"எங்க ரூம்ல என்ன எட்டி பார்க்கறீங்க".. சிரித்தபடி கேட்ட முல்லை.. கதறி அழும் பாண்டியன் ஸ்டோர்ஸ் வீடு
சென்னை: குண்ணக்குடியில் உள்ள பாண்டியன் ஸ்டோர்ஸ் வீட்டில் இனி முல்லையாக நடித்த சித்ரா இருக்க மாட்டார். இதனால் அந்த வீடு களையிழந்து காணப்படும் என சக நடிகர், நடிகைகள் வேதனை தெரிவிக்கிறார்கள்.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லை என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் சித்ரா. இந்த சீரியலில் அண்ணன், தம்பிகள் மொத்தம் 4 பேர் இருப்பர். அதில் மூவருக்கு திருமணம் ஆகிவிடும்.
அந்த வீட்டின் ஒரு மருமகளாக சித்ரா நடித்திருந்தார். இந்த நாடகத்தில் அவிக இவிகனு இவர் பேசுவது ரசிக்கும்படியாக இருக்கும்.
தற்கொலை செய்திகளையே விரும்பாத சித்ரா தற்கொலை செய்து கொள்வாரா?.. நண்பர்கள் சந்தேகம்

பெரிய பாப்பா
ஏற்கெனவே சின்ன பாப்பா, பெரிய பாப்பா சீரியலில் பெரிய பாப்பாவாக இவர் நடித்து காமெடியை கொட்டியிருப்பார். இந்த நிலையில் போலீஸ் அதிகாரியின் மகளான சித்ரா இன்று காலை ஒரு ஹோட்டலில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனால் அந்த சீரியலின் குழுவினர் மிகவும் சோகமாக காட்சியளிக்கிறார்கள்.

வைரல் வீடியோ
இந்த நிலையில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. அதில் கதை கேளு கதை கேளு எனும் நிகழ்ச்சிக்காக அந்த வீட்டின் மூத்த மருமகளான தனம் கதாபாத்திரத்தில் நடித்த சுஜிதா பங்கேற்றிருந்தார். அவர் பாண்டியன் ஸ்டோர்ஸ் வீடு எப்படி இருக்கிறது என்பதை காண்பித்தார்.

பிரகாசம்
சீரியலில் பிரகாசமாக இருக்கும் அந்த வீடு நிஜத்தில் கொஞ்சம் வெளிச்சம் குறைவாகவே இருக்கிறது. ஒவ்வொரு இடமாக சுஜிதா காட்டுகிறார். அதில் ஜீவா- மீனா அறையை காட்டுகிறார், அது ரெடி செய்யப்படாமல் ஷூட்டிங்கிற்கு தயாராகி வருகிறது.

பிரகாசம்
சீரியலில் பிரகாசமாக இருக்கும் அந்த வீடு நிஜத்தில் கொஞ்சம் வெளிச்சம் குறைவாகவே இருக்கிறது. ஒவ்வொரு இடமாக சுஜிதா காட்டுகிறார். அதில் ஜீவா- மீனா அறையை காட்டுகிறார், அது ரெடி செய்யப்படாமல் ஷூட்டிங்கிற்கு தயாராகி வருகிறது.

எட்டி பார்த்த தனம்
அடுத்தது முல்லை- கதிர் அறையை சுஜிதா காட்டுகிறார். அப்போது கதிர், எங்க ரூம்ல என்ன செய்றீங்க என சுஜிதாவிடம் விளையாட்டாக கேட்கிறார். பின்னர் வெளியே வரும் சுஜிதா முல்லை அறையின் ஜன்னலை காண்பிக்கிறார். அப்போது முல்லை எட்டி பார்க்கிறார்.

என்ன சீன்
"எங்க ரூமை ஏன் எட்டி பார்க்கறீங்கனு சிரித்தபடி முல்லை கேட்க, அதற்கு சுஜிதாவோ, நான் தனம் அக்காமா, உள்ளே என்ன நடக்கிறது என கேட்க அதற்கு முல்லை வெட்கப்பட்டு கொண்டே பர்ஸ்ட் நைட் சீன் எடுக்கறாங்கனு சொல்கிறார், அதற்கு சுஜிதா ஓ நடக்கட்டும் நல்லா நடக்கட்டும் என்கிறார்.

திண்ணை
இப்படியாக அந்த வீட்டின் முற்றம், திண்ணை, ஹால், தூண்கள், சமையல் அறை, படுக்கை அறை, தோட்டம் என அனைத்து இடங்களிலும் வலம் வந்த முல்லை என்கிற சித்ராவின் வருகை இனி அந்த வீட்டில் இருக்காது. இதனால் இன்று "பாண்டியன் ஸ்டோர்ஸ்" வீடே அழுது கொண்டிருக்கிறது.