாக்டர் வரதராஜனை 1622 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து வெற்றி பெற்றுள்ளார்.

    கோவை தெற்கு

    கோவை தெற்கு

    16. கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசன் தன்னை எதிர்த்து போட்டியிட்ட மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் கமல் ஹாசனை 1728 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து வெற்றி பெற்றுள்ளார்.

    17. கூடலூர் தொகுதியில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் பொன் ஜெயசீலன், தன்னை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளர் காசிலிங்கத்தை 1945 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.

    திருப்போரூர்

    18. திருபோரூர் தொகுதியில் போட்டியிட்ட விசிக வேட்பாளர் எஸ்எஸ் பாலாஜி, தன்னை எதிர்த்து போட்டியிட்ட பாமக வேட்பாளர் ஆறுமுகத்தை 1947 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.

    19. ராசிபுரம் தொகுதியில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் மதிவேந்தன் தன்னை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் சரோஜாவை 1952 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து வெற்றி பெற்றார்.

    20. மயிலம் தொகுதியில் போட்டியிட்ட பாமக வேட்பாளர் சிவகுமார், தன்னை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளர் டாக்டர் மயல்சாமியை 2230 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.

    English summary
    Top 20 candidates who won by lowest margin in the Tamil Nadu Assembly elections 2021. j karunanidhi ( tnagar ) dmk won by lowest margin in tamilnadu.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X