2026ல் மாறும் கூட்டணி கணக்குகள்? ராகுலுடன் கைகோர்க்கும் விஜய்! காங்கிரஸ் தவெக கூட்டணி கன்பாஃர்ம்?
சென்னை: நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் (தவெக) விரைவில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைக்கப்போகிறது என்ற தகவல் தற்போது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தவெக நிர்வாகிகள் சிலரை காங்கிரஸ் கட்சியினர் சந்தித்து பேசியிருப்பதாகவும், விரைவில் ராகுல் காந்தியையும் நேரில் சந்திக்கத் திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. நவம்பர் மாதத்தின் கடைசி வாரத்தில் இந்த சந்திப்பு நடைபெற வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
தவெகவை தொடங்கியதில் இருந்தே அக்கட்சியின் தலைவரும் நடிகருமான விஜய் கூட்டணிக்கான கதவுகளை திறந்தே வைத்துள்ளார். குறிப்பாக, காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி சேர்வது விஜயின் தனிப்பட்ட விருப்பமாக இருப்பதாக கட்சித் தரப்பில் கூறப்படுகிறது.

இதற்கு ராகுல்காந்தி உடனான நீண்ட கால நட்பு முக்கிய காரணம் என சொல்லப்படுகிறது முன்னதாக கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தின் போது ராகுல் காந்தி விஜயுடன் தொலைபேசி மூலம் பேசி ஆறுதல் கூறியிருந்தார். அதன் பிறகு இரு தரப்பினரிடையிலும் அரசியல் புரிதல் உருவாகியுள்ளதாகக் கூறப்படுகிறது.
விஜய் - காங்கிரஸ் கூட்டணி
அதே சமயம், காங்கிரஸ் கட்சியும் தற்போது ஆட்சியில் பங்கு என்ற கோஷத்துடன் புதிய கூட்டணி வாய்ப்புகளை ஆராய்ந்து வருகிறது. திமுக கூட்டணியில் தொடர்ந்து குறைவான தொகுதிகள் மட்டுமே கிடைக்கின்றன என்ற அதிருப்தி காங்கிரஸ் தரப்பில் அதிகரித்துள்ளது. 2011 தேர்தலில் காங்கிரஸ் கட்சி 63 தொகுதிகளில் போட்டியிட்டது. ஆனால் 2021 தேர்தலில் வெறும் 25 தொகுதிகளில் மட்டுமே போட்டியிட்டது. இந்த நிலையில் வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் அதிக இடங்களை எதிர்பார்க்கிறது.
தவெக காங்கிரஸ் பேச்சு
திமுக கூடுதல் இடங்களை ஒதுக்கவில்லை என்றால், சில காங்கிரஸ் தலைவர்கள் தவெக கூட்டணி என்ற முழக்கத்தை முன்னெடுக்கலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. காங்கிரஸ் கட்சியின் தேசிய பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் கூடுதல் தொகுதிகள் வேண்டும் என திமுக தலைமையிடம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். இதற்காக அவர் 'ஒரு முக்கிய நிர்வாகி' மூலம் விஜய் மற்றும் தவெக நிர்வாகிகளிடம் தனிப்பட்ட்ட முறையில் பேசியதாக கூறப்படுகிறது.
ராகுல் விஜய் சந்திப்பு
இந்த முயற்சி குறித்து ராகுல் காந்தியும் பிரியங்கா காந்தியும் ஆலோசனை நடத்தியதாகவும் கூறப்படுகிறது. பீகார் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு தமிழகத்தில் கூட்டணி விவகாரம் குறித்து முடிவு எடுக்கலாம் என ராகுல் கூறியுள்ளதாகத் தகவல். முதல்வர் ஸ்டாலினுடன் ராகுல் காந்தியின் நட்பு உறவை கருத்தில் கொண்டால், காங்கிரஸ் உடனடியாக திமுக கூட்டணியைவிட்டு வெளியேறும் வாய்ப்பு குறைவு என்றே அரசியல் வட்டாரங்கள் கருதுகின்றன.
