TVK Vijay: வருத்தம் தெரிவித்த தவெக தலைவர் விஜய்.. மீண்டும் பெரம்பலூர் வருவேன் என உறுதி!
சென்னை: திருச்சி, அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் நேற்று பிரச்சாரத்தை தொடங்கினார் விஜய். கட்சித் தொண்டர்களின் கடுமையான நெரிசல் காரணமாக, விஜய்யின் பிரச்சார வாகனம் ஊர்ந்து ஊர்ந்து சென்றதால், திட்டமிட்ட நேரத்தில் அவரால் பிரச்சாரம் மேற்கொள்ள முடியவில்லை. இதனால் பெரம்பலூர் பிரச்சாரம் ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில், பெரம்பலூர் மக்களிடம் வருத்தம் தெரிவித்துள்ளார் தவெக தலைவர் விஜய்.
நேற்று நள்ளிரவு கடந்தும் பெரம்பலூரில் நம்மைச் சந்திக்கக் கூடி இருந்த பல்லாயிரக்கணக்கான நம் உறவுகளைக் காண இயலாத ஒரு சூழல் ஏற்பட்டது. பெரம்பலூர் மக்களிடம் என்னுடைய வருத்தத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன். நிச்சயமாக உங்களைச் சந்திக்க, மீண்டும் வருவேன் எனத் தெரிவித்துள்ளார் விஜய்.

விஜய் வருத்தம்
விஜய் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், " "வாகை சூடும் வரலாறு திரும்புகிறது; உங்க விஜய் நான் வரேன்" எனும் நமது மக்கள் சந்திப்புப் பயணம், தித்திப்புடன் திருச்சியில் நேற்று தொடங்கியது. தொடர்ந்து நம் மக்கள் சந்திப்பானது அரியலூர், குன்னம் வரை நீண்டது. அனைத்து இடங்களிலும் மக்களின் தன்னெழுச்சியான பேரன்பும் பேராதரவும் மனம் நெகிழச் செய்தது. உங்கள் அனைவருக்கும் கோடானு கோடி நன்றி.
இத்துணை உணர்வு மிக்க மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகள் சார்ந்த பல்வேறு பணிகளை மேற்கொண்ட நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களான மாவட்டப் பொறுப்பாளர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியினை உரித்தாக்குகின்றேன். வழிநெடுக மிக நீண்ட தூரம் கூடியிருந்த மக்கள் திரளைக் கடந்து செல்லவே இயலாத நிலையால், நேற்று நள்ளிரவு கடந்தும் பெரம்பலூரில் நம்மைச் சந்திக்கக் கூடி இருந்த பல்லாயிரக்கணக்கான நம் உறவுகளைக் காண இயலாத ஒரு சூழல் ஏற்பட்டது.
பெரம்பலூருக்கு மீண்டும் வருவேன் - விஜய்
எனவே அனைவரது நலன் கருதி, மிகுந்த மன வருத்தத்துடன், மீண்டும் இன்னொரு நாள் பெரம்பலூர் வருவதென முடிவெடுக்க வேண்டிய நிலை உண்டானது. பேரன்பு கொண்டு காத்திருந்த பெரம்பலூர் மக்களிடம் என்னுடைய வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். நிச்சயமாக உங்களைச் சந்திக்க, மீண்டும் வருவேன்" எனத் தெரிவித்துள்ளார்.
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தனது மக்கள் சந்திப்பு பயணத்தை நேற்று (சனிக்கிழமை) தொடங்கினார். திருச்சியில் இருந்து மக்கள் சந்திப்பு பிரசாரத்தை தொடங்கிய விஜய், தொடர்ந்து டிசம்பர் மாதம் வரை குறிப்பிட்ட கால இடைவெளியில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் அவர் மக்கள் சந்திப்பை நடத்துகிறார். இதற்காக நேற்று தனி விமானம் மூலம் விஜய் திருச்சி வந்தார்.
திருச்சியில் விஜய்
திருச்சி விமான நிலையத்தில் இருந்து டோல்கேட் கடந்து காந்தி மார்க்கெட் மரக்கடை பகுதி வரை விஜய் பிரசார பேருந்தில் வந்தார். சில நிமிடங்களில் சென்று விடும் தூரத்தை, அதாவது 7 கி.மீ. தூரத்தை 5 மணி நேரம் கடந்து விஜய் வந்தார். வழி நெடுக தொண்டர்கள் கூட்டம் அலைமோதியது. எங்கு பார்த்தாலும் மனிதத் தலைகளாக இருந்ததால் விஜய்யின் பிரசார வாகனம் ஊர்ந்து சென்றது.
