அமமுகவில் இனி ''மாணவர் அணி'' ''மாணவியர் அணி''! தமிழ்நாட்டில் முதல்முறை! டிடிவி தினகரன் புது முயற்சி!
சென்னை: தமிழ்நாட்டில் எந்த அரசியல் கட்சியிலும் இல்லாத வகையில் ''மாணவியர் அணி'' என்ற புதிய சார்பு அணியை அமமுகவில் உருவாக்கியுள்ளார் அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்.
தமிழ்நாட்டை பொறுத்தவரை இளம்பெண்கள் பாசறை, மாணவர் அணி என்று தான் சார்பு அணிகளை கேள்விபட்டிருப்போம். முதல்முறையாக மாணவர் அணி என்ற சார்பு அணியை அமமுகவில் தான் பார்க்கிறோம். இதனிடையே தனது புது முயற்சி குறித்து டிடிவி தினகரன் விடுத்துள்ள பதிவு வருமாறு;
''உலகெங்கும் புரட்சியையும், எழுச்சியையும் செயல்படுத்தி ஒவ்வொரு காலகட்டத்திலும் மாற்றத்தை நிகழ்த்திக் காட்டிய சக்தியாகவும், சமூகத்தின் எதிர்காலத்தை உருவாக்கக் கூடியவர்களாகவும், தமிழ்நாட்டு அரசியலில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியவர்களும் மாணவர்களே!

அத்தகைய வருங்கால சமூகமான மாணவர்களின் மத்தியில் தூய்மையான புரட்சிகர அரசியலை மேலும் தீவிரமாக முன்னெடுத்துச் செல்லும் வகையில் செயல்பட்டுவரும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் மாணவர் அணி, இன்று முதல் "கழக மாணவர் அணி" மற்றும் "கழக மாணவியர் அணி" என இரு சார்பு அணிகளாக உருவாக்கப்படுகிறது.
கழக மாணவர் அணி செயலாளராக
வழக்கறிஞர் திரு.A.நல்லதுரை அவர்களும்
(கழக சுற்றுசூழல் பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு பிரிவு செயலாளர்)
கழக மாணவியர் அணி செயலாளராக திருமதி.B.ஜீவிதா நாச்சியார்அவர்களும்
(கழக தகவல் தொழில்நுட்ப மகளிர் பிரிவு இணைச்செயலாளர்)
இன்று முதல் நியமிக்கப்படுகிறார்கள். இதுவரை, கழக மாணவர் அணி செயலாளர் பொறுப்பிலிருக்கும் திரு.R.பரணீஸ்வரன் அவர்களும், கழக சுற்றுசூழல் பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு பிரிவு செயலாளர் பொறுப்பிலிருக்கும் திரு.A.நல்லதுரை அவர்களும், கழக தகவல் தொழில்நுட்ப மகளிர் பிரிவு இணைச்செயலாளர் பொறுப்பிலிருக்கும் திருமதி.B,ஜீவிதா நாச்சியார் அவர்களும் அவரவர் வகித்துவரும் பொறுப்புகளிலிருந்து விடுவிக்கப்படுகிறார்கள்.''
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications