பளார் என்று போலீஸ் கன்னத்தில் அறைந்த வட மாநில லாரி டிரைவர்.. சென்னையில் பரபரப்பு.. வெளியான வீடியோ
சென்னை : போரூர் அருகே தவறான பாதையில் வந்ததால், மாற்றுச் சாலையில் செல்ல அறிவுறுத்திய போக்குவரத்து காவலரை வெளிமாநில லாரி ஓட்டுநர் ஒருவர் கன்னத்தில் அறைந்த காட்சிகள் வெளியாகியுள்ளன.
Recommended Video
போரூர் ஏரி அருகே கனரக வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்ட சர்வீஸ் சாலை உள்ளது.
இங்கு, மகாராஷ்டிரா மாநில பதிவு எண் கொண்ட லாரி ஒன்று செல்ல முற்பட்டதாகக் கூறப்படுகிறது.

மெட்ரோ ரயில் பணிகள்
இதை பார்த்ததும், அதனை தடுத்து நிறுத்திய போக்குவரத்து காவலர்கள் மாற்றுச் சாலையில் செல்லும் படி கூறியுள்ளனர். போரூரில் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வரும் மெட்ரோ ரயில் பணியினால் மாறிய சாலைகளால் குழம்பிப்போன வடமாநிலத்தவர் மொழி தெரியாததால் செய்வதறியாது திகைத்து உள்ளார்.

டிரைவர் அடிதடி
மேலும் போலீசார் கூறியதை ஏற்க மறுத்த ஓட்டுனர் முஸ்தாக் அகமது என்பவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். வாக்குவாதம் முற்றிய நிலையில், போக்குவரத்து காவலரை சற்றும் எதிர்பாராத விதமாக சட்டென்று, அறைந்துள்ளார். தான் வைத்திருந்த கத்தியைக் காட்டி ஓட்டுநர் முஸ்தாக் அகமது காவலரை மிரட்டியதாகவும் கூறப்படுகிறது.

வழக்குகள் பாய்ந்தன
இதுகுறித்து போக்குவரத்து காவலர் அளித்த புகாரின் பேரில் போரூர் போலீசார், லாரி ஓட்டுனர் முஸ்தாக் அகமதை கைது செய்து அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தது, தாக்கியது, ஆபாசமாக பேசியது என பின்வரும் 794/21 U/s 294(b), 332, 506 (ii) IPC மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

தேசிய நெடுஞ்சாலை
போரூர் சர்வீஸ் சாலை சுமார் ஒரு கிலோமீட்டர் தொலைவில் சென்னை-கொல்கட்டா தேசிய நெடுஞ்சாலை உள்ளது. அங்கு வரை லாரி போயிருந்தால் பிரச்சினையில்லை. ஆனால் அதற்கு முன்பாக குழம்பிய பகுதியில் சிக்கிக் கொண்ட லாரி டிரைவர் இப்போது வம்பிலும் மாட்டியுள்ளார்.

குழப்பம்
தற்போது சென்னை மெட்ரோ பாலம் பணிகள் போரூரில் நடைபெற்று வருவதால் அனைத்து பாதையும் குறுகலாக இருப்பதால் வாகன ஓட்டிகள் ரொம்பவே குழப்பம் அடைகிறார்கள். உள்ளூர்காரர்களே குழம்பும் நிலையில் பிற மாநில டிரைவர்களுக்கு ஒன்றுமே புரிவதில்லை என்று கூறப்படுகிறது.
-
விஜய் வந்தும் வேலைக்கு ஆகல! சர்ச்சையை கிளப்பும் சட்டம் ஒழுங்கு.. டிஜிபி அதிரடி உத்தரவு! -
AirTrunk: 3 லட்சம் கோடி மெகா முதலீடு.. சென்னை அம்பத்தூரில் ரூ.10,000 கோடியில் அஸ்திவாரம்! -
முதல்வர் விஜய் தொகுதியில் சூட்கேஸுக்குள் தலையில்லாத ஆண் சடலம்.. பெரம்பூர் ரயில் நிலையத்தில் ஷாக்! -
கரப்பான் பூச்சி கட்சி போராட்டம்.. வேலையை காட்டிய டெல்லி போலீஸ்! 6 பேர் அதிரடி கைது! -
மாயமான தவெக நிர்வாகி 4 நாட்களுக்குப் பின் சடலமாக மீட்பு.. கல் குவாரி பள்ளத்தில் உடல் கண்டெடுப்பு! -
சென்னை உட்பட.. 26 மாவட்டங்களை லிஸ்ட் போட்ட வானிலை மையம்! ஆட்டம் ஆரம்பம்! கனமழை வெளுக்கப்போகுது! -
சென்னையில் மழை வெளுக்கப்போகுது.. மொத்தமா 9 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை! அடுத்த 2 மணி நேரம் உஷார் -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது












Click it and Unblock the Notifications