“இன்னும் டைம் இருக்கு..” தவெக சார்பில் போட்டியிட விருப்ப மனு சமர்ப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு!
சென்னை: தவெக சார்பில் வேட்பாளராகப் போட்டியிடுவதற்கான விருப்ப மனுவைச் சமர்ப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டு உள்ளதாக தவெக பொதுச்செயலாளர் என் ஆனந்த் அறிவித்துள்ளார். இன்றுடன் அவகாசம் நிறைவடைய இருந்த நிலையில் பிப்ரவரி 20 வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
தமிழக சட்டமன்ற தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இந்த நிலையில் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் சார்பில் தேர்தலில் போட்டியிட விரும்புவோருக்கு, சென்னை பனையூரில் உள்ள தவெக தலைமை அலுவலகத்தில் விருப்ப மனு கடந்த 6 ஆம் தேதி முதல் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. விருப்ப மனுக்களை பெற்று அதில் கேட்கப்பட்டுள்ள விவரங்களை முழுமையாக பூர்த்தி செய்து உரிய ஆவணங்களுடன் அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

முதல் நாளன்றே ஆயிரக்கணக்கான தவெகவினர் பனையூர் அலுவலகத்தில் குவிந்தனர். பனையூர் அலுவலகத்திற்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட தவெக நிர்வாகிகள் வந்ததால் அங்கு பெரும் கூட்டம் கூடியது. இதனால், அப்பகுதி பொதுமக்கள் தவெக அலுவலகம் முன்பாக வந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் தவெக தலைமை அலுவலக பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து, விருப்ப மனுக்களைப் பெறுவதற்காக யாரும் தலைமை நிலையச் செயலகத்திற்கு வர வேண்டாம் என தவெக தலைமை அறிவித்தது. ஆன்லைனில் விருப்ப மனுவை டவுன்லோடு செய்து, பூர்த்தி செய்து, பிப்ரவரி 14 ஆம் தேதிக்கு கொரியர், தபால் அல்லது நேரில் அளிக்கலாம் என அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், தவெக சார்பில் வேட்பாளராகப் போட்டியிடுவதற்கான விருப்ப மனுவைச் சமர்ப்பிக்கக் கால அவகாசம் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதாக தவெக பொதுச்செயலாளர் என் ஆனந்த் அறிவித்துள்ளார். இன்றுடன் அவகாசம் நிறைவடைய இருந்த நிலையில் பிப்ரவரி 20 வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
தவெக பொதுச் செயலாளர் என்.ஆனந்த் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “வரும் சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் 234 சட்டமன்றத் தொகுதிகளிலும் வேட்பாளராகப் போட்டியிட விரும்பும் கழகத் தோழர்கள் தங்களுக்கான விருப்ப மனுவைப் பெறுவதற்கும் அதனைச் சமர்ப்பிப்பதற்குமான கடைசித் தேதி இன்று (14.02.2026) என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், கழகத்தின் பல்வேறு நிகழ்ச்சிகள் காரணமாக, வழங்கப்பட்ட கால அவகாசத்திற்குள் பெரும்பாலான கழகத் தோழர்களால் விருப்ப மனுவைச் சமர்ப்பிக்க முடியாமல் போனதாகத் தெரிவித்து வருகின்றனர். எனவே தோழர்களின் வேண்டுகோளுக்கு இணங்க, விருப்ப மனுவைப் பூர்த்தி செய்து அளிப்பதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்படுகிறது.
அதன்படி, வரும் 20 ஆம் தேதி (20.02.2026) வரை கழகத் தோழர்கள் தங்களது விருப்ப மனுவைத் தலைமை நிலையச் செயலகத்தில் சமர்ப்பிக்கலாம். விருப்ப மனுக்களைச் சமர்ப்பிக்க அதுவே கடைசி நாள் ஆகும். கழகத் தலைவர் அவர்களின் ஒப்புதலின் பேரில் இந்த அறிவிப்பு வெளியிடப்படுகிறது.” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
முதல்வர் விஜய் டெல்லி போக காரணமே இதுதானே.. உடைத்து பேசிய ஸ்டாலின்! ஸ்டன் ஆன தவெகவினர்! -
பனையூர் பக்கம் திரும்பும் ரராக்கள்.. காலியாகும் அதிமுக கூடாரம்? எடப்பாடி பழனிசாமி முக்கிய மீட்டிங்! -
50+ வீடியோ.. சேலம் மணிகண்டன்.. சிபிஎம், டிடிவி தினகரன் விஜய்க்கு வைத்த கோரிக்கை -
"டாஸ்மாக் கடைகளில் MRP-ஐ மீறி 1 ரூபாய் கூட வாங்க கூடாது.. தவறு செய்தால் டிஸ்மிஸ்”.. அமைச்சர் அதிரடி! -
தீர்ந்து போன சக்தியிடம் திருடிய காஞ்சு போன சக்தி.. விமர்சித்த ஸ்டாலின்.. தவெக கொடுத்த பதிலடி -
"சிங்கப்பெண் ரீல்ஸ் ஒருபக்கம்.. சீரழிக்கும் தவெக கட்சியினர் மறுபக்கம்”.. திமுக சரமாரி அட்டாக்! -
தமிழ்நாட்டில் ஹையோசங் டிஎன்எஸ் புதிய தொழிற்சாலை.. ஏடிஎம் உற்பத்திக்கு திட்டம்! -
“எந்த ரீல்ஸ் மூலம் தவெக வென்றதோ அதன் மூலமே நாமும் வெற்றி பெறுவோம்”.. அதிமுகவினருக்கு எடப்பாடி ஆர்டர் -
பாட்டிலுக்கு ரூ.10 வாங்கினால் அடுத்த நாள் பணியில் இருக்க முடியாது.. அமைச்சர் விக்னேஷ் எச்சரிக்கை -
ஆபரேஷன் இரட்டை இலை.. மாவட்ட வாரியாக அதிமுக தொண்டர்களை இழுக்கும் தவெக.. பனையூர் வியூகம்! -
பொண்ணு கிடைச்சாலும்.. புதன் கிடைக்காது! அரசியல் என்ட்ரி கொடுக்கும் ராகவா லாரன்ஸ்! தவெகவில் ஐக்கியம்? -
செல்போனில் பல பெண்களின் ஆபாச வீடியோ.. பெண்களை ஏமாற்றி வீடியோ எடுத்து மிரட்டிய தவெக பிரமுகர் கைது!












Click it and Unblock the Notifications