சுதந்திர தின லீவு.. சென்னையிலிருந்து 500 ஸ்பெஷல் பஸ்! போக்குவரத்து கழகம் வெளியிட்ட மாஸ் அறிவிப்பு
சென்னை: வார இறுதி நாட்கள் மற்றும் சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அரசு போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.
வளர்ந்து வரும் மக்கள் தொகைக்கு ஏற்ப நகரங்களும் விரிவடைந்துக்கொண்டே செல்கிறது. மக்கள் வாழ்வாதாரத்தை தேடி சென்னை போன்ற நகரங்களை நோக்கி தொடர்ந்து குடிபெயர்ந்து வருகின்றனர். இதனால் சென்னையின் மக்கள் தொகை ஒரு கோடியை தாண்டியுள்ளது. மற்ற நகரங்களிலும் மக்கள் தொகை அதிகரித்து வருகிறது. இதில் 75 சதவிகிதத்திற்கும் அதிகமானவர்கள் புலம்பெயர் தொழிலாளர்கள்தான். இப்படி இருக்கையில் இவர்கள் வார இறுதி நாட்கள் மற்றும் விழா காலங்களில் தங்கள் சொந்த ஊருக்கு செல்வது வழக்கம்.

எனவே இவர்களுக்காக சிறப்பு பேருந்துகள் அடிக்கடி இயக்கப்பட்டு வருகிறது. வார இறுதி நாட்கள் தவிர திருவிழாக்கள், பண்டிகை நாட்கள், திருவண்ணாமலை கோயில் கிரிவல நாட்கள் போன்றவற்றிற்கும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இந்நிலையில் எதிர்வரும் சுதந்திர தினத்தையொட்டி சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.
அதாவது, வரும் 12ம் தேதி முதல் வழக்கத்தை விட 1,100 பேருந்துகள் கூடுதலாக இயக்கப்படுகின்றன. இது குறித்து போக்குவரத்து கழகம் விடுத்துள்ள அறிக்கையில், ஆகஸ்ட் 15ம் தேதி பயணம் மேற்கொள்ள இதுவரை 12,257 பயணிகள் முன்பதிவு செய்திருக்கின்றனர். இதே 11ம் தேதியான வெள்ளிக்கிழமை பயணம் மேற்கொள்ள 18,199 பயணிகளும், 12ம் தேதி 6,949 பயணிகளும், 13ம் தேதி 4,514 பயணிகளும் சென்னையிலிருந்து வெவ்வேறு ஊர்களுக்கு செல்ல முன்பதிவு செய்துள்ளனர்.

இந்நிலையில் சென்னையிலிருந்து மட்டும் வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக 500 பேருந்துகள் இயக்கப்படும். அதேபோல கோவை, மதுரை, நெல்லை, திருச்சி மற்றும் சேலம் ஆகிய இடங்களிலிருந்து வரும் 12ம் தேதி 200 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். வெளிமாநிலங்களான பெங்களூரிலிருந்து 400 பேருந்துகளும் இயக்கப்படும் மொத்தமாக 1,100 பேருந்துகள் இயக்கப்பட இருக்கிறது. இதன் மூலம் பயணிகளின் கூட்ட நெரிசலை குறைக்க முடியும்.
இது தவிர 15ம் தேதி மக்கள் மீண்டும் ஊர் திரும்பவும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இந்த சிறப்பு பேருந்து இயக்கத்தினை கண்காணிக்க பேருந்து நிலையத்தில் போதிய அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் என்று போக்குவரத்து கழகம் கூறியுள்ளது.
-
கரப்பான் பூச்சி கட்சிக்கு தாவும் Gen-Z! ஏமாந்துவிடக்கூடாதாம்.. உஷார் சொல்லும் வீரமணி! -
சென்னை மக்களே! ரேஷன் அட்டையில் திருத்தம் செய்யணுமா? செம சான்ஸ்.. இன்னைக்கு மிஸ் பண்ணாதீங்க! -
தலைமை செயலகத்தில் நெகிழ்ச்சி! சிறுவனை வாரி அணைத்து உணவூட்டிய அமைச்சர் வன்னியரசு.. உருகிய மக்கள் -
18 மணிநேரம் தடையில்லா மின்சாரம்.. விவசாயிகளுக்கு சூப்பர் திட்டத்தை அறிவித்த முதலமைச்சர் விஜய்! -
“ஏன் நடவடிக்கை எடுக்க கூடாது?” ராஜினாமா செய்த 4 அதிமுக எம்எல்ஏக்களுக்கு சபாநாயகர் நோட்டீஸ் -
செங்கல்பட்டு-திண்டிவனம் 6 வழிச்சாலை விரிவாக்கம்: NHAI அதிரடி திட்டம் - போக்குவரத்து நெரிசல் ஓவர்! -
ஏமாற்றம் கொடுத்த மேட்டூர்.. கைவிடாத மழை! டெல்டாவுக்கு இன்று கனமழை அலர்ட்! -
சென்னை முழுக்க மினி மால்.. அடி தூள்.. இனி வீட்டு பக்கத்திலேயே ஷாப்பிங், தியேட்டர், ஆபீஸ்! -
டெல்டாவில் கனமழை.. தஞ்சை, திருவாரூர் மக்கள் உஷார்! அலர்ட் கொடுத்த வானிலை மையம் -
நீலகிரி டூ கன்னியாகுமரி வரை.. கொட்டி தீர்க்கப்போகும் கனமழை! 6 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் அலர்ட் -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications