ஸ்டாலினை வீழ்த்திய தவெக வேட்பாளர் விஎஸ் பாபு.. கொளத்தூரில் கொடுத்த பரபரப்பு பேட்டி
சென்னை: கொளத்தூர் தொகுதியில் தவெக சார்பில் போட்டியிட்ட விஎஸ் பாபு, முதல்வர் ஸ்டாலினை 9 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். இதையடுத்து வெற்றி பெற்றதற்கான சான்றிதழை வாங்கிய விஎஸ் பாபு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
தமிழக வெற்றிக் கழகம் 233 தொகுதிகளில் தனித்து போட்டியிட்டது. விஜய் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கில் போட்டியிட்டார். இரண்டு தொகுதியிலும் அவர் வெற்றி பெற்றுள்ளார். மொத்தமாக 108 இடங்களில் விஜய் கட்சி வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

விஎஸ் பாபு பேட்டி
திமுக அமைச்சர்கள் பலர் இந்த தேர்தலில் தோல்வியடைந்துள்ளனர். குறிப்பாக சென்னையில் துறைமுகம், சேப்பாக்கம் - திருவல்லிக்கேனி ஆகிய இரண்டு தொகுதிகளை தவிர மற்ற அனைத்து தொகுதிகளிலும் விஜய்யின் தவெக வெற்றி பெற்றது. குறிப்பாக முதல்வர் ஸ்டாலினின் சொந்த தொகுதியான கொளத்தூரிலும் தவெக வெற்றி பெற்றுள்ளது.
10 ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடர்ந்து கொளத்தூர் தொகுதியில் வெற்றி பெற்று இருந்த முதல்வர் ஸ்டாலின் இந்த முறை விஜய்யின் தவெக வேட்பாளரான வி.எஸ். பாபுவிடம் தோல்வியை சந்தித்துள்ளார். இது திமுகவினருக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. இந்த நிலையில் வெற்றி சான்றிதழை பெற்ற வி எஸ் பாபு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
விஜய் தான் காரணம்
"எல்லாமே எங்க தலைவர் தான் முடிவு செய்வார்.. எல்லாமே அவர் தான்.. தொண்டனாக நாங்கள் இருந்து அவர் கை காட்டும் வழியில் செல்வோம்.." என்றார். அப்போது, முதல்வர் ஸ்டாலினையே தோற்கடித்துவிட்டீங்க.. இதை எப்படி பார்க்கிறீங்க.. வெற்றிக்கு என்ன காரணம் என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த விஎஸ் பாபு கூறியதாவது:-
எல்லா புகழும் தளபதி விஜய்க்கே.. வெற்றியை பெற்றது நான் அல்ல.. எங்களுடைய தளபதி.. எங்களுடைய தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தான் வெற்றி பெற்றது.. நான் கிடையாது. எல்லாத்துக்கும் விஜய் தான் காரணம். இவ்வளவு தொகுதிகளில் வெற்றி பெறுவதற்கு தளபதி விஜய் மட்டுமே காரணம்.
ஒரு பைசா தொட மாட்டேன்
முழு வெற்றிக்கு அவர் தான் காரணம்.. எங்க தொகுதி மக்களுக்கு என்னென்ன வசதிகளை செய்து கொடுக்க வேண்டுமோ அது எல்லாத்தையும் எங்க தளபதி செய்வார். விஜய் சொல்லியிருக்கிறார், ஒரு பைசா கூட ஊழல் செய்ய மாட்டேன் என்று.. ஒரு பைசா தொடமாட்டேன் என சொல்லியிருக்கிறார்..
அதே மாதிரி தான் நானும் அவரது தொண்டனாக நானும் ஊழல் செய்ய மாட்டேன்.. அவரைப்போலவே கொளத்தூர் மக்களுக்காக நான் வேலை செய்வேன்.. நான் வெளியேற்றப்படவில்லை. நான் தான் வெளியேறினேன்.. நானே மாவட்ட செயலாளர் பதவியில் இருந்து ராஜினாமா செய்தேன்.." என்றார்.














Click it and Unblock the Notifications