காங்கிரஸ் புதிய கூட்டணி
ஆனால், சில மாநிலத் தலைவர்கள் விஜயுடன் கூட்டணி அமைக்கத் தயாராக இருப்பதாகவும் கூறப்படுகிறது. விஜய் தலைமையிலான தவெக கட்சி, 2026 தேர்தலில் குறைந்தபட்சம் காங்கிரசுக்கு 60 தொகுதிகளை தருவதாகவும், துணை முதலமைச்சர் பதவி, ஆட்சியில் பங்கு தர விருப்பம் தெரிவித்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. திமுக கூட்டணியில் இருந்தால் குறைந்த இடங்கள் மட்டுமே கிடைக்கும். ஆனால் தவெக உடன் இணைந்தால் ஆட்சியில் பங்கு என புதிய கதவுகள் திறக்கும் என காங்கிரஸ் தலைவர்கள் கருதுகின்றனர். விஜயின் பிரபலம் வாக்கு வங்கியாக மாறும் என்ற நம்பிக்கையும் அவர்களிடம் உள்ளது.
காங்கிரஸ் திமுக கூட்டணி
அதே சமயம், திமுகவும் மாற்று ஏற்பாடுகளை ஆராய்ந்து வருகிறது. காங்கிரஸ் சென்றால், தேமுதிக, ராமதாஸ், கருணாஸ், தமீமுன் அன்சாரி உள்ளிட்ட கட்சிகளை கூட்டணியில் சேர்த்து தேர்தலைச் சந்திக்கலாம் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், பீகார் தேர்தல் முடிந்ததும், தமிழக அரசியலில் பெரிய மாற்றங்கள் நிகழும் என அரசியல் விமர்சகர்கள் கணிக்கின்றனர். தவெக - காங்கிரஸ் கூட்டணி நடந்தால், அது 2026 தேர்தலை முற்றிலும் மாற்றி அமைக்கும் என கூறப்படுகிறது. ஆனால், ராகுல் திமுகவை விடுத்து தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணி சேர்வாரா? என்பதே மிகப் பெரிய கேள்வி தான்.!
-
கேலிக்குள்ளான அமித்ஷாவுக்கு தவெக எழுதியதாக பரவும் கடிதம்.. ராஜ்மோகன் விளக்கம் -
10 சீட்டுகளை வெல்லும் தவெக.. 23.9 சதவிகித வாக்குகளை கைப்பற்றும் விஜய்.. லோக்போல் கருத்துக்கணிப்பு -
கொங்கு மண்டல பிரச்சாரத்தின் போது செங்கோட்டையன் வீட்டில் தங்கும் விஜய்.. புலம்பும் ஆதவ் அர்ஜுனா! -
விஜய்க்கு பாதுகாப்பு கொடுங்க.. மத்திய அரசுக்கு பதில் மணிப்பூர் ஆளுநருக்கு கடிதம் எழுதிய தவெக! -
கழுத்தில் இருந்த விசிலை பிடுங்கி வீசிய அதிமுக நிர்வாகி! திருப்பூர் அருகே கூட்டத்தில் பரபரப்பு! -
விஜய் பற்றி என்னால் தப்பா பேச முடியாது.. ஏனென்றால்? ஓபனாக பேசிய சுந்தர் சி.. பாராட்டும் தவெக ரசிகர்கள் -
அதிமுகவுக்கு ஆப்பு வைக்கப் போறாரு விஜய்! இப்பவே உஷாராவது நல்லது! அடித்துச் சொல்லும் ஜெ.வின் நிழல்! -
நீட் கோச்சிங் கொடுக்கும் பள்ளிக்கு.. ரூ.20 கோடி கடன் கொடுத்த விஜய்? வெளியான ஷாக் தகவல்! -
விஜய் செல்வாக்கு + பதவி.. திருமாவளவன் மாநில அரசியலுக்கு திரும்புவதற்கு பின்னணியில் 2 காரணங்கள்! -
விஜய் சினிமாவை விட்டு விலக உண்மையான காரணம் இதுதான்! நேரடியாகவே சொன்னாரு! நடிகர் ஷியாம் ஓபன் -
என்னது வாக்காளர்கள் பணம் வாங்கணுமா.. உளறி கொட்டிய விஜய்.. சிபிஐ வீரபாண்டியன் புகாரால் தவெக ஷாக் -
’ஆங்கிலோ இந்தியர்கள்’ நண்பரான விஜய் - பெரம்பூர் தொகுதி ஸ்பெஷல் தெரியுமா?












Click it and Unblock the Notifications