அதிமுக அடித்த அடி.. அரண்ட தாமரை.. எம்பி சீட்டு போச்சு.. டெல்லிக்கு தெறித்து ஓடிய பாஜக "டாப்" தலைகள்
சென்னை: பாஜகவை சேர்ந்த டாப் தலைவர்கள் சிலர் டெல்லிக்கு செல்ல திட்டமிட்டு உள்ளனராம். சிலர் ஏற்கனவே டெல்லிக்கு பயணம் செய்துவிட்டதாக பாஜக தரப்பு வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதிமுக பாஜக இடையிலான மோதல் முடிவிற்கு வந்துள்ளது. இணைபிரியாத நண்பர்களாக தமிழ்நாடு அரசியலில் மட்டுமின்றி தேசிய அரசியலிலும் உச்சத்தில் இருந்த அதிமுக - பாஜக தங்கள் உறவை முறித்துக்கொண்டது.

அதிமுகவின் டாப் தலைவர்களை விமர்சனம் செய்ததை கண்டித்து இந்த கூட்டணியை முறித்துக்கொள்வதாக அதிமுக அறிவித்துள்ளது. பாஜகவுடன் கூட்டணி இனி கிடையாது. பாஜகவுடன் 2024 லோக்சபா தேர்தலில் கூட்டணி இல்லை. 2026 லோக்சபா தேர்தலிலும் கூட்டணி இல்லை என்று அதிமுக அறிவித்துள்ளது.
நம்பிய பாஜக: தமிழ்நாட்டில் அதிமுகவின் கூட்டணியை நம்பி பாஜகவின் டாப் தலைவர்கள் சிலர் இருந்தனர். முக்கியமாக பாஜக அதிமுக கூட்டணி இருந்தால் தமிழ்நாட்டில் லோக்சபா தேர்தலில் எம்பி ஆக முடியும் என்ற கனவில் பாஜகவினர் இருந்தனர்.
அதிலும் தற்போது எம்எல்ஏவாக இருக்கும் பாஜக நிர்வாகி ஒருவர். அதேபோல் பாஜகவில் முன்பு பதவிகளில் இருந்த மூத்த தலைவர் ஒருவர். ஏற்கனவே எம்பி தேர்தலில் போட்டியிட்டு தோல்வி அடைந்த ஒருவர் என்று 3 தலைவர்கள் அதிமுக கூட்டணியில் இருந்தால் எம்பி பதவி கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இருந்துள்ளனர்.
அதாவது அதிமுகவின் வாக்கு வங்கியை பயன்படுத்தி எம்பி ஆகிவிட முடியும் என்ற மிகப்பெரிய நம்பிக்கையில் இருந்துள்ளனர். முக்கியமாக கொங்கு மண்டலத்தில் அதிமுகவுடன் கூட்டணி வைத்தால் ஒன்றிரண்டு எம்பி இடமாவது கிடைக்கும் என்று என்ற நம்பிக்கையில் இருந்துள்ளனர்.
அதிமுக அடித்த அடி: ஆனால் அதிமுக தற்போது கூட்டணியை முறித்து உள்ளது. 2024 லோக்சபா தேர்தலில் கூட்டணி கிடையாது. 2026 சட்டசபை தேர்தலிலும் கூட்டணி கிடையாது என்று அதிமுக அறிவித்துவிட்டது.
இதன் காரணமாக பாஜகவை சேர்ந்த டாப் தலைவர்கள் சிலர் விரைவில் டெல்லிக்கு பயணம் செய்ய உள்ளதாக கூறப்படுகிறது. சிலர் ஏற்கனவே டெல்லிக்கு பறந்துவிட்டதாகவும் பாஜக வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. 5 முக்கியமான விஷயங்களை தெரிவிப்பதற்காக இவர்கள் டெல்லிக்கு பயணம் செய்ய உள்ளதாக பாஜக வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
1. அதிமுக உடன் கூட்டணியை எப்படியாவது சரி செய்ய வேண்டும். இல்லையென்றால் தமிழ்நாட்டில் இருந்து பாஜகவிற்கு கிடைக்கும் இடங்கள் ஜீரோ ஆகிவிடும்.
2. தமிழ்நாட்டில் அதிமுக கூட்டணியில் இருந்தால்தான் தேர்தல் பணிகளை செய்ய முடியும். பாஜக மட்டும் தனியாக தேர்தல் பணிகளை செய்ய முடியாது.
3. அதோடு பாஜகவிற்கு தமிழ்நாட்டில் பூத் கமிட்டி கூட இல்லை. அதிமுக உடன் கூட்டணி இருந்தால் மட்டுமே லோக்சபா தேர்தலில் பணிகளை செய்ய முடியும்.
4. தமிழ்நாட்டில் பாஜக - அதிமுக இடையே மோதல் நடக்க சில " தலைவர்கள்"தான் காரணம். அந்த தலைவர்கள் மீது ஆக்சன் எடுக்க வேண்டும். அப்போதுதான் பாஜக சரியாகும்.
5. பாஜகவிற்கு உள்ளேயே சில தலைவர்களுக்கு இடையே மோதல் உள்ளது. கூட்டணியை சரி செய்வதற்கு இடையில் அதையும் சரி செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகளுடன் டெல்லி பாஜக லீடர்களை சந்திக்க தமிழ்நாடு பாஜக லீடர்கள் சிலர் பயணம் செய்ய உள்ளதாக கூறப்படுகிறது.
-
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
சேலத்தில் விபச்சாரத்தில் தள்ளப்பட்ட 50 பெண்கள்? பல ஆபாச வீடியோக்கள்! தவெக மணிகண்டன் சிக்கியது எப்படி -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன் -
ரூ.115 லட்சம் கோடி சொத்து இருந்து என்ன பயன்.. எலான் மஸ்க் வீட்டை பார்த்தீங்களா.. ஒரு 3BHK வீட்டை விட சிறியது? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது -
விவாகரத்து பேப்பர்களை கிழித்தெறிந்து கணவரை கட்டி பிடித்த மனைவி! கோர்ட் வாசலில் நடந்த உருக்கமான செயல் -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை












Click it and Unblock the Notifications