Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

டிவி விவாத நிகழ்வில் செந்தில்வேல் - பாஜக மோதல்! கூட்டம் திரண்டதால் பரபரப்பு.. பாஜக தலைவர்கள் கண்டனம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் நடைபெற்ற டிவி விவாத நிகழ்ச்சியின்போது பாஜகவினர் கிண்டல் செய்து இடையூறு செய்ததால் பாதியில் வெளியேறிய செந்தில்வேல், ஷூட்டிங் நடந்த இடத்துக்கு வெளியே ஏராளமானோரை திரட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்தச் சம்பவத்துக்கு பாஜக தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் சூழலில் அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. இந்நிலையில், டிவி சேனல்கள், அரசியல் பிரபலங்கள், ஒவ்வொரு கட்சியின் பேச்சாளர்களை அழைத்து விவாத நிகழ்ச்சி நடத்தி வருகின்றனர். அந்தவகையில் தனியார் செய்தி தொலைக்காட்சியில் நடைபெற்ற விவாத நிகழ்ச்சியில் மோதல் ஏற்பட்டுள்ளது. தனியார் தொலைக்காட்சியின் விவாத நிகழ்ச்சியில் திமுக எம்.பி தங்க தமிழ்ச்செல்வன் பாஜக நிர்வாகி எஸ்.ஜி.சூர்யா, நாதக நிர்வாகி இடும்பாவனம் கார்த்திக், ஊடகவியலாளர் செந்தில்வேல் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

TV Debate Turns Chaotic in Chennai Senthilvel Walks Out After BJP Mockery Crowd Gathers Outside Studio

சென்னை எழும்பூரில் நேற்று இரவு நடைபெற்ற இந்த விவாத நிகழ்ச்சிக்கான படப்பிடிப்பில், பத்திரிகையாளர் என்ற அடிப்படையில் கலந்துகொண்ட செந்தில்வேல் பேசும்போது பா.ஜ.க.வை சேர்ந்தவர்கள் கிண்டல் செய்து கூச்சலிட்டு இடையூறு செய்ததாகவும், இதனால் நிகழ்ச்சியில் இருந்து பாதியில் வெளியேறிய செந்தில்வேல், படப்பிடிப்பு நடைபெறும் இடத்திற்கு 50க்கு மேற்பட்டோரை திரட்டி வந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. அவர்கள் பாஜக நிர்வாகி எஸ்.ஜி.சூர்யாவுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இந்தச் சம்பவம் தொடர்பாக நயினார் நாகேந்திரன் வெளியிட்ட எக்ஸ் சமூக வலைதள பதிவில், சென்னையில் நடைபெற்ற தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பாஜக மாநில இளைஞரணி தலைவர் எஸ்.ஜி சூர்யா உள்ளிட்டோர் மீது, திமுக ரவுடிகள் நடத்திய தாக்குதல் கடும் கண்டனத்திற்குரியது என தெரிவித்துள்ளார்.

கடந்த நான்கரை ஆண்டுகளாக திமுக ஆட்சியின் கோர முகத்தை கண்ட தமிழக மக்களின் கடுங்கோபத்தை எண்ணி பயம் தொற்றிக் கொண்டதால், திமுக-வினர் இதுபோன்ற வன்முறையை கையில் எடுத்துள்ளதாக தெரிவித்துள்ள அவர், விவாதங்களில் மக்கள் பிரதிநிதிகளாக கேட்கும் நியாயமான கேள்விகளுக்கு கூட, திமுகவினர் வன்முறையை பதிலாக அளிப்பது ஜனநாயகத்தின் குரல்வளையை நெரிப்பதற்கு சமம் என குற்றம் சாட்டியுள்ளார். அத்துடன் தமிழக முதலமைச்சரின் நேரடி கட்டுப்பாட்டில் இருக்கும் காவல்துறை இந்த தாக்குதலுக்கு நிச்சயம் பதில் சொல்லியாக வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை வெளியிட்ட எக்ஸ் பதிவில், "பகுத்தறிவு மேலோங்கும்போது, திமுக-வினரின் ஒரே பதில் வன்முறை மட்டும் தான். தனியார் தொலைக்காட்சி விவாதத்தின்போது பாஜக மாநில இளைஞரணி தலைவர் எஸ்.ஜி சூர்யா உள்ளிட்டோரை தாக்க, நூற்றுக்கணக்கான திமுக குண்டர்கள் கொடிய ஆயுதங்கள் மற்றும் சோடா பாட்டில்களுடன் அலுவலகத்திற்குள் நுழைந்துள்ளனர்.

அத்துடன் தாக்குதல் நடத்தியவர்களுக்கு உதவும் விதமாக அங்கு மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது அதிர்ச்சியளிக்கிறது. குற்றவாளிகளை கைது செய்வதற்கு பதிலாக திமுக குண்டர்களை பாதுகாக்க காவல்துறை இயந்திரம் அதிக நேரம் வேலை செய்கிறது. சமூக ஊடகங்கள் இல்லாத காலத்தில் கருத்து வேறுபாடுகள் வலுக்கட்டாயமாக அடக்கப்பட்டு, தெருக்களில் பயம் ஆட்சி செய்த திமுக-வின் இருண்ட நாட்களை இந்த சம்பவம் நினைவூட்டுகிறது" எனத் தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+