விஜய் சேதுபதி பொதுவா சொன்னார்.. தவெகவுக்கு ஏன் மூக்கு வேர்க்குது.. சீமான் பங்கம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: கிருஷ்ணகிரி தவெக ஆட்சிக்கு வந்து 5 மாதங்கள் ஆகப்போகிறது. பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி வருகிறார்கள். மின்வெட்டு, குடிநீர் பற்றாக்குறை உள்ளிட்ட பிரச்சனைகள் நிலவுகிறது. பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் கட்டுவது உள்ளிட்ட சர்ச்சைகள் எழுந்துள்ளன. பிக்பாஸில் நடிகர் விஜய் சேதுபதி வைத்த விமர்சனமும் விஜய் மற்றும் தவெகவுக்கு எதிராக அமைந்துள்ளதாக அக்கட்சியினர் கொந்தளிக்கிறார்கள். இந்நிலையில் விஜய் சேதுபதியின் கருத்துக்கு ஆதரவு தெரிவித்து தவெகவை சீமான் விமர்சனம் செய்துள்ளார்.

சென்னையில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், "பட்டினப்பாகத்தில் புதிய தலைமை செயலகம் கட்ட விட மாட்டோம். இது அறிவிப்பாகவே இருக்கும். ஏற்கனவே உள்ள தலைமை செயலகத்தில் என்ன குறை, பிரச்சனை உள்ளது. கருணாநிதி ஓமந்தூரர் மருத்துவமனை செயல்படும் இடத்தில், இதே நோக்கத்துக்காக தான் அன்றைக்கு தலைமை செயலகம் கட்டினார்.

Seeman

1,200 கோடிக்கு அவசியமா

அதுவும் நவீன வசதியுடன் தான் கட்டப்பட்டது. அதை ஜெயலலிதா ஆட்சியில் அதை தலைமை செயலகமாக மாற்றாமல், மருத்துவமனையாக மாற்றினர். அன்றைக்கு மௌனமாக இருந்தது ஏன். சென்னையே போக்குவரத்து நெரிசல் உள்ள நகரம். எங்கு தலைமை செயலகம் கட்டினாலும் நெரிசல் இருக்கத்தான் செய்யும். பட்டிப்பாக்கத்தில் மக்களின் வாழ்விடங்களை அகற்றி கட்ட வேண்டிய அவசியம் என்ன. மக்களின் காசை வீணடிக்கிறார்கள்.

திமுக 600 கோடிக்கு கட்டினால், இவர்கள் 1,200 கோடிக்கு கட்டுவது மாற்றா. திமுக 1,000 கொடுத்தால், இவர்கள் 2,500 கொடுக்கிறோம் என்பது தான் மாற்றா. தேவையில்லாத அச்சத்தை வைத்து மக்கள் போராட வேண்டாம். மக்களை தாய் நிலத்திலேயே அகதியாக்குவது இனியும் நடக்காது. உங்களுக்கு சர்க்கார் பட பதாகையை கிழித்தது தான் பிரச்சனை. மேகமலையிலும், பட்டினப்பாக்கத்திலும் மக்கள் வாழ்வாதாரத்தை இழப்பது பிரச்சனையாக தெரியவில்லை.

அவதூறு ஏன்

சென்னை மீனாம்பாக்கம் விமான நிலையமே போதுமானது. எதற்காக இன்னொரு விமான நிலையம் கட்ட முயற்சி செய்கிறார்கள். தேவைப்பட்டால் ஓமந்தூரார் மருத்துவமனையை வேறு இடத்திற்கு மாற்றிவிட்டு, அந்த இடத்தில் தலைமை செயலகம் செயல்படலாம். 13.5 லட்சம் கோடி கடன் இருப்பதாக உங்கள் வெள்ளை அறிக்கையில் தானே சொல்லப்பட்டுள்ளது. இந்த நிலையில் உங்களிடம் யார் தலைமை செயலகம் கட்ட கேட்டார்கள்.

அரசியல் தெரிந்து விமர்சிப்பவர்களிடம் பேசலாம். அவதூறு பரப்புவோரிடம் எதுவும் பேச முடியாது. ஒரு தலைவர் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு உலகம் முழுவதும் ஒரு கோட்பாடு உள்ளது. விஜய் சேதுபதி சொன்னது ஏன் கடந்த கால ஆட்சியாளர்களை சாராதா. அதற்கு முன்பிருந்தோரை எல்லாம் சாராதா. அவர் முன் வைத்திருப்பது ஒரு பொதுவான கருத்து. இந்த கருத்தை, வைய தலைமைகொள் என்ற புத்தகத்தில் ஐயா இறையன்பு எழுதியுள்ளார்.

விஜய் சேதுபதிக்கு ஆதரவா

அதைத்தம்பி விஜய் சேதுபதி பதிவு செய்துள்ளார். அது ஒரு பொதுவான கருத்து. அதை ஒரு குறிப்பிட்ட நபருடன் பொருத்தி பிரச்சனை செய்வது அவசியமற்றது. நீங்கள் ஏன் உங்களை தான் சொல்கிறார் என நினைக்க வேண்டும். அப்படியென்றால் அவர் சொல்வது போல, பிரச்சனைகளை எதிர்கொள்ளாமல் ஓடுகிறீர்கள் என்று ஏற்று கொள்ளலாமா. நீங்கள் அப்படி நினைத்தால் அதற்கு யாரும் எதுவும் செய்ய முடியாது" என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+