விஜய்யின் வீட்டுக்குள் குழந்தையின் செருப்பை வீசிய நபர்.. திடீர்னு பஞ்ச் டயலாக் பேசி.. ஒரே பரபரப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: தவெக 2ம் ஆண்டு தொடக்க விழா இன்று மாமல்லபுரத்தில் நடக்க உள்ளது.. இன்னும் சற்று நேரத்தில் இந்த விழா துவங்க உள்ள நிலையில், நடிகர் விஜய் வீட்டில் இளைஞர் ஒருவர் திடீரென காலணி வீசியதால் பரபரப்பு ஏற்பட்டு விட்டது.

வரும் 2026 சட்டசபை தேர்தல் கூட்டணி உட்பட கட்சி தொடர்பாக என்னென்ன செய்ய வேண்டும்? என்பது குறித்தெல்லாம் தொண்டர்கள் மத்தியில் விஜய் பேச உள்ளார்.. அத்துடன், சில முக்கிய அறிவிப்புகளை வெளியிடுவார் என்றும் சொல்கிறார்கள்.

tvk Vijay Tamilaga Vetri Kazhagam

இன்றைய தினம் தவெக ஆண்டு விழாவில், 95 மாவட்ட செயலாளர்கள், துணை செயலாளர்கள், துணை தலைவர்கள், மாவட்ட பொறுப்பாளர்கள் என 600 பேர் கூட்டத்தில் பங்கேற்க உள்ளனர். 2026 சட்டமன்றத் தேர்தல்தான் தங்களின் இலக்கு என அறிவித்த விஜய், அதனை கருத்தில் கொண்டே தனது நகர்வுகளை மேற்கொண்டு வருகிறார்..

தவெக மாவட்டச் செயலாளர்களை அக்கட்சியின் தலைவர் விஜய் மேடையிலே அறிமுகம் செய்ய போவதாக தெரிகிறது. அதுமட்டுமல்ல, மற்ற கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகளும் இணைய உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அப்படி இணையும் பிற கட்சியை சேர்ந்த நிர்வாகிகளுக்கு கட்சியில் பல முக்கிய பொறுப்புகளும் வழங்கப்பட உள்ளதாம். தேர்தல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் இன்றைய நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகிறார்..

கிழக்கு கடற்கரை சாலையில் மாமல்லபுரம் அருகே பூஞ்சேரியிலுள்ள தனியார் விடுதியில் இன்னும் சற்று நேரத்தில் விழா துவங்க உள்ள நிலையில், விஜய் வீட்டில் திடீரென காலணி வீசப்பட்டுள்ளது.. இளைஞர் ஒருவர் விஜய் வீட்டிற்குள் காலணியை வீசியிருக்கிறார்.. ஆண்டு விழாவுக்கு விஜய் கிளம்பி கொண்டிருந்தபோது, இந்த காலணி வீச்சு சம்பவம் நடந்துள்ளது.

விஜய்யின் நீலாங்கரை வீட்டு வாசலில் நின்றுகொண்டு, இந்த காலணியை வீசியதால், அங்கிருந்தவர்கள் இதனை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.. பிறகு, வீட்டில் வீட்டிலிருந்த காவலாளிகள் விரைந்து சென்று, அந்த இளைஞரை அங்கிருந்து அப்புறப்படுத்தினார்கள். விஜய் கட்சியின் ஆண்டுவிழா நோத்தில் இப்படி காலணி வீசப்பட்டுள்ளது, தவெகவுக்குள் பெரும் பரபரப்பை தந்துவிட்டது.

இந்த இளைஞர் திடீரென குழந்தையின் செருப்பை எடுத்து வீசியிருக்கிறார்.. மேலும் செருப்பை வீசிய நபர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பது தெரியவந்துள்ளது. இந்த சிசிடிவி காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதில், அந்த இளைஞர் விஜய் பட வேட்டைக்காரன் டயலாக்கை பேசுகிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+