சென்னை - திருச்சி வழித்தடத்தில் பயண நேரம் 40 நிமிடங்கள் வரை குறையும்.. தெற்கு ரயில்வே சூப்பர் முடிவு

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை - விழுப்புரம் - திருச்சி வழித்தடத்தில் தற்போது, மணிக்கு 80 முதல் 110 கி.மீ. வேகத்தில் ரயில்கள் இப்போது இயக்கப்படுகின்றன. அதிகமான வளைவுகள் இருப்பதாலும், பழைய பாலங்கள் மேம்படுத்தப்படாமல் இருப்பதாலும் ரயில்களின் வேகத்தை அதிகரிக்க முடியாத நிலை இருந்து வருகிறது. இந்நிலையில் வளைவுகளை நீக்கும் பணியும், சில பகுதிகளில் பாலத்தை வலுப்படுத்தும் பணியும் நடக்கிறது. பணிகள் முடிந்த பின்னர் சென்னை திருச்சி இடையே பயண நேரம் 40 நிமிடங்கள் வரை குறைய வாய்ப்பு உள்ளது.

தமிழ்நாட்டில் தற்போது சென்னை - ரேணிகுண்டா, அரக்கோணம் - ஜோலார்பேட்டை, சென்னை - கூடூர் ஆகிய வழித்தடங்களில் அதிவிரைவு ரயில்கள் மணிக்கு 110 கி.மீ. முதல் 130 கி.மீ. வரை வேகத்தில் இயக்கப்படுகின்றன. ஆனால் மற்ற வழித்தடங்களில் 90 முதல் 110 கிலோ மீட்டர் வேகத்தில் தான் ரயில்கள் இயக்கப்படுகின்றன. தற்போது முக்கிய வழித்தடங்களில் ரயில்களின் வேகத்தை அதிகரிக்க தெற்கு ரயில்வே தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

Chennai train Trichy

அதற்காக தண்டவாளம், சிக்னல் முறைகளை மேம்படுத்துவது, பாலம் அமைப்பது, வேகக் கட்டுபாடுகளை அகற்றுவது, வளைவுகளை நீக்குவது உள்பட பல்வேறு பணிகளை ரயில்வே நிர்வாகம் செய்து வருகிறது. ரயில் நிலையங்களில், ரயில் வழித்தடங்களில் வேகமாக இயக்க தடையாக உள்ள விஷயங்களை சரி செய்த பின்னர் அந்த வழித்தடத்தில் ரயில்களின் வேகம் 130 கிமீ வரை அதிகரிக்கப்படும்.

தற்போது சென்னை - விழுப்புரம் - திருச்சி வழித்தடத்தில் எந்த ரயில்களாக இருந்தாலும் மணிக்கு 80 முதல் 110 கி.மீ. வேகம் வரையில் தான் ரயில்கள் இயக்கப்படுகின்றன. அதிகமான வளைவுகள் இந்த வழித்தடத்தில் இருக்கின்றன. பழைய பாலங்கள் மேம்படுத்தப்படாமல் இருக்கின்றன. இதன் காரணமாக தென் மாவட்டங்களுக்கு செல்லும் இந்த ரயில் வழித்தடத்தில் ரயில்களின் வேகத்தை அதிகரிப்பதில் நடைமுறை சிக்கல்கள் இருந்து வந்தது.. இந்நிலையில், இத்தடத்தில் வளைவுகளை நீக்கும் பணிகள் தொடங்கப்பட்டிருக்கிறது.

இதுகுறித்து தெற்கு ரயில்வே அதிகாரிகள் கூறுகையில், முக்கிய பாதைகளில் ரயில்களின் வேகத்தை அதிகரிக்கும் விதமாக வளைவுகளை நீக்குவது, பழைய பாலங்களை மேம்படுத்துவது, பழைய ரயில் பாதைகளை புதுப்பிப்பது போன்ற பணிகள் தெற்கு ரயில்வே தற்போது மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் தென்மாவட்டங்களுக்கு செல்லும் ரயில் பாதைகளும் படிப்படியாக மேம்படுத்தப்பட்டு வருகிறது.

சென்னையில் இருந்து விழுப்புரம் வழியாக திருச்சி வழித்தத்தை பொறுத்தவரையில் செங்கல்பட்டு வரையில் ரயில்கள் 110 கிமீ வேகத்தில் செல்ல முடியும். ஆனால் செங்கல்பட்டு தாண்டி, விழுப்புரம், திருச்சி வழித்தடத்தில் 90 முதல் 110 கிமீ வேகம் வரையில் தான் ரயில்களால் போக முடியும். ஏனெனில் வளைவுகள் அதிகமாக உள்ளன. பாலங்கள் பழைய பாலங்கள் ஆகும்.

எனவே தேவையற்ற வளைவுகளை நீக்குவது, பழைய பாலங்களை மேம்படுத்துவது அல்லது புதுப்பிப்பது, சிக்னல் தொழில்நுட்பத்துடன் ரயில் பாதைகளை புதுப்பிப்பது உள்ளிட்ட பணிகளை தற்போது செய்து வருகிறோம். இந்த பணிகள் அடுத்த ஆண்டு மார்ச்சுக்குள் இந்த பணிகளும் முடியும் என எதிர்பார்க்கிறோம். அதன்பின்னர் தென்மாவட்ட ரயில்களின் வேகம் அதிகரிக்கப்படும். இதனால் சென்னை திருச்சி வழித்தடத்தில் பயண நேரம் 30 முதல் 40 நிமிடங்கள வரை குறையும் என்று ரயில்வே அதிகாரிகள் கூறினார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+