Jananayagan: "இதை எப்படி சாப்பிடுறது?" மலேசியா ஹோட்டலில் டீசர்ட்டுடன் chill செய்யும் புஸ்ஸி ஆனந்த்
கோலாலம்பூர்: மலேசியாவில் "ஜனநாயகன்" இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ள சென்ற தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் அங்குள்ள ஒரு உணவுக் கடையில் அமர்ந்து சில் செய்யும் புகைப்படம் வைரலாகி வருகிறது.

எப்போதும் வெள்ளை நிற சட்டை, பேண்ட் அணியும் வழக்கத்தை கொண்ட புஸ்ஸி, தற்போது மலேசியாவில் கலர்ஃபுல்லாக ஆடைகளை அணிந்து வருவதால் அவரது ஆதரவாளர்கள் ஆரவாரம் செய்து வருகிறார்கள்.
புதுவையில் புஸ்ஸி தொகுதியில் போட்டியிட்டு வென்றதால் ஆனந்த், புஸ்ஸி ஆனந்த் என அழைக்கப்படுகிறார். இவர் புதுவை காங்கிரஸ் கட்சியின் முன்னாள் அமைச்சர் அஷ்ரப்பின் உதவியாளராக இருந்தார்.
இந்த நிலையில் புதுவையில் விஜய் ரசிகர் மன்றத்தின் கவுரவத் தலைவராக இருந்த புஸ்ஸி ஆனந்த், பிறகு தலைவராக மாறினார். 2006 ஆம் ஆண்டு நடந்த புதுவை சட்டசபை தேர்தலில் புஸ்ஸி தொகுதியில் புதுச்சேரி முன்னேற்றக் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வென்றார். அதன் பிறகு 2011, 2016 ஆகிய தேர்தல்களில் உப்பளம் தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார்.
இதையடுத்து ஆனந்த், அகில இந்திய விஜய் ரசிகர் மன்ற பொறுப்பாளரானார். பின்னர் விஜய் தொடங்கிய அரசியல் கட்சியான தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச் செயலாளராக தற்போது செயல்பட்டு வருகிறார்.
விஜய்க்கு மிகவும் நெருக்கமானவராக மாறியுள்ள புஸ்ஸி ஆனந்த், கட்சியை தனது கட்டுக்குள் வைத்திருப்பதாகவே பலர் சொல்கிறார்கள். இவரை மீறி விஜய்யை பார்க்க கூட முடியாது என்கிறார்கள்.
விஜய்க்கு பல்வேறு ஆலோசனை இவர்தான் வழங்கி வந்தாராம். இந்த நிலையில் இவர் விஜய்யின் கடைசி படம் என கூறப்படும் "ஜனநாயகன்" படத்தில் ஒரு ரோலில் நடித்திருப்பதாக சொல்லப்படுகிறது.
ஜனநாயகன் படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று மலேசியாவில் நடைபெறுகிறது. இதற்காக நேற்றைய தினம் விஜய் மலேசியா புறப்பட்டுச் சென்றார். அது போல் இயக்குநர் அட்லி, நடிகைகள் பூஜா ஹெக்டே, பிரியாமணி, நடிகர் நாசர், விஜய்யின் தாய் தந்தை உள்ளிட்டோரும் மலேசியா சென்றுள்ளனர்.
அந்த வகையில் தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்தும் மலேசியா சென்றுள்ளார். அவர் அங்கு லைட் காவி நிறத்தில் உடை அணிந்து கொண்டு சென்றிருந்தார். அவருக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
அது போல் புஸ்ஸி ஆனந்த் அங்குள்ள ஹோட்டலில் சில் செய்யும் புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன. ஏதோ ஒரு உணவை அவர் பார்த்துக் கொண்டிருக்கும் புகைப்படமும், நீல நிற டீசர்ட் அணிந்து கொண்டு சேரில் அமர்ந்து கொண்டு போஸ் கொடுத்துள்ளார். புஸ்ஸியை வண்ண நிற உடைகளில் பார்த்த ரசிகர்கள் ஆரவாரம் செய்து வருகிறார்கள். சோசியலிலும் அதிகமாக ஷேர் செய்து வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications