4.. 40.. "அச்சாரம்".. கிளம்பி வர்றாங்களாமே.. "மேலிடம்" கையில் பெரிய லிஸ்ட்.. சட்டென திரும்பிய திமுக
திமுக அரசுக்கு நெருக்கடி தருவதற்காக மெகா பிளான் ஒன்றை பாஜக முன்னெடுத்து வருகிறது
சென்னை: திமுக அரசுக்கு நெருக்கடியை தருவதற்காக மெகா பிளான் ஒன்றுடன் தமிழக பாஜக தயாராகி வருவதாக கூறப்படுகிறது.
தமிழக பாஜகவை பொறுத்தவரை, தனித்து போட்டியிட்ட வரலாறு கிடையாது.. திராவிட கட்சிகளின் முதுகில் சவாரி செய்தே தேர்தலை சந்திக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.
அதேசமயம், அந்த பலவீனத்தை வெளிக்காட்டிக் கொள்வதும் இல்லை.. அதிமுகவுக்கு தங்கள் பிரச்சனையை சமாளிக்கவே நேரம் போதவில்லை என்பதால், இதை பாஜகவும் சரியாக பயன்படுத்தி கொண்டு வருவதுடன், கட்சியும் வளர ஆரம்பித்துவிட்டது..

ப்ளான் 1
இப்போது அதிமுக மேலும் பலவீனப்பட்டுள்ள நிலையில், அதிமுக 2 ஆக உடைந்துள்ளது.. ஓபிஎஸ்ஸுக்கு ஆதரவு தந்து அவருடன் எடப்பாடி செல்வாரா? என்பது சந்தேகமாகவே உள்ளது.. இப்போது போலவே பிடிவாதம் தொடர்ந்தால், எடப்பாடி டீம் இல்லாமலேயே 3வது அணி அமைத்து பாஜக போட்டியிட்டாலும், ஆச்சரியப்படுவதற்கில்லை என்கிறார்கள்.. காரணம், எடப்பாடி பொறுப்பில் இருந்தவரை, பாஜகவுக்கு பெருமளவு சீட்டுகளையோ, தொகுதிகளையோ தந்ததில்லை.. மறைமுக எதிர்ப்பு அரசியல் காரணமாக பாஜகவுக்கான ஓட்டுக்களும் குறைந்துவிட்டதாகவே பாஜக நினைக்கிறது..

ப்ளான் 2
எனவே 3வது அணி அமைக்கவும் வாய்ப்புள்ளது என்றாலும், முடிந்தவரை எடப்பாடி தரப்பை சமாதானம் செய்யும் முயற்சியில் இறங்கி வருகிறது. இதற்காக, ஒன்றுபட்ட அதிமுகவுடன் கூட்டணி வைத்து அதிக இடங்களில் போட்டியிடுவது அல்லது பாஜக தலைமையில் திமுக, அதிமுக அல்லாத மற்ற கட்சிகளுடன் கைகோர்த்து மும்முனைப் போட்டியை ஏற்படுத்துவது என்ற 2 வித மாஸ் வியூகங்களையும் எடுத்துள்ளதாம். இதுகுறித்து தீவிர ஆலோசனையும் நடந்து வருவதாக சொல்கிறார்கள்.. மற்றொருபக்கம், "ஆபரேஷன் லோட்டஸ் - 75" என்ற பிளான் தங்களுக்கு பெரிதும் கைகொடுக்கும் என்று தமிழக பாஜக நம்புகிறதாம்..

அச்சாரம்
தமிழகத்தில் மத்திய அரசின் திட்டப் பணிகளில் ஆய்வுகளை மேற்கொள்ளவும், அதில் நடைபெறும் ஊழல்களை களையெடுக்க இந்த திட்டத்தை தீவிரப்படுத்தி உள்ளது.. அதன்படி, மாவட்ட வாரியாக அதிரடி சோதனைகளை நடத்தி, திமுக அரசுக்கு நெருக்கடி தர வேண்டும் என்பதே பாஜகவின் முதல் திட்டமாக இருக்கிறதாம். அதற்கு அச்சாரமாகத்தான் மத்திய அமைச்சர்களின் இந்த ஆய்வு அமையும் என்கிறார்கள்.. அடுத்த 20 நாட்களில் தமிழகத்துக்கு 50 மத்திய அமைச்சர்கள் வரப்போவதாகவும், மத்திய அரசின் திட்டங்கள் உரியமுறையில், உரியவர்களுக்கு போய்ச் சேர்ந்திருக்கிறதா என்பதை ஆய்வு செய்வதே அமைச்சர்கள் வருகையின் நோக்கம் என்றும் அண்ணாமலையும் தெரிவித்துள்ளார்..

