கோவை டூ காஷ்மீர் 3000 கி.மீ! 2 நாட்களில் கடக்க திட்டம்.. நான்ஸ்டாப் ரைடு.. டிடிஎஃப் வாசன் ஷாக் தகவல்
சென்னை: கோவை டூ காஷ்மீர் வரை இரு நாட்களில் இரு சக்கர வாகனத்தில் வழியில் எங்கும் நிற்காமல் செல்ல திட்டமிட்டுள்ளதாக டிக்டாக் புகழ் ஜிபி முத்துவிடம் டிடிஎஃப் வாசன் தெரிவித்துள்ளார்.
டிக்டாக்கில் டான்ஸ், நடிப்பு என வீடியோ போட்டு பிரபலமானவர் ஜி. பி.முத்து. இவர் தற்போது குறும்படங்களிலும் நடித்து வருகிறார். டிக்டாக் தடை செய்யப்பட்டுள்ள நிலையில் யூடியூப் மூலம் வீடியோக்களை செய்து வருகிறார்.
இவர் அவ்வப்போது மற்ற யூடியூப் சேனல் நடத்துவோருடன் வீடியோ போடுவது வழக்கம். அந்த வகையில் கோவையைச் சேர்ந்த டிடிஎஃப் வாசனை சந்திக்க முத்து விருப்பப்பட்டுள்ளார். இருவரும் சேர்ந்து ஒரு பைக் ரைடுக்கும் திட்டமிட்டிருந்தனர்.

கல்லூரி
இந்த நிலையில் ஜிபி முத்துவுக்கு ஒரு கல்லூரியில் ஷூட்டிங் இருந்தது. இந்த சந்தர்ப்பத்தை வாசனுடனான பயணமாக மாற்ற ஜிபி முத்து நினைத்தார். அதன்படி இருவரும் பேசி வைத்துக் கொண்டனர். வாசன் நேராக ஜிபி முத்து சொன்ன இடத்திற்கு சென்றார். அங்கிருந்து அவர் பங்கேற்கும் கல்லூரியின் தூரம் 20 கி.மீ. ஆகும்.

வாசனின் பைக்
வாசனின் பைக்கில் ஏறி உட்காரும் போதே முத்து தடுமாறினார். பின்னர் வாகனத்தின் சப்தம் கேட்ட போதும் மிரண்டு போனார். அவரை உட்கார வைத்துக் கொண்டு 150 கி.மீ. வேகம் வரை டிடிஎஃப் வாசன் சென்றார். பின்னால் உட்கார்ந்திருப்போர் தலைகவசம் அணிய வேண்டும் என்ற விதி இருந்தும் முத்து ஹெல்மெட் அணியவில்லை.

வாய் அசையும் அளவுக்கு காற்று
முத்துவின் வாய் அசையும் அளவுக்கு வாசன் படுவேகமாக சென்றார். நடுநடுவே லாரிகளுக்குள் நுழைந்து முத்துவை பயமுறுத்தினார். பின்னர் இரு கைகளையும் எடுத்துவிட்டு ஓட்டினார். இதையடுத்து அண்ணா வண்டியை தூக்கட்டுமா என வாசன் கேட்டார். அதற்கு முத்துவோ அய்யோ வேண்டாம் ஆளை விடுங்க தம்பி என்கிறார். மேலும் லடாக்கிற்கும் இப்படித்தான் செல்வீரா என முத்து கேட்ட போது வாசன் சொன்ன தகவல் பகீர் கிளப்பியது.

கோவை டூ காஷ்மீர்
வாசன் கூறுகையில் அண்ணா நான் ஒரு பிளான் வைத்துள்ளேன். அதாவது கோவையிலிருந்து காஷ்மீர் வரை பெட்ரோல் போடுவதை தவிர வேறு எங்கும் வண்டியை நிறுத்தாமல் ஓட்ட வேண்டும். அதுவும் 2 நாட்களில் காஷ்மீரை அடைய போகிறேன் என தெரிவித்தார். அதற்கு முத்து, வழியில் எங்குமே நிற்காமலா என அதிர்ச்சியுடன் கேட்டார்.

3000 கி.மீ தூரத்தை வெறும் 48 மணி நேரத்திலா
கோவையிலிருந்து ஜம்மு காஷ்மீர் செல்ல 56 மணி நேரம் ஆகும் என கூகுள் சொல்கிறது. அது போல் இரண்டுக்குமான தூரம் 3,093 கி.மீ. ஆகும். 3000 கி.மீ. தூரத்தை வெறும் 48 மணி நேரத்தில் கடப்பது என்றால் டிடிஎஃப் வாசன் ஒரு நாளைக்கு 1500 கி.மீ. தூரம் ஓட்ட வேண்டியிருக்கும். அதிலும் எங்கும் நிறுத்தாமல் 400 கி.மீ. தூரத்திற்கு ஒரு முறை பெட்ரோல் போட மட்டுமே நிறுத்துவேன் என கூறியுள்ளதால் இரு நாட்களில் சுமார் 7 முறை மட்டுமே வாசன் தனது வாகனத்தை நிறுத்துவார். இரவு முழுவதும் தூக்கமில்லாமல் இயக்கும் ஆபத்தான பயணத்தை அவர் செய்ய போவதை அடுத்து சமூக ஆர்வலர்கள் அச்சம் கொள்கிறார்கள்.
-
வீட்டு கேஸ் சிலிண்டர் 14.2 கிலோ எடையில் விநியோகம் செய்யப்படுவது ஏன் தெரியுமா? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி யாருக்கு கிடைக்கும்? நகை மதிப்பீட்டில் உள்ள ஏல ரகசியம் இதுதானா -
சிறகடிக்க ஆசை: விஜயா செய்த சதி, ஜெயிலுக்கு போகும் மொத்த குடும்பம்.. மனோஜால் ஏற்படும் விபரீதம்! ஜெயித்த ரோகிணி -
இப்போ முடியாது.. தேர்தல் முடிந்ததும் செட்டில் பண்றேன்.. கறாராக பேசிய லீமா ரோஸ்.. விக்கித்த எடப்பாடி -
சுப்மன் கில் ஆட்டத்தை பார்க்க வந்த சாரா டெண்டுல்கர்.. பாவமாக அமர்ந்திருந்த அர்ஜுன் டெண்டுல்கர் மனைவி -
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
அஜிதா ஆடிய மைண்ட் கேம்.. தவெக-வை தவிக்கவிட்டு திமுக பக்கம் தாவ இதுதான் காரணமா? தூத்துக்குடி மாஸ் -
எடப்பாடிக்கு அருகில் சீட்.. ஒரே விமானத்தில் பயணம்.. கடைசி நேரத்தில் பிளானை மாற்றிய உதயநிதி! -
ஸ்டாலினுக்கு இத்தகைய நடத்தை அழகல்ல.. நிர்மலா சீதாராமன் விளக்கம் -
பேசி முடித்ததுமே சரிந்த பாமக நிறுவனர் ராமதாஸ்.. கேள்விப்பட்டதும் உடனே போன் போட்ட முதல்வர் ஸ்டாலின்!












Click it and Unblock the Notifications