எங்கே போனார் டிடிவி தினகரன்! கண்டுகொள்வதேயில்லை.. பாதைமாறத் தயாராகும் அமமுக நிர்வாகிகள்!
சென்னை: அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கடந்த சில மாதங்களாக சைலண்ட் மோடில் இருந்து வருவதால் கட்சி நிர்வாகிகள் பலரும் அதிருப்தியில் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
தினகரனின் தரிசணத்திற்காக பல மாதங்கள் காத்திருந்தும் எந்த ரியாக்ஷனும் கிடைக்காததால் பாதைமாறி பயணிக்க கூட அவர் துணிந்துவிட்டதாக கூறப்படுகிறது.
பாப்பிரெட்டிபட்டி பழனியப்பன், அமைச்சர் செந்தில்பாலாஜி போன்றோர் இன்னுமே தங்கள் பழைய அமமுக சகாக்களை திமுகவுக்கு அழைத்து வருவதில் ஆர்வம் காட்டி வருவது கவனிக்கத்தக்கது.

தினகரன் சுறுசுறுப்பு
அரசியல் கட்சி தொடங்கிய புதிதில் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் சென்று நிர்வாகிகள் இல்ல நல்லது கெட்டதுகளில் பங்கேற்று ஆக்டிவ் அரசியல்வாதியாக வலம் வந்தவர் டிடிவி தினகரன். அவரிடம் உள்ள பொறுமையும், நிதானமான பேச்சும் டெல்டா மற்றும் தென்மாவட்டங்களை சேர்ந்த இளைஞர்கள் பலரை ஈர்த்தது. இதன் காரணமாக அமமுகவில் இளைஞர் பட்டாளம் பெருமளவில் சேர்ந்தது. சசிகலா மீதான அபிமானத்தை கடந்து டிடிவி என்ற மனிதருக்காகவும் புதுமுகங்கள் பலர் அமமுகவில் அதிகளவில் இணைந்தனர்.

கட்சி வீழ்ச்சி
இந்தச் சூழலில் கடந்த நாடாளுமன்றத் தேர்தலுக்கு பிறகு அமமுகவிலிருந்து முக்கிய நிர்வாகிகள் பலர் வெளியேறத் தொடங்கினர். குறிப்பாக தினகரனை நம்பி வந்த 18 எம்.எல்.ஏ.க்களில் பலரும் ஒரு கட்டத்தில் அமமுகவிலிருந்து விலகினர். அப்போதே அதை தடுத்து வெளியேறும் நிர்வாகிகளிடம் தினகரன் ஒரு வார்த்தை அழைத்துப் பேசியிருந்தால் கட்சி இன்று இந்தளவுக்கு கலகலத்து போயிருக்காது என்பது அக்கட்சியின் முன்னாள் நிர்வாகி ஒருவரின் கருத்து.

தினகரன் ஓய்வு
இதனிடையே சசிகலா விடுதலைக்கு பிறகு பெரியளவில் மாற்றமும் அரசியல் தாக்கமும் ஏற்படக் கூடும் என திட்டமிட்ட தினகரனுக்கு, இப்போது நடக்கும் நிகழ்வுகள் பெரும் ஏமாற்றத்தை அளித்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. இதுமட்டுமல்லாமல் சசிகலா உள்ளிட்ட குடும்ப உறவுகளால் இன்னும் பல நெருக்கடிகளும் அவருக்கு ஏற்பட்டிருப்பதாக கூறுகிறார்கள் உள் விவரம் அறிந்தவர்கள். இதனால் தான் அண்மைக்காலமாக நிர்வாகிகளை கூட சந்திக்க அவர் ஆர்வம் காட்டுவதில்லை எனக் கூறுகிறார்கள்.

அமமுக நிர்வாகிகள்
நிலைமை இப்படியிருக்க அமமுக நிர்வாகிகள் பலரும் மாற்றுக் கட்சிகளில் இணைவதற்கு ஆர்வம் காட்டத் தொடங்கியிருப்பதை தினகரன் கருத்தில் கொள்ள வேண்டியது அவசியம். அறிக்கை, டிவிட்டர் பதிவுகள் மூலம் மட்டும் அரசியல் செய்யாமல் மீண்டும் பழைய தினகரனாக அவர் களத்திற்கு வரவேண்டும் என்பதே நம்மிடம் பேசிய அமமுக முக்கியப் புள்ளிகளின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.
-
டெல்லியில் அமித் ஷா உடன் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு.. தொகுதிப் பங்கீடு தொடர்பாக பேச்சு! -
அரைக் கிணறை தாண்டிய அறிவாலயம்.. அடம் பிடித்த கட்சிகளை கூட்டணியில் அடைத்த திமுக! யாருக்கு எவ்வளவு? -
இது திமுக கோட்டை.. அதிமுகவுக்கு ஒத்துவராது.. சென்னையை கூட்டணி கட்சியிடம் தாரைவார்க்க தயாரான எடப்பாடி -
30 தொகுதிகளின் பட்டியல்.. அதிமுக கோட்டையை கேட்கும் பாஜக.. எடப்பாடி பழனிசாமி டெல்லி செல்வதன் பின்னணி! -
இரட்டை இலைக்கு ‘குட்பை’.. அதிமுகவை அடக்கிய பாஜக? திமுக கூட்டணிக்கு அடிக்கப்போகும் அதிர்ஷ்டம் -
“2 மேடைகளில் எது தமிழ்நாட்டுக்கான மேடை?” அதிமுக தலைவர்களின் பேச்சுக்கு ஸ்டாலின் காட்டிய ரியாக்ஷன்! -
வாக்காளர் லிஸ்டில் பெயர் இல்லை! ஆனால் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட நடிகை! கேரளாவில் NDA சொதப்பல் -
40, 50 கோடி செலவு பண்ணுவாங்க.. கையை கட்டிட்டாரு சீமான்! திரள்நிதி தான் கேக்குறாரு!உருக்கமாக வீடியோ -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
BJP- TVK- DMK: தவெகவில் இருந்து விலகிய நடிகை ரஞ்சனா நாச்சியார் திமுகவில் ஐக்கியம்! -
’அம்மா’ இல்லாத பிள்ளையான அதிமுக..எடப்பாடியை அசிங்கப்படுத்திய அமித் ஷா! மனதுக்குள் குமுறும் ர.ர.க்கள் -
"கவுண்டவுன் ஸ்டார்ட்".. அண்ணா அறிவாலயத்தில் மின்னும் டிஜிட்டல் போர்டு.. திமுகவினர் உற்சாகம்!












Click it and Unblock the Notifications