கலெக்டர்கள்
எந்தெந்த அமைச்சர்கள் எந்தெந்த மாவட்டங்களுக்குப் போக வேண்டும் என்ற பக்கா திட்டத்துடனேயே கிளம்பி வரவிருக்கிறார்களாம்.. இன்னொன்றையும் சொல்கிறார்கள், மத்திய அரசின் திட்டங்கள் பலருக்கெல்லாம் கிடைக்கவில்லை என்ற லிஸ்ட்டையும், மாவட்ட வாரியாக தலைமைக்கு அனுப்பி இருக்கிறார்களாம்... அந்த லிஸ்ட்டைதான், மத்திய அமைச்சர்கள் தங்கள் கைகளில் கொண்ட வந்து, அந்தந்த கலெக்டர்களிடம் கேள்வி எழுப்ப போகிறார்களாம்... இது கலெக்டர்களுக்கு தலைவலியை உண்டுபண்ணும் என்கிறார்கள்.. இதுவரை தமிழகத்தில் 25 மத்திய அமைச்சர்கள் தர்மபுரி வேலுார் நாமக்கல் அரியலுார் உட்பட 20க்கும் மேற்பட்ட மாவட்டங்களுக்கு சென்று கலெக்டர் அலுவலகத்தில் முகாமிட்டு ஆய்வு நடத்தி உள்ளனர்...

4 + 40
இந்த வகையில் முறைகேடாக திட்டங்களை செயல்படுத்திய துறை அதிகாரிகள் ஆளுங்கட்சி நிர்வாகிகள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டிய நெருக்கடியும் திமுக அரசுக்கு மத்திய அமைச்சர்கள் கொடுப்பதற்கும் திட்டமிட்டுள்ளனராம். இதை எல்லாம் அனைத்தையும் கனகச்சிதமாக செயல்படுத்தினால், தற்போதுள்ள 4 எம்எல்ஏக்கள் என்ற எண்ணிக்கை 50 ஆகிவிடுமாம்.. அதற்கு பிறகு பாஜக தலைமையில் கூட்டணி ஆட்சி அமைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு, அதற்கு அடுத்த தேர்தலில் பாஜக தலைமையில் ஆட்சி அமைந்துவிடும் என்று அக்கட்சி பலமாக நம்பி உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
-
தேமுதிகவிற்கு 10 தொகுதிகள் ஏன்? பின்னணியில் 2 ஜாதிகளின் ஓட்டுகளுக்கு குறி.. ஸ்டாலின் போடும் கணக்கு -
2026 தேர்தல் யார் ஜெயிப்பார்கள்? ‘நீயா நானா’வில் ஜோதிடர்கள் உடைத்த ரகசியம்! பெண்கள் ஓட்டு, மறு எலக்சன் இருக்காமே! -
உடையும் கூட்டணி? திமுக முதுகில் குத்திய காங்கிரஸ்! நேருக்கு நேர் தோழமைகளுடன் மோதும் கதர் தலைகள்? -
ஸ்டாலின் வீசிய பிரம்மாஸ்திரம்.. கூட்டணி கட்சிகளுக்கு குறைவாக சீட் தந்து சமாளித்தது எப்படி? பின்னணி -
சிந்தாமல் சிதறாமல் அள்ள வேண்டும்.. ஸ்மார்ட்டாக காய் நகர்த்திய ஸ்டாலின்.. என்டிஏ கூட்டணிக்கு சேதாரம் -
தமிழகத்தில் மீண்டும் திமுக ஆட்சி.. கடும் போட்டி கொடுக்கும் அதிமுக! விஜய் நிலைமை.. வெளியான புதிய கருத்து கணிப்பு -
DMK - DMDK: திமுக - தேமுதிக தொகுதி பங்கீடு.. 10 இடங்கள் ஒதுக்கீடு! கூட்டணியில் 2வது பெரிய கட்சியானது -
கிங்-கும் இல்லை.. கிங் மேக்கரும் இல்லை.. விஜய் ‘ஜஸ்ட்’ ஒரு சத்தமா? ஸ்டாலின் ‘ரிப்பீட்’.. தவெக ஷாக் -
பெரம்பூரில் தனி வீடு வாங்கும் விஜய்.. 'அந்நியன்' இமேஜை உடைக்க மாஸ்டர் பிளான்.. களமிறங்கிய ப்ரோக்கர் -
15 ஆண்டுகளாக 1 சீட் கூட ஜெயிக்காத தேமுதிகவுக்கு 10 தொகுதிகளா? திமுக கூட்டணிக்குள் கொதிப்பு! -
கள்ளக்குறிச்சியை கையில் எடுத்த திருமாவளவன்! விசிகவின் 15 Stronghold உத்தேச பட்டியல்! -
சர்ச்சை பேச்சு விவகாரம்.. முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு மீண்டும் சம்மன் அனுப்ப நீதிமன்றம் உத்தரவு!












Click it and Unblock the Notifications