ஆக அப்ப அதுதானா? பாஜக கூட்டணியில் இணைவது குறித்த கேள்விக்கு டிடிவி தினகரன் சொன்ன பதிலை பாருங்க!
சென்னை: பாஜகவுடனான கூட்டணியை அதிமுக முறித்து கொண்ட நிலையில் பாஜகவுடன் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் கூட்டணி அமைக்குமா? என்ற கேள்விக்கு அக்கட்சியின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் பதிலளிக்கவில்லை.
தஞ்சாவூரில் செய்தியாளர்களிடம் டிடிவி தினகரன் கூறியதாவது: எம்ஜிஆரும் ஜெயலலிதாவும் இருந்ததுதான் உண்மையான அண்ணா திமுக. களவாடப்பட்ட, கையகப்படுத்தப்பட்ட அண்ணா திமுகவின் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி இருக்கிறார். ஜெயலலிதா பற்றி பேசிய போது அமைதியாக இருந்தனர்; அப்போதும் கூட டெல்லிக்கு போய் கூட்டணி பற்றி பேசினர். ஏதோ ஏமாற்றத்துடன் திரும்பி இருப்பதாக தெரிகிறது.

டெல்லியில் ஏமாற்றம்: இதனைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சர்கள் எல்லாம் டெல்லிக்கு படையெடுத்து போனார்கள். அவர்கள் யாரையோ சந்திக்க காத்திருந்து, சந்திக்க முடியாமல் திரும்பி இருக்கிறார்கள். அந்த ஏமாற்றம்தான் இப்ப. அதனால்தான் அண்ணாவை பற்றி பேசிவிட்டார்கள்.. கூட்டணியில் இருந்து விலகுகிறோம் என காரணம் சொல்கின்றனர். ஆனால் அதைத் தாண்டிய காரணம் இருக்கலாம்.
ஏமாற்றிய எடப்பாடி பழனிசாமி: ஓ.பன்னீர்செல்வம் அதிமுகவை விட்டு ஒதுங்கிய போது சசிகலா, ஜெயலலிதா ஆட்சியில் முக்கிய அமைச்சராக இருந்த காரணத்தால்தான் எடப்பாடி பழனிசாமியை முதல்வர் பொறுப்புக்கு கொண்டு வந்தார். சசிகலாவுக்கும் நன்றி இல்லாமல்.. எடப்பாடி பழனிசாமி ஆட்சி தொடருவதற்கு காரணமாக இருந்த ஓ.பன்னீர்செல்வத்துக்கும் நன்றி இல்லாமல் ஏமாற்றிவிட்டார் எடப்பாடி பழனிசாமி.
துரோகம் ரத்தத்தில் இருக்கு: மத்தியில் ஆளும் பாஜகவின் துணையுடன் 4 ஆண்டுகள் அதிமுகவை எடப்பாடி பழனிசாமி கையகப்படுத்தி வைத்திருந்தார். மத்தியில் உள்ள பாஜகவை காட்டிதான் கட்சியில் இருக்கும் பலரையும் உங்கள் மீது வழக்கு பாய போகிறது, அதனால் தன்னுடன் இருக்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமி சொன்னதாக தகவல்கள் நிறைய பார்த்திருக்கிறோம். துரோக சிந்தனை உள்ளவர்கள் எல்லோரையும் ஏமாற்றுவார்கள். துரோகம் என்பது எடப்பாடி பழனிசாமி ரத்தத்திலேயே உள்ளது. அவர் ஏமாற்றுக்காரர். இப்ப பாஜகவும் அவரை பற்றி புரிந்து கொண்டிருக்கும்.
பாஜகவுடன் கூட்டணியா?: பாஜகவில் இருந்து அழைப்பு வந்ததா? பாஜக கூட்டணியில் இணைவீர்களா? என்ற யூகங்களுக்கு இந்த நேரத்தில் பதில் சொல்ல நான் விரும்பவில்லை. சரியான நேரத்தில் சரியான முடிவை அமமுக எடுக்கும். இவ்வாறு டிடிவி தினகரன் கூறினார்.
-
திமுகவின் TAPS தேவாமிர்தம்.. இப்போ OPS வேணுமா? கரைவேட்டி கட்டாத கட்சிக்காரர்கள்.. TNGEA விளாசல்! -
திமுகவில் உதயநிதிக்கு செயல் தலைவர் பதவி? மெல்ல நகரும் திட்டம்.. ஸ்டாலின் மேஜையில் ரிப்போர்ட் -
பொய் சொல்றாங்க..ஸ்டாலின் கூறியதற்கும், திமுக செய்வதற்கும் சம்பந்தமில்லை! வெளுத்துவிட்ட மா.கம்யூ -
சிலுப்பிகிட்டு போகும் சிறுத்தை குட்டிகள்..க்ரீன் சிக்னல் காட்டிய அறிவாலயம்! குறுக்கே நிற்கும் திருமா -
CM Saar.. மாறி மாறி மக்களை ஏமாற்றும் விஜய்.. SCAM செய்யும் தவெக அரசு.. உதயநிதி ஸ்டாலின் அதிரடி! -
கூட்டணி கட்சிகளுக்குள் வெடித்த கலவரம்: திமுக - விசிக இடையே பயங்கர கல்வீச்சு! தடியடி நடத்திய போலீசார் -
"வாயை மூடி பேசவும்" மாவட்டச் செயலாளர்கள் கண்ட்ரோலில் திமுக குழு.. விரக்தியில் அடிமட்ட தொண்டர்கள்! -
சென்னையில் மின்வெட்டின் பின்னணி.. அமைச்சர் கருத்துக்கு திமுக தொழிற்சங்கம் திட்டவட்டமாக மறுப்பு -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம்












Click it and Unblock the Notifications