தொண்டர்கள் வெள்ளத்தில் விஜய்யின் பிரசார வாகனம் மெதுவாக ஊர்ந்து வந்ததால், மதியம் 2.30 மணிக்குத்தான் பிரசார இடமான காந்தி மார்க்கெட் எம்.ஜி.ஆர். சிலை அருகே வந்தது. அங்கு பேசிய விஜய், பின்னர் அடுத்த பாயிண்ட் அரியலூர் நோக்கி புறப்பட்டார். அங்கும் விஜய்யை காண ஆயிரக்கணக்கான தொண்டர்கள் கூடியிருந்தனர். விஜய்யின் வாகனத்தை தொண்டர்கள் இருசக்கர வாகனங்களில் பின்தொடர்ந்தனர்.
தவெக தொண்டர்களால் தாமதம்
இதனால், அரியலூர் பிரசாரமும் தாமதமானது. நண்பகல் 12 மணிக்கு திட்டமிட்டு இருந்த பிரசாரம் இரவு 8 மணிக்கு மேல்தான் நடைபெற்றது. அரியலூர் பிரசாரத்தை முடித்துவிட்டு விஜய் குன்னம் வருகை தந்தார். குன்னம் பகுதியிலும் கூட்டம் அதிகமாக இருந்தது. நேரம் கடந்துவிட்டதால் விஜய் பேசாமல் கைகளை மட்டும் அசைத்தபடி சென்றார்.
பெரம்பலூரில் பேச தவெக தலைவர் விஜய் திட்டமிட்டிருந்த நிலையில், நள்ளிரவுக்கு மேல் ஆனதால் அவரால் அங்கு செல்ல முடியவில்லை. 2 கிலோ மீட்டர் தொலைவிற்கு தொண்டர்கள் கூட்டம் இருந்ததால், பெரம்பலூர் பிரச்சாரம் ரத்து செய்யப்பட்டது. விஜய் வாகனம் பெரம்பலூருக்குள் செல்லாமல் சென்னை நோக்கிப் புறப்பட்டு சென்றது. இதனால், பல மணி நேரமாக விஜய்யை காண காத்துக்கிடந்த தவெக தொண்டர்கள் பெரும் ஏமாற்றம் அடைந்தனர். இந்நிலையில் தான் அவர்களிடம் வருத்தம் தெரிவித்துள்ளார் விஜய்.
-
டிஜிபி அலுவலகத்துக்கு நேரில் போன விஜய்.. பொன்ராஜ் மீது கடும் நடவடிக்கை எடுக்க கோரி புகார் மனு! -
தேதி குறிச்சாச்சு.. மேடையேறும் விஜய்.. மாமல்லபுரத்தில் தவெக வேட்பாளர் அறிமுக கூட்டம் -
விஜய்- திரிஷா பற்றி அப்படி பேச காரணமே இதுதான்! வீடியோவுக்கு பின்னாடி இருந்த சம்பவம்! சமுத்திரக்கனி விளக்கம் -
பெண்கள் குறித்த பொன்ராஜ் பேச்சுக்கு விஜய் கடும் கண்டனம்.. திமுகவையும் காட்டமாக விமர்சித்த விஜய்! -
விஜய் ஒரு பச்சைத் தமிழர் தான்.. ஆனால் தவெக உடன் கூட்டணி அமைக்க வாய்ப்பில்லை.. வேல்முருகன் அறிவிப்பு! -
தலைமை செயலகத்திற்கு திடீர் விசிட் வந்த செங்கோட்டையன்.. தேர்தல் அதிகாரியிடம் மனு -
விஜய்க்கு இனிமே தொல்லைகள் அதிகமாக வரும்.. அவங்க வீட்டுக்குள் நடந்த சம்பவம்! நடிகர் ராமராஜன் ஓபன் -
"கோடம்பாக்கம் ஏரியா.. ஓட்டு கேட்டு வரியா".. விஜய் பாடலுக்கு நடனமாடிய அரசு பள்ளி தலைமையாசிரியை.. இப்போ வேலை போச்சே -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
வடக்கில் தொடங்கும் விஜய்.. பெரம்பூரில் மாஸ் காட்ட பலே ப்ளான்! 2026ல் கைகொடுக்குமா? திடீர் கோரிக்கை! -
பெரம்பூர் தொகுதி பாமகவுக்கு ஒதுக்கப்பட்டது விஜய்க்கு சாதகமா? கள நிலவரம் என்ன? டேட்டாவை பாருங்க -
விஜய்க்கு பெண் இனத்தில் மன்னிப்பே கிடையாது.. பெற்றோர், மனைவிக்கு இப்படியா செய்வாங்க? நிர்மலா பெரியசாமி ஆதங்கம்












Click it and Unblock the Notifications