தொலைந்து போன கவாஸக்கி சூப்பர் பைக்? எனக்காக ப்ரேய் பண்ணுங்க ப்ளீஸ்! உடைந்து பேசிய டிடிஎஃப் வாசன்!
சென்னை : பிரபல யூட்யூபரும் பைக் விலாக்கருமான டிடிஎஃப் வாசன் லடாக்கிற்கு தனது கவாசக்கி சூப்பர் பைக்கில் சாகச பயணம் மேற்கொண்டு இருக்கும் நிலையில் பல லட்சம் மதிப்புள்ள அவரது பைக் காணாமல் போய்விட்டதாகவும் தனக்காக பிரார்த்தனை செய்யுமாறு அவர் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை சேர்ந்த வாசன் 2k கிட்ஸ் மத்தியில் மிகவும் பிரபலம் வெறும் வாசன் என்றால் இவரை பலருக்கும் தெரியாது அதே நேரத்தில் டிடிஎஃப் வாசன் என்றால் சிறு குழந்தைக்கு கூட தெரிந்து விடும்.
தான் நடத்திவரும் ட்வின் த்ரோட்லர்ஸ் என்ற யூட்யூப் சேனலில் விலை உயர்ந்த சூப்பர் பைக்குகளில் நீண்ட தூரம் பயணித்து சாகசங்கள் செய்து வீடியோவாக பதிவிட்டதால் இளைஞர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார்.

டிடிஎஃப் வாசன்
கவாசக்கி நிஞ்சா, பிஎம்டபிள்யூ உள்ளிட்ட பல சூப்பர் பைக்குகளில் நீண்ட தூரம் பயணம் செய்து ஹெல்மெட்டில் கேமராவை வைத்து அதனை வீடியோவாக செய்து தனது யூட்யூப் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார். இதன் மூலம் பல்க்காக ஒரு அமௌன்ட் அவருக்கு கிடைக்கும் நிலையில் தற்போது கடந்த சில நாட்களாகவே அடுத்தடுத்து சர்ச்சைகளில் சிக்கி வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த பிக்பாஸ் டிக் டாக் பிரபலமான ஜிபி முத்துவை வாகனத்தில் அமர வைத்து அதிவேகத்தில் இயக்கியதாக புகார் எழுந்தது.

அதிரடி கைது
இதை அடுத்து அஜாக்கிரதையாக வாகனம் ஓட்டியது, பில்லியன் ரைடர் ஹெல்மெட் அணியாதது, ஆபத்தை விளைவிக்கும் வகையில் வாகனம் ஓட்டுதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த கோவை போலீசார் அவரை கைது செய்து பின்னர் ஜாமினில் விடுவித்தனர். தொடர்ந்து தன்னை பற்றி ஊடகங்கள் தவறாக செய்தி பரப்புவதாகவும் இனிமேல் வேகமாக வாகனம் ஓட்ட மாட்டேன் என டிடிஎஃப் கூறியிருந்தார்.

பைக் மாயம்
இந்நிலையில் பல லட்சம் மதிப்புள்ள அவரது பைக் காணாமல் போய்விட்டதாகவும் தனக்காக பிரார்த்தனை செய்யுமாறு அவர் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. டிடிஎப் வாசன் தனது நண்பர் ஒருவருடன் லடாக் அருகே இருக்கும் டாராஸ் பகுதிக்கு தனது 'கவாசகி இசட் 900' வாகனத்தில் சென்று இருக்கிறார். இதன் தற்போதைய மதிப்பு 10 லட்சம் ரூபாய் வரை இருக்கும் என்கின்றனர். ட்ராஸ் பகுதிக்கு செல்ல வேண்டுமானால் கரடு முரடு சாலைகளை கடந்து செல்ல வேண்டும் என்பதால் தனது ஹோட்டல் அறையில் இருந்த ஒருவரின் உதவியோடு அந்த பைக்கை ட்ரக் ஒன்றில் ஏற்றி அனுப்பி இருக்கிறார்.

ஓட்டுனர் மாயம்
மேலும் தனியாக சைலோ காரில் டிடிஎஃப் வாசன் பயணம் மேற்கொண்டு இருக்கிறார். ஹோட்டல் மூலம் ட்ரக் புக்கிங் செய்யப்பட்டதால் எவ்வித சந்தேகமும் டிடிஎஃப் வாசனுக்கு ஏற்படவில்லை என கூறப்படுகிறது. இந்த நிலையில் ட்ராஸ் பகுதிக்கு காரில் சென்ற டிடிஎஃப் வாசன் டிரக் ஓட்டுனருக்கு போன் மூலம் தொடர்பு கொண்ட போது அதனை அவர் எடுக்கவில்லை என கூறப்படுகிறது. தொடர்ந்து பலமுறை முயற்சித்தும் எந்த பதிலும் இல்லாததால் தனது பைக் மாயமாகிவிட்டதோ என அச்சமடைந்த டிடிஎஃப் வாசல் தனது யூட்டியூப் சேனலில் புலம்பித் தள்ளி இருக்கிறார்.

புலம்பல்
"டிடிஎப் எனது பைக்கை காணவில்லை. எடுத்துட்டு போய்ட்டாங்க. போன் பண்ணாலும் சுவிட்ச் ஆப்னு வருது. இருந்தாலும் எனக்கு நம்பிக்கை இருக்கு கிடைச்சுரும் என்று.. நம்பிக்கை இருக்கு.. எனக்காக ப்ரேய் பண்ணுங்க என புலம்பித் தள்ளிய வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இதே பயணத்தின் போது தான் கடந்த சில நாட்களுக்கு முன்பு டிடிஎஃப் வாசனுக்கு மணாலி போலீஸ் லைசன்ஸ் கேன்சல் செய்து விடுவோம் என எச்சரிக்கை விடுத்தது குறிப்பிடத்தக்கது. அதே நேரத்தில் பைக் எல்லாம் காணாமல் போய் இருக்காது டிடிஎஃப் வாசன் யூட்யூப் வியூவ்ஸ்க்காக இதுபோன்று நடித்து வீடியோ வெளியிட்டு இருக்கிறார் என அவரது ஹேட்டார்கள் கூறி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications